புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளியாகிய ஸ்கார்பியோ என் காரின் டெலிவிரிகள் துவங்கும் தேதி வெளிவந்துள்ளது.

அதனை பற்றியும், இந்த மஹிந்திரா எஸ்யூவி காரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

மஹிந்திரா நிறுவனத்தின் தரமான தயாரிப்புகளுள் ஒன்றாக ஸ்கார்பியோவை சொல்லலாம். பல வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவிற்கு இப்போதுவரையிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், ஸ்கார்பியோவை புதிய தலைமுறைக்கு அப்டேட் செய்ய வேண்டும் என்பதை மஹிந்திரா நிறுவனம் மறக்கும் அளவிற்கு...

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

இருப்பினும் ஒருவழியாக, புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் சில மாதங்களுக்கு முன்னர் ஸ்கார்பியோ என் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்கார்பியோ காருக்கே உண்டான அதே கம்பீரமான தோற்றத்தில், அதேநேரம் மாடர்ன் ஸ்டைல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்கார்பியோ என் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.99 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

அசரடிக்கும் தோற்றம் மற்றும் ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வுகளுடன் கொண்டுவரப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரிக்கவே புதிய ஸ்கார்பியோ என் காருக்கான முன்பதிவுகள் விரைவே துவங்கப்பட்டன. ஆனால் இந்த காரின் டெலிவிரிகள் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலே இருந்துவந்தது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

இந்த நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற செப்டம்பர் 26ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மாத வடிவமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்களுக்கு பிறகு விற்பனைக்கு வந்துள்ளதால் புதிய ஸ்கார்பியோ என் காரின் மீது மஹிந்திரா நிறுவனம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

டெலிவிரி துவங்கப்பட்ட பிறகு, 2022 டிசம்பர் மாதத்திற்கு உள்ளாக குறைந்தப்பட்சம் 20,000 ஸ்கார்பியோ என் கார்களையாவது தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முனைப்பில் மஹிந்திரா உள்ளது. அதிலிலும் குறிப்பாக, ஸ்கார்பியோ என் காரின் விலைமிக்க உயர்நிலை வேரியண்ட்டான இசட்8 எல் -இன் உற்பத்தி பணிகளில் மஹிந்திரா நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்துவதாக தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

மஹிந்திராவின் சமீபத்திய மாடர்ன் எஸ்யூவி கார்கள் அனைத்திற்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவற்றை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எஸ்யூவி மாடல் சிறந்த செயல்படுதிறன்களையும், இயக்கத்தின்போது சிறப்பான ரோடு பிரசன்ஸையும் கொண்டுள்ளதால் விற்பனையில் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

ஸ்கார்பியோ என் காரின் முன்பக்கத்தில் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய க்ரோம் க்ரில், தடிமனான டிசைனில் முன் பம்பர் மற்றும் C-வடிவில் எல்இடி டிஆர்எல்-கள் உள்ளிட்டவற்றை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. அப்படியே உட்புறத்திற்கு வந்தால், கேபின் நன்கு பிரீமியம் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டேஸ்போர்டு பலரை வெகுவாக வசீகரித்துள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

இந்த எஸ்யூவி காரின் உட்புறத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பெரிய அளவில் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன் இருக்கை பயணிகளுக்கும் ஆர்ம் ரெஸ்ட், தன்னிச்சையாக டிம்-ஆகக்கூடிய காரின் பின்புறத்தை காட்டும் உட்புற கண்ணாடி, எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் க்ளோவ் பாக்ஸ், புஷ்-ஸ்டார்ட் பொத்தான் உள்ளிட்ட தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

இவற்றுடன் ஸ்கார்பியோ என் காரை 2.0 லிட்டர் எம் ஸ்டாலியன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் அல்லது 2.2 லிட்டர் எம் ஹாவ்க் டீசல் என்ஜின் தேர்வில் முன்பதிவு செய்யலாம். இதில், அதிகப்பட்சமாக 197 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்க முடியும். 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 173 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்தவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்- இதுக்கு தானே இவ்ளோ நாளா வெயிட்டிங்

இதனுடன் கியர்பாக்ஸ் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அட்டகாசமான வெளிப்புற தோற்றம், தொழிற்நுட்ப வசதிகள் மிகுந்த உட்புற கேபின் மற்றும் ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஸ்கார்பியோ என் கார் லேடார்-ஆன்-ஃப்ரேம் -ஐ அடிப்படையாக கொண்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 25, 2022, 14:13 [IST]
English summary
Deliveries of mahindra scorpio n will start on september 26
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+