புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்

டொயோட்டா நிறுவனம் அதன் அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி மாடலுக்கு அதிரடியாக ரூ.70,000 வரையிலான பணம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்!!

காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கான சந்தை கடந்த சில வருடங்களில் இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதனாலேயே இந்த கார்கள் பிரிவானது தற்சமயம் போட்டி மிகுந்ததாக உள்ளது. இந்த பிரிவில் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்தும் குறைந்தது ஒரு மாடல் ஆவது விற்பனையில் உள்ளது.

புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்!!

இத்தகைய பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது விட்டாரா பிரெஸ்ஸா மாடலை அறிமுகப்படுத்த, அது குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பை பெற துவங்கியது. இதனை நன்கு புரிந்துக்கொண்ட மாருதி சுஸுகியின் கூட்டணி நிறுவனமான டொயோட்டா விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையில் அர்பன் க்ரூஸர் காரை அறிமுகப்படுத்தியது.

புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்!!

ஆனால் விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு இணையாக அர்பன் க்ரூஸர் வாடிக்கையாளர்களால் கண்டுக்கொள்ளப்படவில்லை. பின்னர், மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு மாற்றாக புதிய பிரெஸ்ஸா காரை அறிமுகப்படுத்த, அதே பாணியில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை அறிமுகப்படுத்தியது.

புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்!!

புதிய ஹைரைடரை விற்பனைக்கு கொண்டுவருவதற்கு முன்பாக, தற்போதைய அர்பன் க்ரூஸர் கார்கள் அனைத்தையும் விற்று தீர்க்கும் முனைப்பில் டொயோட்டா உள்ளது. இதன் வெளிப்பாடாகவே தற்போது அர்பன் க்ரூஸர் கார்களுக்கு ரூ.70,000 வரையிலான சலுகைகளை டொயோட்டா டீலர்கள் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பண்டிகை காலத்திற்கான சலுகை கிடையாது.

புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்!!

ஏற்கனவே கூறியதுபோல், ஸ்டாக்கில் உள்ள அர்பன் க்ரூஸர் கார்களை விற்று தீர்க்கும் டொயோட்டாவின் முயற்சியின் வெளிப்பாடே இந்த சலுகை ஆகும். ரூ.70,000 என்பது அர்பன் க்ரூஸர் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக பெறக்கூடிய சலுகைகளின் மதிப்பாகும். குறைந்தது ரூ.50,000 -ஐ இந்த டொயோட்டா காம்பெக்ட் எஸ்யூவி காரில் சேமிக்கலாம்.

புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்!!

குறைந்தப்பட்சமாக இந்த சலுகைகளின் மூலம் ரூ.12,000 பணம் தள்ளுபடி, ரூ.24,000-இல் எக்ஸ்-சேஞ்ச் போனஸ், ரூ.5,000 மதிப்பிலான இலவச ஆக்ஸஸரீகள் மற்றும் ரூ.3,000இல் கார்பிரேட் தள்ளுபடி உள்ளிட்டவற்றை டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இதனால் வரும் மாதங்களில் அர்பன் க்ரூஸர் கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி காணும் என்பது மட்டும் உறுதி.

புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்!!

ஸ்டாக்கில் உள்ள அர்பன் க்ரூஸர் கார்கள் அனைத்தும் விற்று தீர்க்கப்பட்ட பின்னர், தற்போதைய அர்பன் க்ரூஸர் காரின் விற்பனை நிறுத்தப்படும். புதிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாடலை பொறுத்தவரையில், இதுவும் கர்நாடகா மாநிலம் பிடாடி பகுதியில் உள்ள டொயோட்டாவின் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட உள்ளது.

புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்!!

முக்கிய சிறப்பம்சமாக ஹைப்ரிட் என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட உள்ள புதிய ஹைரைடர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி பார்க்கும்போது, ரூ.15.11 லட்சத்தில் இருந்து 18.99 லட்சம் வரையிலான விலைகளில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. ஹைப்ரிட் என்ஜின் மட்டுமின்றி, புதிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாடல் ஏகப்பட்ட வசதிகளையும் புதியவைகளாக பெற்றுவர உள்ளது.

புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்!!

இதில் முக்கியமானதாக, புதிய ஹைரைடர் காரில் வலிமையான ஹைப்ரிட் எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் தன்னிச்சையாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்பட உள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இந்த செல்ஃப்-சார்ஜிங் தொழிற்நுட்பம் இந்தியாவில் அறிமுகமாகுவது இதுவே முதல்முறையாகும்.

புதுசா டொயோட்டா காரை வாங்க இதுதான் நல்ல சான்ஸ்... அர்பன் க்ரூஸர் காருக்கு அதிரடியாக ரூ.70,000 வரையில் சலுகைகள்!!

டொயோட்டாவின் இந்த புதிய எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் என்ஜின், பிராண்டின் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வழங்கப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 59 கிலோவாட்ஸ் & 141 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் அமைப்பில் இ-ட்ரைவ் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக (என்ஜின் & ஹைப்ரிட் சிஸ்டம்) 85 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 9, 2022, 14:07 [IST]
English summary
Discount being offered on toyota urban crusier up to rs 70000
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+