ஆடியின் உச்சநிலை சொகுசு காரை வாங்கிய தங்கல் பட நடிகை... இந்த விலை எல்லாம் அவங்களுக்கு அசால்டுங்க!
ஆடி (Audi) நிறுவனம் விற்பனைச் செய்து வரும் விலை உயரிய சொகுசு கார் மாடலை தங்கல் பட நடிகை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்து தகவலைப் பார்க்கலாம்.

தங்கல் படம் நினைவிக்கின்றதா, அந்த படத்தில் ஆமிர்கானின் நான்கு மகள்களில் ஒருவராக, அதாவது, 'பபிதாக குமாரி' எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் சேன்யா மல்ஹோத்ரா. இந்த நடிகையே ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வரும் உச்சநிலை கார் மாடலை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர், ஆடி க்யூ8 எஸ்யூவி ரக சொகுசு காரையே தற்போது வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த தகவலை மும்பையைச் சேர்ந்த ஆடி கார் விற்பனையாளர் உறுதிப்படுத்தியிருக்கின்றார். நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டு அவர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

தங்கல் திரைப்படத்தில் பார்த்ததைக் காட்டிலும் பல மடங்கு அழகாக இருக்காங்களே, நிஜமா இவங்கதான் அவங்களானு கேட்காதீங்க. கதாப்பாத்திரத்திற்காக தன்னையே முழுமையாக மாற்றி அப்படத்தில் சேன்யா நடித்திருக்கின்றார். இத்தகைய தரமாந நடிப்பே தற்போது அவரை மிக குறுகிய காலத்தில் மிக விலையுயர்ந்த காரை தற்போது வாங்க வைத்திருக்கின்றது.

மல்ஹோத்ரா வாங்கியிருக்கும் சொகுசு காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே மிக மிக அதிகம் ஆகும். அக்கார் ரூ. 1.03 கோடி தொடங்கி ரூ. 1.38 கோடி வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. வேரியண்டிற்கு ஏற்ப அதன் விலை வேறுபட்டுக் காணப்படும். ஆனால், சேன்யா மல்ஹோத்ரா எந்த வேரியண்டை வாங்கியிருக்கின்றார் என்கிற துள்ளியமான தகவல் கிடைக்கவில்லை.

ஆகையால், அவர் என்ன விலைக் கொடுத்து ஆடி க்யூ8 சொகுசு காரை வாங்கியிருக்கின்றார் என்பதை தெளிவாகக் கூற முடியவில்லை. இருப்பினும், அவர் ரூ. 1.50 கோடிக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்தே இக்காரை வாங்கியிருப்பார் என நம்மால் யூகிக்க முடிகின்றது. இத்தகைய விலையுயர்ந்த காரிலேயே சேன்யா தனது சொகுசு பயணங்களை மேற்கொள்ள இருக்கின்றார்.

க்யூ8 செலபிரேஷன் மற்றும் க்யூ8 ஸ்டாண்டர்டு ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே ஆடி க்யூ8 நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் சொகுசு வசதிகளுக்கும், தொழில்நுட்ப வசதிகளுக்கும் சற்றும் குறைச்சலில்லா தேர்வுகளாக காட்சியளிக்கின்றன. மேலும், இரண்டிலும் பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்ஜின்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆகையால், இரு தேர்வுகளுக்கும் உலகளவில் பிரியர்கள் ஏராளம். க்யூ8 காரே ஆடி நிறுவனம் விற்பனைச் செய்யும் கார்களிலேயே உயர்நிலை மாடலாகக் காட்சியளிக்கின்றது. இது மிக தாரளமான இட வசதி, கவர்ச்சிகரமான உடல் தோற்றம், பன்முக நிற தேர்வுகள் ஆகியவற்றையும் வழங்குகின்றது.

எனவேதான் இந்த காருக்கு உலகளவில் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தற்போதைய நவீன காலம் மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் ஏற்ற காராக இது காட்சியளிக்கின்றது. இதற்கேற்ப மசாஜ் செய்யும் இருக்கைகள், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், காற்றை வடிகட்டும் கருவி, 12.3 அங்குல உயர்-ரக திரை, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

10.1 அங்குல கன்ட்ரோல் நேவிகேஷன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.6 அங்குல திரை (இதன் வாயிலாக ஹீட்டர் மற்றும் ஏசியைக் கன்ட்ரோல் செய்ய முடியும்) ஆகியவையும் ஆடி க்யூ8 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. எஞ்ஜினை பொருத்தவரை ஆடி க்யூ8 சொகுசு காரில் 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் 340 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த மோட்டார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 5.9 செகண்டுகளேயே எடுத்துக் கொள்ளும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட சொகுசு காரையே நடிகை சேன்யா மல்ஹோத்ரா வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications








