இந்த சொகுசு காருக்கு இவ்ளோ டிமாண்டா?.. ஒற்றை டீலரால் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 60 யூனிட் மெரிடியன்!

ஒற்றை டீலரால் ஒரே நாளில் 60 யூனிட் ஜீப் மெரிடியன் (Jeep Meridian) கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த சொகுசு காருக்கு இவ்ளோ டிமாண்டா?.. ஒற்றை டீலரால் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 60 யூனிட் மெரிடியன்!

இந்தியாவில் டூ-வீலர்களை போல் அதிகளவில் கார்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பது தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கார் விற்பனையாளர்கள் லாட் லாட்டாக கார்களை டெலிவரிக் கொடுக்கும் நிகழ்வு சமீப சில காலமாக நாட்டில் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

இந்த சொகுசு காருக்கு இவ்ளோ டிமாண்டா?.. ஒற்றை டீலரால் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 60 யூனிட் மெரிடியன்!

சென்னையில் டாடா கார் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் 101 டாடா எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி கொடுத்து சாதனைப் படைத்தார். இதைத் தொடர்ந்து, கேரளாவிலும் இதேபோல் ஓர் சாதனை நிகழ்வு நிகழ்த்தப்பட்டது. கொச்சினைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் கார் விற்பனையாளர் ஒருவர் ஒரே நாளில் ஒரே கார் மாடலின் 150 மாடல்களை டெலிவரிக் கொடுத்து 'இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்' -இல் இடம் பிடித்தார்.

இந்த சொகுசு காருக்கு இவ்ளோ டிமாண்டா?.. ஒற்றை டீலரால் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 60 யூனிட் மெரிடியன்!

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் கார்களை ஒரே நேரத்தில் டெலிவரிக் கொடுக்கும் நிகழ்வு இந்தியாவில் தற்போது தொடர் கதையாகி இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஜீப் (Jeep) கார் விற்பனையாளர் ஒருவர் ஒரே கார் மாடலின் 60 யூனிட்டுகளை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்து அசத்தியிருக்கின்றார்.

இந்த சொகுசு காருக்கு இவ்ளோ டிமாண்டா?.. ஒற்றை டீலரால் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 60 யூனிட் மெரிடியன்!

இந்த நிகழ்வு டெல்லி என்சிஆரில் அரங்கேறியிருக்கின்றது. ஜீப் மெரிடியன் (Jeep Meridian) சொகுசு எஸ்யூவி காரையே டீலர் அதிக எண்ணிக்கையில் டெலிவரி கொடுத்திருக்கின்றார். 'லேண்ட் ஜீப் டீலர்' இந்த விற்பனையாளரே தரமான சம்பவத்தை அரங்கேற்றியவர் ஆவார். இந்த டெலிவரி நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அதாவது, விழாவைப் போல் கார் டெலிவரி கொடுக்கும் சம்பவம் டீரலரால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த சொகுசு காருக்கு இவ்ளோ டிமாண்டா?.. ஒற்றை டீலரால் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 60 யூனிட் மெரிடியன்!

இதுகுறித்த வீடியோவை, 'சுமித் தாகுர் லேண்ட்மார்க் ஜீப்' எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இந்த சேனல் கார் விற்பனையகத்தைச் சேர்ந்த ஊழியர் நடத்தி வரும் சேனல் ஆகும். ஜீப் நிறுவனம் சமீபத்திலேயே இந்த மெரிடியன் காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியது. இது ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி ரக காராகும்.

இந்த சொகுசு காருக்கு இவ்ளோ டிமாண்டா?.. ஒற்றை டீலரால் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 60 யூனிட் மெரிடியன்!

இக்காருக்கு ஆடம்பர கார் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நீலவி வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போதைய அதிக யூனிட் டெலிவரி சம்பவம் நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. இது ஓர் 7 சீட்டர் எஸ்யூவி காராகும். ரூ. 29.30 லட்சத்தில் இருந்து இக்கார் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதிக ஆடம்பர அம்சங்களை தாங்கிய வாகனமாக இது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்த சொகுசு காருக்கு இவ்ளோ டிமாண்டா?.. ஒற்றை டீலரால் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 60 யூனிட் மெரிடியன்!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் தோற்றத்தில் மட்டுமில்லாமல் தொழில்நுட்பங்கள் விஷயத்திலும் இக்கார் அதிக கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்யூவி காரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், லெதர் இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த சொகுசு காருக்கு இவ்ளோ டிமாண்டா?.. ஒற்றை டீலரால் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 60 யூனிட் மெரிடியன்!

இத்தகைய சூப்பரான தொழில்நுட்ப வதிகளைத் தொடர்ந்து மிகவும் அட்டகாசமான தோற்றத்தை வழங்கக் கூடிய கருவிகள் மற்றும் அலங்காரப் பொருட்களும் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், இந்த 7 இருக்கைக் கொண்ட காரை மெல்லிய தோற்றம் கொண்ட புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், எல்இடி பனி மின் விளக்கு, கட்டுமஸ்தான பம்பர், ட்யூவல் டோன் அலாய் வீல் மற்றும் மெல்லிய எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவற்றால் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த சொகுசு காருக்கு இவ்ளோ டிமாண்டா?.. ஒற்றை டீலரால் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 60 யூனிட் மெரிடியன்!

ஜீப் நிறுவனம் மெரிடியன் காரில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றன.

இதுதவிர, 4X4 சிஸ்டம் மற்றும் பன்முக டிரைவிங் மோட்கள் ஆகியவையும் இக்காரில் வழங்கப்படுகின்றது. இதுமாதிரியான சூப்பரான வசதிகளை மெரிடியன் எஸ்யூவிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே ரூ. 29.90 லட்சம் என்ற அதிக விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேநேரத்தில் இதன் உயர்நிலை வேரியண்ட் ரூ. 36.95 வரையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இத்தகைய விலையுயர்ந்த காரே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, July 1, 2022, 8:30 [IST]
English summary
Delhi jeep dealer delivers 60 meridian suv s in a single day
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+