டெல்டா 4X4 செஞ்ச வேலையால ரோல்ஸ் ராய்ஸ் காரோட அழகே போச்சு... இருந்தாலும் அத ரசிக்காம இருக்க முடியல!
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை பிரபல மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று மிகவும் முரட்டுத் தனமான காராக மாற்றியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனம் டெல்டா 4x4 (Delta 4x4). இந்நிறுவனம், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றான கல்லினன் (Rolls-Royce Cullinan) எஸ்யூவி காரை ஆஃப்-ரோடு வாகனமாக மாற்றியிருக்கின்றது.

இதனால், அந்த விலையுயர்ந்த மற்றும் அழகிய வாகனம் பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத் தனமான வாகனமாக மாறியிருக்கின்றது. டெல்டா 4x4 நிறுவனம் பிரத்யேகமாக அரேபியன் பெனின்சுலா வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இக்காரை இவ்வாறு வடிவமைத்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது, பயணித்திற்கு சற்றும் பொருந்தாத பகுதிகளில் சுற்றுலா சென்று, அங்கு கேம்ப் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை வழங்கக் கூடிய வசதிக் கொண்ட வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை டெல்டா 4x4 உருவாக்கியிருக்கின்றது. இந்த மாற்றியமைப்பு செயல் 1 லட்சத்து 50 ஆயிரம் யூரோக்கள் செலவில் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் இதற்கு 1.23 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. டெல்டா 4x4 வழக்கமான வாகனங்களை மிக சிறந்த ஆஃப் ரோடு வாகனங்களாக மாற்றுவதில் கை தேர்ந்த நிறுவனமாக காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ரோல்ஸ் ராய்ஸ் காட்சியளிக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இது ரோல்ஸ் ராய்ஸ் கார்தானா? என கேள்வியெழுப்பும் வகையில் இருக்கின்றது. இந்த காரில் பத்து பிஐஏஏ ஸ்பாட் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆறு காரின் புல் பாரிலும், நான்கு 4 மேற்கூரை பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புல் பார் காரின் முகப்பு பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பிஐஏஏ ஸ்பாட் (PIAA spotlights) மின் விளக்குகளின் மதிப்பு மட்டும் 3.2 லட்ச ரூபாய் என கூறப்படுகின்றது. இதேபோல் பக்கவாட்டு பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் கூடுதல் பேனல்கள் நான்கு வீல்கள் இருக்கும் இடத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாகனத்தின் விலை மட்டுமே ரூ. 1.23 லட்சம் என கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி கார் வீல்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. 20 இன்ச் அளவுள்ள வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையே காரை பல மடங்கு உயரமானதாக காட்சியளிக்க செய்கின்றன. இத்துடன், ஆஃப்-ரோடு பயணத்திற்கு உகந்த மிக்கி தாம்சன் ஆஃப்-ரோடு டயர்கள் ரூ. 1.56 லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ளன. 3.5 இன்ச் லிஃப்ட் கிட்டால் கார் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனாலேயே பல மடங்கு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காட்சியளிக்கின்றது. ஒட்டுமொத்தமாக இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 5.9 இன்ச் அளவுக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாறு மிக உயரமானதாக மாற்றுவதற்கான கிட்டை பொருத்துவதற்கு ரூ. 4.12 லட்சம் அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மிக சிறந்த இயக்க அனுபவத்திற்காக பிராண்ட் நியூ எக்சாஸ்ட் சிஸ்டம் இக்காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எக்சாஸ்ட் மிக ஆழமான நீர் நிலைகளைக்கூட கடக்க உதவும். இந்த செயலுக்காகவே பிரத்யேகமாக இந்த எக்சாஸ்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் மிக முக்கியமான மாற்றமாக 8 ஆயிரம் யூரோக்கள் செலவில் கல்லினன் காரில் ரூஃப் ரேக் பொருத்தப்பட்டுள்ளது. இது கூடாரம் வசதிக் கொண்டது. மேலும், புதிதாக பொருத்தப்பட்டிருக்கும் எக்சாஸ்டால் இக்காரின் எஞ்ஜின் திறனில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

இதோ அதுகுறித்த விபரங்கள்:
விற்பனையில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ வேகம் ஆகும். மேலும், இது வெறும் 4.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட வாகனமாகவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் தற்போது மாறியிருக்கின்றது. புதிய தோற்றம் அக்காரின் அழகை மாற்றியமைக்கும் வகையில் இருந்தாலும், தற்போது இடம் பெற்றிருக்கும் புதிய அம்சங்கள் அதை ரசிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை.
குறிப்பு: முதல் ஐந்தை மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்ட படங்கள்.


Click it and Unblock the Notifications








