நம்ம ஊருலையும் இப்படி ஒரு ஆம்புலன்ஸ் இருந்தா செம்மையா இருக்கும்... ரொம்ப சீக்கிரமே ஆஸ்பத்திரி போய்டலாம்!

உலகின் மிக மிக விலையுயர்ந்த ஆம்புலன்ஸ் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

நம்ம ஊருலையும் இப்படி ஒரு ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்தா சூப்பரா இருக்கும்... ஆனா என்ன விலைதான் மயக்கத்த வரவைக்குது!

உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களில் துபாயும் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. உலகின் வேறெந்த பகுதிகளிலும் காண முடியாத விலையுயர்ந்த கார்களை இந்த நகரத்தில் மிக சுலபமாக நம்மால் காண முடியும். நகரத்தின் காவல்துறை தொடங்கி பல முக்கிய துறைகளிலும்கூட விலையுயர்ந்த மற்றும் அதி-வேக கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நம்ம ஊருலையும் இப்படி ஒரு ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்தா சூப்பரா இருக்கும்... ஆனா என்ன விலைதான் மயக்கத்த வரவைக்குது!

இந்த நிலையில் துபாய் கார்பரேஷன் ஆஃப் ஆம்புலன்ஸ் சர்வீசஸ் (Dubai Corporation of Ambulance Services) உலகின் மிக அதிக வேக மற்றும் விலையுயர்ந்த ஆம்புலன்ஸ் காரை வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாய் எக்ஸ்போ (Dubai Expo)-விலேயே கார் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நம்ம ஊருலையும் இப்படி ஒரு ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்தா சூப்பரா இருக்கும்... ஆனா என்ன விலைதான் மயக்கத்த வரவைக்குது!

ஹைபர் ஸ்போர்ட் ரெஸ்பாண்டர் (HyperSport Responder) எனும் பெயரில் அந்த ஆம்புலன்ஸ் வாகனம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இக்காரின் உண்மை பெயர் 'லைகன் ஹைபர்ஸ்போர்ட்' (Lykan HyperSport) ஆகும். இது ஓர் அல்ட்ரா-ரேர் ஹைபர் ரக காராகும்.

நம்ம ஊருலையும் இப்படி ஒரு ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்தா சூப்பரா இருக்கும்... ஆனா என்ன விலைதான் மயக்கத்த வரவைக்குது!

இதனையே ஆம்புலன்ஸாக துபாய் கார்பரேஷன் ஆஃப் ஆம்புலன்ஸ் சர்வீசஸ் மாற்றியிருக்கின்றது. டபிள்யூ மோட்டார்ஸ் (W Motors) வாயிலாகவே இவ்வாகனம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாகவே ஏழு யூனிட்டுகள் மட்டுமே லைகன் ஹைபர் ஸ்போர்ட் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு யூனிட்டிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 26 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நம்ம ஊருலையும் இப்படி ஒரு ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்தா சூப்பரா இருக்கும்... ஆனா என்ன விலைதான் மயக்கத்த வரவைக்குது!

இந்த மிக உச்சபட்ச விலையிலேயே லைகன் ஹைபர் ஸ்போர்ட் விற்கப்படும். இந்த கார் மிக மிக அதிக விலைக் கொண்டது மட்டுமல்ல. அது, மிக அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதும்கூட. உச்சபட்சமா மணிக்கு 400 கிமீ வேகத்தில் இயங்கும் திறனை இக்கார் கொண்டிருக்கின்றது. மேலும், சூப்பர் ஃபாஸ்ட் வேகமாக வெறும் 2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை அது எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது.

நம்ம ஊருலையும் இப்படி ஒரு ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்தா சூப்பரா இருக்கும்... ஆனா என்ன விலைதான் மயக்கத்த வரவைக்குது!

440 டைமண்டுகள், தங்க பிளேட்டால் உருவாக்கப்பட்ட மேற்கூரை மற்றும் தங்க தையல்களால் இக்கார் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு சிறப்புகளை இக்கார் கொண்டிருக்கின்றன காரணத்தினாலேயே அதற்கு மிக மிக அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நம்ம ஊருலையும் இப்படி ஒரு ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்தா சூப்பரா இருக்கும்... ஆனா என்ன விலைதான் மயக்கத்த வரவைக்குது!

இத்துடன், உலகிலேயே முதல் முறையாக 3டி ஹாலோகிராம் ஹாலோகிராஃபிக் மிட்-ஏர் டிஸ்பிளேவும் வழங்கப்பட்டுள்ளது. இதனை பிரத்யேகமாக சைகைகள் (மோஷன்) வாயிலாக கன்ட்ரோல் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரை கார்பன் ஃபைபரால் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

நம்ம ஊருலையும் இப்படி ஒரு ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்தா சூப்பரா இருக்கும்... ஆனா என்ன விலைதான் மயக்கத்த வரவைக்குது!

இது அதிக உறுதியானது மற்றும் எடைக் குறைவானதாக இருக்கின்றது. இத்துடன், மேலே பார்த்த சிறந்த இயக்க அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக காரில் 3756 சிசி திறனை வெளியேற்றக் கூடிய இன்லைன் 6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 780 பிஎச்பி மற்றும் 960 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

நம்ம ஊருலையும் இப்படி ஒரு ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்தா சூப்பரா இருக்கும்... ஆனா என்ன விலைதான் மயக்கத்த வரவைக்குது!

இத்தகைய மிக சிறப்பான சூப்பர் காரை துபாய் அதன் ஆம்புலன்ஸ் சேவையில் இணைத்திருக்கின்றது. இதன் வாயிலாக புதிய தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தும் உலகின் முன்னணி நகரமாக துபாய் மாறியிருக்கின்றது. அவசர காலத்தில் ஏற்பாடும் காலை இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு இந்த சூப்பர் ஃபாஸ்ட் கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 28, 2022, 16:16 [IST]
English summary
Dubai now has rs 26 crore world s fastest ambulance car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+