டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..

அட்டகாசமான சொகுசு காராக டொயோட்டா இன்னாவா க்ரிஸ்டா கார் மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..

வாகனங்களை தனிபயனாக்கம் செய்து தரும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக டிசி 2 இருக்கின்றது. இந்நிறுவனமே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரின் கேபினை உல்லாச கப்பலில் காணப்படும் கேபினுக்கு இணையானதாக மாற்றியிருக்கின்றது. சொகுசு வசதிகளை அதிகம் விரும்புபவர்களைக் கவரும் நோக்கில் இவ்வாறு இன்னோவா காரை டிசி2 நிறுவனம் மாற்றியமைத்திருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..

இதற்கேற்ப நிறுவனத்தின் இந்த செயல் ஆடம்பர கார் விரும்பிகளின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது. டிசி 2 நிறுவனம் மாற்றியமைக்கப்பட்ட இந்த இன்னோவா க்ரிஸ்டா காருக்கு செனட்டர் எனும் பெயரை வைத்திருக்கின்றது. இந்த பெயரில் ஓர் வீடியோவை அதன் யுட்யூப் சேனலில் டிசி 2 நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..

இது ஓர் டீசர் வீடியோ ஆகும். இன்னோவா க்ரிஸ்டா காரில் என்ன மாதிரியான மாற்றங்கள், அதாவது, இன்னோவா காரின் கேபின் எந்தளவிற்கு மாற்றப்பட்டிருக்கின்றது என்பதை வெளிக்காட்டும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரில் மிக தாராளமாக 5 முதல் 6 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..

மிக மிக எடை குறைந்தவர்கள் அல்லது சிறியவர்கள் என்றால் சற்று அதிக எண்ணிக்கையிலேயே இந்த காரில் பயணிக்க முடியும். ஆனால், சற்று அதிக நெருக்கத்துடன் பயணிக்க வேண்டியிருக்கும். இத்தகைய அதிக பரப்பளவுக் கொண்ட காரை வெறும் நான்கு நபர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய வாகனமாக மாற்றியிருக்கின்றது, டிசி2.

டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..

மிக அதிக சொகுசு வசதியை விரும்புவோர்களைக் கவரும் பொருட்டே இவ்வாறு அக்காரை மாற்றியமைத்திருக்கின்றது. முன் பகுதியில் டிரைவருடன் சேர்த்து ஓர் நபரும், பின் பக்கத்தில் மிக சொகுசாக இருவர் அமர்ந்து பயணிக்கும் வகையில் அந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இரு இருக்கைகளும் படுக்கையை மிக அதிகளவில் சாயும் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..

இதனை எலெக்ட்ரானிக் பட்டன்கள் வாயிலாக கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, பின் பக்க பயணிகள் தங்களுக்கு தேவையான பொசிஷனில் இருக்கைகளை ஒற்றை பட்டனை அழுத்துவதன் வாயிலாக மாற்றிக் கொள்ள முடியும். பின்னிருக்கையாளர்களுக்கு கூடுதல் சொகுசான அனுபவத்தை வழங்கும் விதமாக ஹெட்ரெஸ்ட் மற்றும் கால்களுக்கு ஓய்வளிக்கும் பேட் உள்ளிட்டவை இந்த இருக்கையில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..

மேலும், இதன் அனைத்து இருக்கைகளும் லெதரால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், ஆரம் ரெஸ்ட்டுகளும் இரு இருக்கைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க இன்னும் பல மாற்றங்களும், சிறப்பு தொழில்நுட்பங்களைச் சேர்த்தலையும் டிசி2 இக்காரில் செய்திருக்கின்றது. குறிப்பாக, காரின் பிரீமியம் தோற்றத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஃப்ளூர் மற்றும் உட்பக்க ரூஃப் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..

தொடர்ந்து குளிர்பானங்களை வைத்துக் கொள்ளும் வகையில் சிறிய ஃப்ரிட்ஜ் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், கிளாஸ் மற்றும் ஷூக்களை வைக்கும் வகையிலும் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கின்றது. இதை அடுத்து அதிக பொழுது போக்கை வழங்கும் வகையில் சிறிய திரை ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா காரா இது... க்ரூஸ் கப்பலையே மிஞ்சுமளவிற்கு இருக்குதே!..

மேலும், ஆட்டோ ரெக்ட்ராக்டபிள் சன் பிளைண்டுகள், ஃபோல்டபிள் மேஜை, ஆம்பியன்ட் லைட், ரூஃப் லைனர்கள், ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இருப்பதைப்போல மேற்கூரையில் வான்வெளி அமைப்பு ஆகிய அம்சங்களும் டிசி டிசைனின் செனட்டர் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக பின்னிருக்கையாளர்கள் மற்றும் டிரைவர் ஆகியோர்களின் பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காரின் டீசர் வீடியோவையே நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. இதைத் தவிர வேறு எந்த மாற்றங்களையும் டிசி நிறுவனம் இந்த காரில் மேற்கொள்ளவில்லை. அதாவது, எஞ்ஜின் மற்றும் வெளிப்புற தோற்றம் ஆகிய விஷயங்களில் நிறுவனம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆகையால் வெளியில் பார்க்கும்போது இக்கார் ஓர் வழக்கமான இன்னோவாவைப் போலவே தென்படும். ஆனால், உள்பக்கம் பார்க்கும்போது ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

Most Read Articles
English summary
Dc design modified toyota innova crysta into super luxurious
Story first published: Saturday, August 6, 2022, 11:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X