ஒட்டுமொத்த சோகத்தையும் மறந்து குஷியான ரொனால்டோ.. இப்படி ஒரு மனைவி கிடைச்சா வாழ்க்கைல சோகம் என்பதே இருக்காது!
2022 வேர்ல்டு கப் கால்பந்து போட்டியில் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவிற்கு அநீதி இழைக்கப்பட்டது என்றே கூறலாம். கடந்த காலத்தின் மோசமான அணுகுமுறையைக் காரணம் காட்டி சுவிட்சர்லாந்து மற்றும் மொரோக்கிவிற்கு எதிராக நடைபெற்ற போட்டிகளின்போது களத்தில் இறக்கப்படாமல் அவர் பெஞ்சிலேயே அமர்த்தி வைக்கப்பட்டார்.
உலகம் முழுவதும் அதிக ரசகிர்களைக் கொண்டிருக்கும் ரொனோல்டோவிற்கு ஏற்பட்ட இந்த நிலை ஒட்டுமொத்த கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்த அநீதிக்கு பின்னால் மிக பெரிய சதி இருப்பதாக உலக தலைவர்கள் சிலரும், அவரின் ரசிகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதைத் தாண்டி மிகப் பெரிய அதிர்ச்சியாக ரொனால்டோவிற்கு அவரது கனவு நிறைவேறாமல் போனது அமைந்தது. இந்த உலக கோப்பை போட்டியில் போர்ச்சுகலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே அவருடையே கனவாக இருந்தது.

ஆனால், அணி வெற்றி பெறாமல் களத்தை விட்டு வெளியேறியது. இதனால் மைதானத்தை விட்டு வெளியேறியபோது மிகுந்த கண்ணீருடன் அவர் வெளியேறினார். திரையில் இது காட்சிப்படுத்தப்பட்டபோது ஒட்டுமொத்த கால்பந்தாட்ட ரசிகர்களின் கண்களிலும் கண்ணீர் வர வைத்தது. இந்த மாதிரியான சூழலிலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோவை தேத்தும் விதமாக அவரது மனைவி விலை உயர்ந்த பரிசு பொருளை வழங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸ் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி உள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் ஒன்றான பேந்தம் டிராப் ஹெட் ரக கார் மாடலையே அவர் பரிசாக வழங்கி உள்ளார். இந்தியாவில் இந்த கார் ரூ. 8 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரையே ரொனால்டோவிற்கு அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸ் பரிசாக வழங்கி உள்ளார்.

இந்த செயல் ரொனால்டோவிற்கு ஏற்பட்ட மன கசப்பிற்கான மருந்தாக அமைந்துள்ளது. உலக கோப்பை கால்பந்தாட்டம் போட்டியின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இப்போது அவரை வறுத்தும் ஓர் சம்பவமாகவே உள்ளது. இந்த நிலையிலேயே இதை மழுங்கடிக்க செய்யும் வகையில் அவரது மனைவி செல்வந்தர்களின் பிரியமான கார் மாடலான ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் கன்வெர்டபிள் கூபே ரக காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். இது பற்றிய வீடியோவை அவரது மனைவி அவரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரொனால்டோவிற்கு மட்டுமின்றி அவரது பிள்ளைகள் மற்றும் நண்பர்களுக்கும் ஜார்ஜினா ரோட்ரிகஸ், கிறிஸ்துமஸ் தின பரிசு பொருட்களை வாரி வழங்கி இருக்கின்றார். அந்தவகையில், சைக்கிள், பிளே ஸ்டேஷன் போன்ற பரிசு பொருட்களை அவர் வழங்கி உள்ளார். மேலும், கிறிஸ்துமஸ் நாள் சிறப்பு விருந்தையும் அவரது நண்பர்களுக்கு அவர் வழங்கி இருக்கின்றார். இவை அனைத்தைக் காட்டிலும் கார் பரிசளிப்பே பலரை கவரும் ஓர் செயலாக அமைந்துள்ளது.
இந்த சொகுசு கார் எண்ணற்ற ஆடம்பர அம்சங்களைக் கொண்ட வாகனமாக உள்ளது. எனவேதான் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் பலவற்றிலும் இந்த கார் மாடலின் விலை மிக அதிகமானதாக உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் இந்த கார் மாடலை உலகிற்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தி சில மாதங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. பேந்தம் கன்வர்டெபிள் கூபே காரில் 6.75 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 241 கிமீ ஆகும். இந்த காரின் ஒட்டுமொத்த எடை 2745 கிலோவாகும். இந்த வாகனத்தை 15க்கும் வகையான நிற தேர்வுகளில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது. மிக மிக தாராளமான இட வசதி, மிதப்பதை போன்ற பயண அனுபவத்தை வழங்கும் சஸ்பென்ஷன் செட்-அப், மிக தாராளமான பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்ட கார் மாடலே இதுவாகும்.
இத்தகைய தரமான காரையே கிறிஸ்துமஸ் தின பரிசாக ரொனால்டோவிற்கு அவரது மனைவி வழங்கி இருக்கின்றார். கிறிஸ்டியானா ரொனால்டோ தற்போது தனக்கான புதிய அணியைத் தேடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மான்செஸ்டர் யுனைடெட் உடனான ஒப்பந்தம் கடந்த நவம்பருடன் நிறைவுற்றது குறிப்பிடத்தகுந்தது. எனவே இந்த போர்ச்சுகல் வீரர் தற்போது தனக்கான புதிய அணியை தேடி வருவதாகக் கூறப்படுகின்றது. இவர் சவுதி அரேபியாவின் அல்-நாஸர் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவலை 37 வயதான ரொனால்டோ மறுத்து உள்ளார். உலக கோப்பை முடிவுற்ற பின்னர் சர்வதேச அரங்கில் போர்ச்சுகலுக்கான தனது கடைசி போட்டியை அவர் உறுதிப்படுத்தினார். ஆனால், ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பது பற்றி அவர் உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications









