இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு லோடு ஆட்டோவா! சின்ன முதலீட்டில் சொந்த தொழில் பண்றவங்களுக்கு சூப்பர் சாய்ஸ்!
டேன்ட்ரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் சரக்கு லோடு ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது. லாஸ்ட் மைல் டெலிவரிக்காக பயன்படுத்தப்படும் இந்த இந்த ஆட்டோ குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

டேன்ட்ரா வென்ச்சர்ஸ் நிறுவனம் இன்று தனது இவி OTUA என்ற 3 சக்கர சரக்கு ஏற்றி செல்லும் எலெக்ட்ரிக் லோடு ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பெயரை ஏற்கனவே உங்களுக்குக் கேட்டது போல இருக்கிறதா இந்நிறுவனம் ஷார்க் டேங்க் ரியாலிட்டி ஷோவில் இந்தத் தயாரிப்பைக் காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிறுவனத்தில் பாரத் பே நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் அஷீர் க்ரூவர் முதலீடு செய்துள்ளார்.

இந்நிறுவனம் தனது தயாரிப்புக்கு ஆங்கிலத்தில் Auto என்ற பெயரை OTUA எனத் தலைகீழாக எழுதி அதையே பெயராக வைத்துள்ளது. இந்நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இதை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது சரக்கு ஏற்று செல்லும் வாகனங்களை மட்டும் தயாரிக்க முடிவு செய்துள்ளது. பயணிகள் வாகனத்தைத் தற்போது தயாரிக்க வேண்டாம் என் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் இந்த OTUA எலெக்ட்ரிக் சரக்கு ஆட்டோவை ஏரோடைனமிக் முறையில் டிசைன் செய்துள்ளது. இதன் எடை சமன்பாடு இந்த ஆட்டோ கவிழ்ந்துவிடாத படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் இந்த லோடு ஆட்டோ15.8 kwh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இதன் பாடி மோனோக்யூ சோஸில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் 183 சிசி திறன் கொண்டது. இது 900 கிலோ வரையிலான எடையை அசால்டாக எடுத்துச் செல்லும். இந்த ஆட்டோக்கள் லாஸ்டு மைல் டெலிவரியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இந்த லோடு ஆட்டோவில் ஸ்வாப் செய்யும் பேட்டரி தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால் வேறு பேட்டரியை போட்டு ஓட்ட முடியும்.

இந்த லோடு ஆட்டோவில் மிக முக்கியமாக இதன் டிரைவர் கேபின் அதிக இட வசதியுடன் இருப்பது மட்டுமல்ல அதில் ஏசி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆட்டோவின் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அடுத்தாக இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் முழு சார்ஜில் 165 கி.மீ வரை வரை பயணிக்க முடியும்.

இது மட்டுமல்ல இந்நிறுவனமே பராமரிப்பு சேவையையும் வழங்குகிறது. இதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ3000 பாராமரிப்பு செலவாக வசூல் செய்கிறது. இந்நிறுவனம் மற்ற ஆட்டோக்களை விட இந்த ஆட்டோவிற்கான எரிபொருள் செலவும் குறையும் எனக் கூறியுள்ளது. அதாவது மற்ற சிஎன்ஜி, பெட்ரேல், டீசல் வாகனங்களில் 100 கி.மீ பயணிக்க ரூ400-500 செலவாவதாகவும், இந்த OTUA சரக்கு ஆட்டோவில் 100 கி.மீ பயணம் செய்ய ரூ70 மட்டுமே செலவாகும் எனக் கூறப்படுகிறது.

மேலும் இதற்கு பாராமிப்பு செலவும் கிடையாது எனக் கூறியுள்ளது. இந்நிறுவனம் இந்த ஆட்டோவை ரூ3.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது போக இந்த லோடு ஆட்டோ கனெக்டெட் தொழிற்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோவின் நிலையை ஆப் மூலமே கண்காணிக்க முடியும்.

இந்த ஆப்பில் ஃப்ளீட் மேனேஜ்மெண்ட், ரிப்பேர் மேனேஜ்மெண்ட், டிரைவர் மேனேஜ்மெண்ட், ஜிபிஎஸ், நேவிகேஷன், இன்சிடென்ட் ரிப்போர்ட்டிங் அலாரம் ஆகிய வசதிகளும் வழங்குகிறது. ஒரே நபர் இது போன்ற பல வாகனங்களை ஒரே நேரத்தில் ஒரே ஆப்பில் மேனேஜ் செய்ய முடியும். இந்த ஆட்டோவிற்கான புக்கிங் ஏற்கனவே துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டோவில் டாப் வேரியன்ட் என இரண்டு பேட்டரி கொடுக்கும் வாகனம் உள்ளது. இந்த வாகனத்தில் இரண்டு பேட்டரியையும் சார்ஜ் ஏற்றி பயணித்தால் சுமார் 300 கி.மீ வரை பயணிக்க முடியும். ஆனால் இடையில் பேட்டரி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த வேரியன்ட் ரூ5.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








