ஒரு முதலமைச்சர் பயன்படுத்துற காரா இது?.. ரொம்ப சாதாரணமான நபராக வாழும் டெல்லி முதல்வர்..

நம்ம ஊரு கவுன்சிலரின் மகனே மினி கூப்பர், ஆடி கார் மற்றும் பிஎம்டபிள்யூ பைக் ஆகிய வாகனங்களைப் பயன்படுத்தி வரும்நிலையில், டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மிக மிக எளிமையான கார்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அனைவரும் அறிந்த அரசியல் தலைவர்களில் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒருவர் ஆவார். டெல்லி மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்கவராக இவர் இருக்கின்றார். என்னதான் அதிக செல்வாக்கு மிக்கவராகவும், ஆட்சி அதிகாரம் அவரது கையில் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகுந்த எளிமையான நபராகவே அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார். இதற்கு அவரது எளிமையான தோற்றமே முக்கிய சான்று. இது அவரது எளிமையான வாழ்க்கையை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இது மட்டுமின்றி அவர் பயன்படுத்தும் சில கார்களும் அவர் எளிமையான வாழ்க்கைக்கு பெயர்போனவர் என்பதற்கு சான்றாக இருக்கின்றது. பிற மாநில முதல்வர்களைப் போல் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கார்களை பயன்படுத்தாமல், நடுத்தர சாமானிய மக்கள் என்ன மாதிரியான கார் மாடல்களை பயன்படுத்துவார்களோ அத்தகைய ஓர் கார் மாடலையே அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அவரிடத்தில் இருக்கும் கார் மாடல்கள் சிலவற்றை பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி வேகன்ஆர்:

இந்தியாவின் மலிவு விலை ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் வேகன்ஆர்-ம் ஒன்று. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலும் இதுவே ஆகும். இதனை இந்தியர்கள் 'டால் பாய்' (உயரமான பையன்) என செல்லமாக அழைக்கின்றனர். இந்த காரையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பயன்படுத்தினார். தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரே இந்த காரில் பயணத்தை மேற்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, அரசியலில் களமிறங்கும் முன்னரே அவர் இந்த காரை வாங்கிவிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆனால், இப்போது வேகன்ஆர் கார் அவரிடம் பயன்பாட்டில் இல்லை. தலை நகர் டெல்லியில் 15 ஆண்டுகள் பழைய வாகனத்தைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியின் காரணமாக டெல்லியின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ஆசை காரை கைவிட்டுவிட்டார். மாருதி சுஸுகியின் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக வேகன்ஆர் இருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப நிலை மாடலின் விலையே ரூ. 5.47 லட்சம் ஆகும். இதன் அதிகபட்ச விலையே ரூ. 7.20 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டொயோட்டா இன்னோவா:

இந்தியர்களின் பிரியமான எம்பிவி ரக கார் மாடல்களில் இன்னோவாவும் ஒன்று. பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்த காரை பயன்படுத்துவதை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பயன்பாட்டிலும் இந்த கார் உள்ளது. அதே நேரத்தில், பிற அரசியல்வாதிகளைப் போல் இவரிடத்தில் அதிக எண்ணிக்கையில் இதுபோன்று விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டதான் ஆக வேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவால் இடத்தில் பயன்பாட்டில் இருப்பது பழைய தலைமுறை இன்னோவா ஆகும். இப்போது சந்தையில் இன்னோவா க்ரிஸ்டாவே விற்பனையில் இருக்கின்றது. இந்த கார் 2.5 லிட்டர் டீசல் மோட்டாருடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்திய சந்தையில் அதிகம் கிராக்கிக் கொண்ட எம்பிவி ரக கார் மாடலாக இன்னோவா இருக்கின்றது. இதன் செகண்ட் ஹேண்ட் காருக்கே இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்:

இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஸ்விஃப்டும் ஒன்று. சாமானியர்களின் கார் என்றும் இது அழைக்கப்படுகின்றது. இந்த ஹேட்ச்பேக் ரக காரே தன்னிடம் பயன்பாட்டில் இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின்போது தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அவரிடத்தில் இந்த கார் பயன்பாட்டில் இருக்கிறதா?, இல்லையா?, என்பது தெரிய வரவில்லை. இருப்பினும், இந்த கார் இப்போது அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டெல்லியில் 15 ஆண்டுகளுக்கும் பழைய வாகனங்களை பயன்படுத்தத் தடை விதி உள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4:

மஹிந்திரா நிறுவனம் இந்த காரை தற்போது விற்பனையில் இருந்து வெளியேற்றியிருக்கின்றது. வரவேற்புக் குறைவு என்கிற காரணத்தினால் இதனை மஹிந்திரா நிறுவனம் வெளியேற்றியிருக்கின்றது. விற்பனை கிடைக்கவில்லை என்கிற காரணத்தினால் இதை குறைக் கொண்ட கார் என கருதி விட முடியாது. மிக சூப்பரான மற்றும் முழு அளவு எஸ்யூவி காராக இது இருக்கின்றது. இந்த காரே தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த காரின் மதிப்பு ரூ. 32 லட்சம் ஆகும். இத்தகைய அதிக விலைக் கொண்ட காரை அவருக்கு சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பரிசாக வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்ஜி குளோஸ்டர்:

இந்தியாவின் முதல் தன்னாட்சி வசதிக் கொண்ட எஸ்யூவி ரக கார் இதுவாகும். இந்த காரே அவரது கராஜில் இருக்கும் லேட்டஸ்ட் மற்றும் அதிக விலைக் கொண்ட காராக காட்சியளிக்கின்றது. இதுவும் ஆம் ஆத்மி கட்சிக்காரர் ஒருவரால் பரிசளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இவரிடத்தில் இருக்கும் பெரும்பாலான விலையுயர்ந்த கார்கள் அவரால் வாங்கப்பட்டது அல்ல என்பது தெளிவாக தெரிகின்றது. எம்ஜி குளோஸ்டர் இந்தியாவில் ரூ. 36 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi cm arvind kejriwal car collection
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X