நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்! விலைய கேட்டீங்க மயக்கமே வந்திடும்

நம்ம முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட இன்னும் பல பிரபலங்கள் பயன்படுத்தி வரும் சொகுசு காரை தர்பார் திரைப்பட வில்லன் சுனில் ஷெட்டி தற்போது வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மிக மிக விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் வில்லனாக வந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார், இந்தி நடிகர் சுனில் ஷெட்டி.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

இவரே தற்போது விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றார். லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் பிரபலமான லக்சூரி கார் மாடல்களில் ஒன்றான டிஃபெண்டர் 110 (Defender 110)-யே அவர் வாங்கியிருக்கின்றார். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.05 கோடி ஆகும். இத்தகை உச்சபட்ச விலைக் கொண்ட சொகுசு காரையே நடிகர் சுனில் ஷெட்டி தற்போது வாங்கியிருக்கின்றார்.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

இந்தியாவில் இந்த சொகுசு காரை ஏற்கனவே பல திரை நட்சத்திரங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வரிசையில் தற்போது சுனில் ஷெட்டியும் இணைந்திருக்கின்றார். உதாரணமாக மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மம்முட்டி, அர்ஜூன் கபூர், சன்னி தியோல், ஆயுஷ் சர்மா, ரவி தேஜா மற்றும் பிரித்வி ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றனர்.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

இவர்களைப் போலவே சில முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நம்முடைய தமிழக முதல் முக ஸ்டாலின்கூட டிஃபென்டர் சொகுசு காரையே தன்னுடைய பயணங்களுக்கு பயன்படுத்தி வருகின்றார். இவரைப் போலவே கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, விவேக் கோயன்கா உள்ளிட்டோரும் இந்த சொகுசு வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

இவர்களைத் தொடர்ந்து லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை இந்தியாவில் பயன்படுத்தும் முக்கிய பிரபலமாக மாறியிருக்கின்றார் சுனில் ஷெட்டி. இந்த வாகனம் சொகுசானது மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டதும்கூட. ஆமாங்க, கரடு முரடான பாதைகளைக கூட இந்த வாகனம் அசால்டாக கடந்துவிடும்.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

கரடு முரடான பாதைகளில் பயணிக்கும்போது இந்த வாகனம் வசதியில்லாத சாலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற அனுபவத்தைத் துளிக் கூட வழங்காது. எனவேதான் இந்தியர்கள் பலர் இந்த காரை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். டிஃபெண்டர் 110 லாங் வீல் பேஸ் மற்றும் ஐந்து டூர்கள் கொண்ட வெர்ஷன் ஆகும். இக்காரில் இட வசதியும் மிக தாராளமாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

இந்த வாகனத்தை டிஃபெண்டர் 90 எனும் வெர்ஷனிலும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது 3 கதவு அமைப்புக் கொண்டது. இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான பிரபலமான கார் மாடலையே இந்திய நடிகர்கள் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

உலக சந்தையில் இந்த கார் மாடலை கூடுதல் சிறப்புகள் கொண்டதாக லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. டிஃபெண்டர் 130 எனும் மாடலே அதுவாகும். இது இந்தியாவில் விற்பனையில் உள்ள அனைத்து டிஃபெண்டர்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக லக்சூரி அம்சங்களையும், இட வசதியையும் கொண்டதாக இருக்கின்றது.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டிஃபெண்டர் 110 மாடலில் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. இதில் இரண்டு பெட்ரோல், ஒன்று டீசல் மோட்டாராகும். இந்த ஒவ்வொரு மோட்டாரும் தனித்துவமான திறனை வெளிப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. 2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட டிஃபெண்டர் 110 மாடலின் திறன் வெளிப்பாடு 300 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்காகும்.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

இதைக் காட்டிலும் சற்று அதிக திறனை வெளியேற்றக் கூடிய தேர்வாக 3 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் இருக்கின்றது. இந்த மோடடார் அதிகபட்சமாக 400 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் டீசல் மோட்டார் 300 பிஎச்பியையும் 650 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது 3 லிட்டர் இன்லன் 6 சிலிண்டர் மோட்டார் ஆகும்.

நம்ம முதல்வருக்கே போட்டியா! சூப்பரான சொகுசு காரை வாங்கிய தர்பார் பட வில்லன்... விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்!

இதில் எந்த எஞ்ஜின் கொண்ட வெர்ஷனை நடிகர் சுனில் வாங்கியிருக்கின்றார் என்பது துள்ளியமாக தெரியவில்லை. அதேநேரத்தில் அவரிடத்தில் ஏற்கனவே இன்னும் பல சொகுசு மற்றும் அதிகம் திறனை வெளியேற்றக் கூடிய கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், சுனிலின் கராஜில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி (Mercedes Benz G350D off roader), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350 (Mercedes Benz GLS 350), ஹம்மர் எச்2 (Hummer H2), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) மற்றும் ஜீப் விராங்க்ளர் (Jeep Wrangler) உள்ளிட்ட பல கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, November 12, 2022, 20:04 [IST]
English summary
Darbar villain buys land rover defender
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+