விற்பனைக்கு வந்து பல வருஷங்கள் ஆகுது... இப்பவும் இந்த காரை லாட் லாட்டா டெலிவரி கொடுக்குறாங்க!
கியா டீலர் ஒருவர் ஒரே நாள், ஒரே நேரம், ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் கியா கார்களை டெலிவரி வழங்கியிருக்கின்றார். இதில், செல்டோஸ் கார் மாடல் அதிக எண்ணிக்கையில் டெலிவரி கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

"என்ன சொல்றீங்க, இப்பவும் இந்த காரை லாட் லாட்டாக டெலிவரி கொடுக்குறாய்ங்களா!" என ஆச்சரியத்துடன் கேட்குமளவிற்கு கியா செல்டோஸ் கார்கள் அதிக எண்ணிக்கையில் டெலிவரி கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துள்ளியமாக எத்தனை யூனிட்டு செல்டோஸ் கார்கள் டெலிவரிக் கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய புள்ளி விபரம் தெரியவில்லை. இருப்பினும், அந்த ஒரே நாள், ஒரே நேரம், ஒரே டீலர் வாயிலாக 51க்கும் மேற்பட்ட கியா தயாரிப்புகள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன.

இதில், பத்துக்கும் மேற்பட்டவை கியா செல்டோஸ் கார் மாடலாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. கியா நிறுவனம் இந்திய சந்தையில் செல்டோஸ், சொனெட், கேரன்ஸ் மற்றும் கார்னிவல் ஆகிய கார்கள் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இதன் லேட்டஸ்ட் அறிமுகமாக காட்சியளிக்கின்றது. ஆனால், இந்த டெலிவரி நிகழ்வில் இது பங்களிக்கவில்லை.

கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் மாடலுக்கு இந்திய சந்தையில் மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த டெலிவரி நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. இந்த காருக்கு மட்டுமில்லைங்க நிறுவனத்தின் பிற தயாரிப்புகளான கேரன்ஸ் மற்றும் சொனெட் ஆகியவற்றிற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை இந்த சம்பவம் நமக்கு தெரியப்படுத்தியிருக்கின்றது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலேயே இந்நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. கேரளாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஓணமும் ஒன்று. இந்த பண்டிகையை புதிய காருடன் கொண்டாடும் விதமாகவே கேரள மக்கள் சிலர் புதிய கியா கார்களை அண்மையில் வாங்கியிருக்கின்றனர். அவர்களுக்கே கடந்த 17ம் தேதி அன்று வாகனங்கள் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிகழ்வை திருவிழாவைப் போல் கோலாகலமாக அக்-கியா கார் விற்பனையாளர் அரங்கேற்றியிருக்கின்றார். டி.கே.எச் கியா எனும் டீலரே இந்த தரமான சம்பவத்திற்கு காரணமவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதிக எண்ணிக்கையிலான கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஓர் கல்லூரியின் விளையாட்டு மைதானம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, அதையே விழா மேடையாக மாற்றி அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி வழங்கியிருக்கின்றனர்.

இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இந்திய வாகன உலகையுமிற்குமே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கியா நிறுவனம் இந்தியாவில் கால்தடம் பதித்து களமிறக்கிய முதல் கார் மாடல் செல்டோஸ் ஆகும். 2019ம் ஆண்டிலேயே இந்த காரை இந்தியாவில் கியா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகி சராசரியாக மூன்று ஆண்டுகள் ஆகின்றன.

இருப்பினும், இப்போதும் வரவேற்புக் குறையாமல் அக்காருக்கு மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே கண்ணூர் கியா டெலிவரி நிகழ்வில் அதிக எண்ணிக்கையில் செல்டோஸ் கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது பலருக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.

கியா செல்டோஸ் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், பன்முக டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இந்த வாகனம் இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளிட்ட வாகன மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.

கியா செல்டோஸ் இந்தியாவில் ரூ. 10.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், நிறுவனத்தின் அடுத்த அமோகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் காராக சொனெட் இருக்கின்றது. இந்த வாகனத்தை கியா நிறுவனம் 2020ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த காரிலும் பன்முக மோட்டார் தேர்வுகள் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மிக தெளிவாகக் கூற வேண்டும் எனில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இது ஓர் சப்-4 மீட்டர் காராகும். இந்தியாவின் இந்த வாகன பிரிவில் டாடா நெக்ஸான் மிக சூப்பரான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த வாகனத்திற்கும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மொத்தம் ஆறு ட்ரிம்களில் சொனெட் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 7.49 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றைத் தொடர்ந்து, கேரன்ஸ் எம்பிவி மற்றும் கார்னிவல் சொகுசு எம்பிவி ஆகிய கார் மாடல்களும் அதிக எண்ணிக்கையில் இந்த நிகழ்வில் டெலிவரிக் கொடுக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த மாடல்கள் எத்தனை யூனிட்டுகள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய துள்ளியமான விபரங்கள் வெளியாகாத காரணத்தினால் எங்களால் அதுகுறித்த தகவலை விரிவாக தெரிவிக்க முடியவில்லை. இதுபோன்று, கியா கார்கள் அதிக எண்ணிக்கையில் டெலிவரி கொடுப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
Source: Topspec


Click it and Unblock the Notifications








