அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா! டிசி2 டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

கியா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றான கார்னிவல் எம்பிவி காரை டிசி டிசைன் தற்போது மாற்றியமைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

கியா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் கார்னிவல் கார் மாடலும் ஒன்று. இது ஓர் எம்பிவி ரக வாகனமாகும். இந்தியாவில் கியா தற்போது விற்பனைச் செய்து வரும் மிக உயரிய விலைக் கொண்ட வாகனமாக இது இருக்கின்றது. ஆகையால், இக்கார் மாடலில் சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு சற்றும் பஞ்சமின்றி இருக்காது.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

இத்தகைய ஓர் வாகனத்தையே பிரபல வாகன கஸ்டமைசேஷன் நிறுவனமான டிசி டிசைன் பல மடங்கு அதிக சிறப்பு வாய்ந்த வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றது. ஆம், நிறுவனம் அதன் கை வண்ணத்தில் கூடுதல் சொகுசு காராக கியா கார்னிவலை மாற்றியமைத்திருக்கின்றது.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

என்ன மாதிரியான சிறப்பு வசதிகளை இக்காரில் தங்கள் நிறுவனம் சேர்த்திருக்கின்றது என்பதை விளக்கக் கூடிய ஓர் வீடியோவை நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. குறிப்பாக, தன்னுடைய நேர்த்தியான மாற்றியமைப்பு திறனினால் கியா கார்னிவல் எத்தகைய கவர்ச்சியான வாகனமாக மாறியிருக்கின்றது என்பதையே அவ்வீடியோ வாயிலாக டிசி டிசைன் காட்சிப்படுத்தியிருக்கின்றது.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

டிசி டிசைன் கார்னிவல் எம்பிவி காரின் உட்பகுதியை முழுக்க முழுக்க மாற்றியமைத்திருக்கின்றது. ஸ்டாக் அம்சங்கள் பலவற்றை நீக்கிவிட்டு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அம்சங்களை அது பயன்படுத்தியிருக்கின்றது. இதேபோல் காரின் வெளிப்புறத்திலும் அது மாற்றங்களைச் செய்திருக்கின்றது.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

அந்தவகையில், காரின் வெளிப்புறம் ரீ-பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஷேட்களால் அது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்டிகோ ஷேடை டிசி டிசைன் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த ஷேடில் கியா கார்னிவல் முற்றிலும் அட்டகாசமான வாகனமாக மாறியிருக்கின்றது.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

கியா கார்னிவல் எம்பிவி மின்சாரத்தால் திறக்கும் கதவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கதவை திறந்து நுழைவதற்காக பிரத்யேக ஃபூட்ஸ்டெப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இது எப்போது எல்லாம் கார் கதவு திறக்கின்றதோ அப்போது அது தானாக வெளி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் காரின் அடிப்பகுதியில் அது சென்றுவிடுமாம்.

வெளிப்புறத்திலேயே இத்தனை அம்சங்கள் வழங்கியிருக்காங்களே, அப்போ உட்புறத்தில் எத்தனை அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும் என்று ஆச்சரியத்துடன் கேக்குறீங்களா? நீங்க யோசிக்கிறது சரிதான் இக்காரின் உட்பகுதியில் பல்வேறு மாற்றங்களை டிசி டிசைன் செய்திருக்கின்றது.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

அந்தவகையில், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களில் மிக முக்கியமான மாற்றமாக இருக்கைகள் மாற்றியமைத்திருப்பது இருக்கின்றது. காரில் பொருத்தப்பட்டிருந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கின்றது.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

அதற்கு பதிலாக இருவர் மட்டுமே அமரக் கூடிய அதிக சொகுசு வசதிகள் நிறைந்த இருக்கையை நிறுவனம் தற்போது பொருத்தியுள்ளது. ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் போதும் அந்த இருக்கை தானாக சாயும். பின்னர் தேவைப்பட்டால் அதே எலெக்ட்ரிக்கல் முறையில் இருக்கையை பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

இதன் ஹேண்ட் ரெஸ்ட்குளும் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, கால்களுக்கு ஓய்வளிக்கும் வகையில் கால் ரெஸ்ட் பேட்டுகளும் இருக்கைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அதனையும் எலெக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். இத்தகைய அமைப்பு சொகுசான அரண்மனையில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

மேலும், காரின் உட்பகுதி இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. டிரைவர் மற்றும் விருந்தாளி என அறைகள் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த கெஸ்ட் அறையில் கூடுதலாக இருவர் அமரும் வகையில் இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை ஏற்கனவே இடம் பெற்றிருக்கும் இருக்கைகளுக்கு நேரெதிரில் இருக்கும்படி, பொருத்தப்பட்டுள்ளது.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

ஆனால், அது எப்போதும் விரிந்திருக்கும்படி பொருத்தப்படவில்லை. ஆம், தேவை என்றால் எலெக்ட்ரிக்கல் முறையில் அதை விரிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன், உட்பக்க கூரை பகுதியில் பெரிய எல்இடி திரை பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், இந்த ரூஃபில் ஆம்பியன்ட் லைட்டுகள், ரீடிங் லைட்டுகள் மற்றும் ஏசி வெண்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

இந்த அம்சங்களால் கார்னிவல் வழக்கமான கார்களிடம் இருந்து பல மடங்கு மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. இந்த தோற்றத்தை மேலும் பல மடங்கு கூட்டும் வகையில் சிறிய ஃப்ரிட்ஜ், குளிர்பானங்களை பத்திரமாக வைத்திருக்கும் சிறிய அறை உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

அடேங்கப்பா இப்படியும் ஒரு காரை மாத்த முடியுமா!.. டிசி டிசைன் கை வண்ணத்தில் உல்லாச கப்பலாக மாறிய கியா கார்னிவல்!

இதுதவிர எலெக்ட்ரிக்கலாக கன்ட்ரோல் செய்யும் வகையில் கர்டைன்களும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றினால் கியா கார்னிவல் உண்மையில் லக்சுரி அம்சங்களின் பிறப்பிடமாகவே மாறியிருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் கியா கார்னிவல் ரூ 24.95 லட்சம் தொடங்கி ரூ. 33.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மதிப்பை பல மடங்கு கூட்டும் வகையிலேயே டிசி டிசைனின் கஸ்டமைசேஷன் செயல்பாடு அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 9, 2022, 18:54 [IST]
English summary
Dc2 design converted kia carnival mpv into super luxurious car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+