அந்த 300 பேருல நம்ம தல தோனியும் ஒருவர் போலிருக்கே.. காரை ரொம்ப நாள் காத்திருந்து வாங்கியிருக்காரு!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கிரிக்கெட் உலகமே தல தோனியின் ரசிகர்களாக இருக்கும் நிலையில், அவரோ வாகனங்கள் மீது அளவு கடந்த காதல் கொண்டவராக இருக்கின்றார். இதற்கு அவரிடத்தில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையே சான்றாகும். எக்கசக்கமான வாகனங்கள் அவரிடத்தில் உள்ளன.

உதாரணமாக நிஸான் ஜுங்கா போன்ற அரிய வகை கார்கள்கூட அவரிடத்தில் இருக்கின்றன. அரிய வகை கார் மட்டுமின்றி அரிய வகை மோட்டார்சைக்கிள்களும் அவரிடத்தில் உள்ளன. இந்த நிலையிலேயே கியா நிறுவனத்தின் விலையுயர்ந்த மின்சார காரை தல தோனி வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் வாயிலாக அவர் ஓர் வாகன காதலர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றார். கியாவின் இவி6 மின்சார காரையே அவர் வாங்கியிருக்கின்றார்.
இந்த லேட்டஸ்ட் காரில் அவரும், அவரது டீம் மேட்டும் வலம் வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கியா நிறுவனம் இந்த கார் மாடலை முதலில் நூறு யூனிட்டுகளை மட்டுமே இந்தாண்டிற்கு விற்பனைச் செய்ய திட்டமிட்டது. ஆனால், அது நினைத்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தற்போது இந்தியாவில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை 200 யூனிட்டுகள் கியா இவி6 எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த காரை 300க்கும் அதிகமானோர் புக் செய்து காத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. அவர்களில் ஒருவர் தல தோனியும் என்பது தற்போது காரை டெலிவரி பெற்றிருப்பதன் வாயிலாக தெரிய வந்துள்ளது. கியா நிறுவனம் இந்த காரை சிபியூ (Completely Built Unit) ஆக விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், இதன் விலை சற்று அதிகம். ரூ. 59.95 லட்சம் என்கிற விலையில் இவி6 விற்பனைச் செய்யப்படுகின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகை உச்சபட்ச விலைக் கொண்ட மின்சார காரையே தோனி தற்போது வாங்கியிருக்கின்றார். இந்த காரை கியா நிறுவனம் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் டிரைவ் எனும் இரட்டைத் தேர்வுகளில் அது விற்பனக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால், பேட்டரி பேக் விஷயத்தில் ஒற்றை தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 528 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அராய் சான்றளிக்கப்பட்ட ரேஞ்ஜ் விபரம் இதுவாகும். இந்த சூப்பரான ரேஞ்ஜிற்காக நிறுவனம் இவி6 காரில் 77.4kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது.
இந்த பேட்டரி பேக்கை 350 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்துகொள்ள முடியும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் வெறும் பதினெட்டே நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜேறிவிடும். இந்தளவு மிக சூப்பரான திறன் கொண்ட காரே கியா இவி6. இதில் ஆடம்பர வசதிகளும் மிக ஏராளமாக இடம் பெற்றிருக்கின்றன. அதாவது, செல்வந்தர்கள் விரும்பக் கூடிய சொகுசு அம்சங்கள் பலவற்றை இந்த கார் தாங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications