தலாய் லாமா பயன்படுத்தும் இந்த சாதாரண காரோட விலையே கோடி ரூபாயா?.. காருக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா?..

இந்திய அரசியல் வாதிகளின் ஃபேவரிட் கார் மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் இருக்கின்றது. கம்பீரமான தோற்றம் மற்றும் இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே பலரை இந்த கார் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது.

இதற்காக மட்டுமே இல்லைங்க இந்த காரில் சொகுசு வசதிகளும் ஏராளமாக இருக்கின்றது. மேலும், அதிக இட வசதிக் கொண்ட வாகனமாகவும் ஃபார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே தொழிலதிபர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் பலர் இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த கார் நாம் அனைவரும் அறிந்தபடி ரூ. 50.34 லட்சம் என்கிற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது மிக மிக அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் உயர் நிலை தேர்வின் விலை ஆகும்.

தலாய் லாமா

இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 32.59 லட்சத்திற்கே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் உலகின் முக்கியமான ஆன்மீக தலைவர்களில் ஒருவரான தலாய் லாமா பயன்படுத்திக் கொண்டிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புக் கொண்டது என்கிற ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புத்தம் புதிய உயர்நிலை வேரியண்டே ரூ. 51 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அரசு வரி, பதிவு என ஆன்-ரோடு வந்தாலும்கூட இதன் விலை 61 லட்ச ரூபாயை தாண்டாது. இப்படி இருக்க தலாய் லாமா பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஃபார்ச்சூனர் மட்டும் எப்படி ஒரு கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருக்கின்றது என்பதே பலரின் கேள்வியாக மாறியுள்ளது. இதற்கான காரணத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதவிற்குள் போகலாம். 14 ஆம் தலாய் லாமா முந்தைய தலாய் லாமாக்களைப் போலில்லாமல், இவர் மிக பெரிய கார் ஆர்வலராக இருக்கின்றார்.

இதற்கு இவருடைய லேண்ட் ரோவர் காரே சான்று. இதற்கு அடுத்தபடியாக அவர் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனரும் ஓர் சான்றாக மாறியுள்ளது. சீன அரசுடன் இணக்கமாக போக மனமில்லாத காரணத்தினால் தற்போது தலாய் லாமா, திபெத்தில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் வசித்துக் கொண்டு உள்ளார். இங்கு அவருக்கு உலகின் முக்கிய தலைவர்களுக்கு இணையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தலாய் லாமாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அரசால் வழங்கப்பட்டதே இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார். இதில் பாதுகாப்பு வசதிகள் மிக தாராளமாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் மிக மிக அதிக மதிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேவேளையில், டொயோட்டா நிறுவனம் எந்த நிலையிலும் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கார்களை விற்பனைக்கு வழங்கவில்லை.

இந்த மாற்றம் வெளியில் கொடுத்து செய்யப்பட்டதாக இருக்கின்றது. மினர்வா ஸ்பெஷல் பர்போஸ் வெயிக்கிள் நிறுவனத்தின் வாயிலாகவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. புல்லட் ப்ரூஃப் வாகனமாக டொயோட்டா ஃபார்ச்சூனர் மாற்றப்பட்டிருப்பதால் அந்த காரின் எடை 1.8 டன்னில் இருந்து 3.7 டன்னாக உயர்ந்திருக்கின்றது. பாதிக்கும் மேல் எடை உயர்ந்திருப்பதை நம்மால் அறிய முடிகின்றது. இந்த எடை உயர்வை போலவே காரின் பாதுகாப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதன் விளைவாகவே அதன் மதிப்பும் உயர்ந்துள்ளது. தலாய் லாமாவின் பயன்பாட்டில் இருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர், பி4 பிளஸ் தாக்குதலைக் கூட அசால் செய்துவிடும். இதுமட்டுமல்ல காலாஸ்நிகாவ் ஏகே47 மற்றும் பி6, எம்80 மற்றும் எஸ்எஸ் 109 மிஷின் துப்பாக்கிகளின் தாக்குதலைக்கூட இந்த வாகனம் தாங்கக் கூடியதாக இருக்கின்றது. காரின் கண்ணாடி, உடல் பேனல் மட்டுமல்ல அடிப் பகுதியும் வெடிக் குண்டுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆமாங்க, மிகப் பெரிய வெடி குண்டு காரின் அடிப்பகுதியை தாக்கினாலும் சின்ன கீரல்கூட காருக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கையெறி குண்டுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் தலாய் லாமா பயன்படுத்தும் கார் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரத்யேக வசதிகளை அந்த காரில் வழங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே ஒரு கோடி ரூபாய் மதிப்புக் கொண்டதாக ஃபார்ச்சூனர் மாறியிருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வசதிகள் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளன.

மற்றபடி எஞ்ஜின் போன்ற விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால், வழக்கமான ஃபார்ச்சூனரை போலவே இதன் இயக்கம் இருக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. அதேவேலையில், முன்பைக் காட்டிலும் பல மடங்கு இதன் எடைக் கூடியிருப்பதால் எஞ்ஜின் செயல் திறனில் லேசாக குறைந்துள்ளது. ஆனால், சஸ்பன்ஷன் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவை எடை கூட்டப்பட்டதற்கு ஏதுவாக ரி-ட்யூன் செய்யப்பட்டுள்ளது. எனவே இவை இயக்கத்தை சுவாரஷ்யமானதாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். அதேவேளையில் இது வழக்கமான ஃபார்ச்சூனரைப் போலவே காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 21, 2022, 6:30 [IST]
English summary
Dalai lama toyota fortuner
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+