கார் லோனை அடைக்க இவ்ளோ ஸ்மார்ட்டான வழிகள் இருக்கா... இந்த டிப்ஸ் பேங்க் ஸ்டாஃப்கூட உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

வங்கி கடனில் காரை வாங்குபவர்களே இந்தியாவில் அதிகம். இதுபோன்று காரை லோனில் வாங்கிட்டு கட்ட அவஸ்தபடுறீங்களா?, சிரமமே இல்லாம லோனை எப்படி அடைப்பது என்பதற்கான வழிகளையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். இந்த விஷயங்களை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க உங்க வாகன கடன் உங்களுக்கு பெரிய சுமையாகவே தெரியாது.

இந்தியாவின் மிக மிக குறைவான விலை கார் மாடல்களாக ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, க்விட் மற்றும் செலிரியோ ஆகியவை இருக்கின்றன. இவற்றின் விலை ரூ. 5.5 லட்சத்திற்கும் குறைவாகும். ஆனால் இத்தகைய விலைக் குறைவான கார்களே பலருக்கு எட்டாக் கனியாக இருப்பதை நாம் ஒப்புக் கொண்டதுதான். அதாவது, இப்போதும் நம் நாட்டில் மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களை வாங்க முடியாத சூழலில் லட்சக் கணக்கான வசித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியானோரின் வாகன கனவை நிறைவேற்றும் விதமாக வங்கிகள் வாகன கடன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கடனை வாங்கியவர்கள் சிரமம் இன்றி சுலபமாக அதை அடைப்பதற்கான வழிக்காட்டுதல்கள் சிலவற்றையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். ஐந்து ஸ்மார்ட்டான வழக்காட்டுதல்களே இந்த பதிவில் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன. இவை நீங்கள் வங்கிக் கடனில் காரை வாங்கியிருந்தால் அதனை எவ்வாறு சுலபமாக அடைக்கலாம் என்பதற்கு உதவியாக இருக்கும்.

பலருக்கு ஆரம்பத்தில் எளிதாக இருக்கும் வாகன கடன் நாளடைவில் அது பெரும் சுமையாக மாற நேரலாம். இதன் விளைவாக சிலர் தங்களின் வாகனங்களை விற்க முன் வருகின்றனர். ஆசை ஆசையாக வாகனம் வாங்கப்பட்டிருந்தாலும், நிதி நெருக்கடி அவர்களை இந்த நிலைக்கு தள்ளிவிடுகின்றது. இதுபோன்ற இக்கட்டான சூழலை தவிர்க்க என்ன வழிகள் உள்ளன என்பதையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதவிற்குள் போகலாம்.

காரை வாங்கும் முன்பே யோசிக்க வேண்டும்:

கையில இருக்க காசு அல்லது மாசம் எவ்வளவு தொகை நம்மால் கட்ட முடியும் என்பதன் அடிப்படையிலேயே நாம் காரை தேர்வு செய்ய வேண்டும். மாசம் 18 ஆயிரம் ரூபா மட்டுமே கட்ட முடியும் என்கிற சூழலில் நாம் இருக்க, 20 லட்ச ரூபா காரை வாங்க திட்டமிட்டால் அந்த கடனுக்காக நம்முடைய வாழ்நாள் முழுக்க நாம் உழைக்க வேண்டியிருக்கும். எனவேதான் நம்முடைய நிதி வலிமையைப் பொருத்து காரை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இதுமட்டுமின்றி, காஸ்ட்லியான கார்களை பராமரிப்பதும் அதிக செலவை வழங்கும். ஆகையால், தொடர் செலவு, மாத வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கார்களை தேர்வு செய்யுங்கள். இது நிச்சயம் ஒரு போதும் உங்களுக்கு எதிர் காலத்தில் சுமையாக மாறாது.

இஎம்ஐ கூடுதலாக செலுத்தலாம்:

மாசமான 15 ஆயிரம் ரூபா கட்டுற மாதிரி லோன் போட்டு காரை எடுத்திருக்கீங்க வச்சிக்கோங்க. இந்த கடன் தொகையுடன் ஆயிரம் ரூபா அல்லது 500 ரூபா என உங்களால் முடிந்த தொகையை கூடுதலாக செலுத்தலாம். நம்மிடம் இந்த மாதம் கூடுதலாக வருமானம் வந்திருக்கு என்கின்ற நிலையில் இவ்வாறு செய்யலாம். இதுபோல் இஎம்ஐ-யைத் தாண்டி அதிகத் தொகையைச் செலுத்துவதன் வாயிலாக காரின் கடன் சுமையில் இருந்து லேசான சுமையைக் குறைக்க முடியும். ஒவ்வொரு மாதமும் ரூ. 500 அல்லது ரூ. 1,000 வரை கூடுதலாக செலுத்துகின்றோம் என வைத்துக் கொள்ளுங்கள் அந்த ஆண்டு மட்டும் நாம் எக்ஸ்ட்ராவாக 6 ஆயிரம் ரூபா முதல் 12 ஆயிரம் ரூபா வரை செலுத்தியிருப்போம். இவ்வாறு, அதிக கட்டணத்தைச் செலுத்துவதன் வாயிலாக நமக்கு விதிக்கப்படும் இன்டரஸ்டும் குறையும்.

டவுண்பேமென்ட் எக்ஸ்டாராகவே கட்டிடுங்க:

நாம் வாங்கக் கூடிய கடனை பொருத்தே நமக்கான பாரமும் அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவேதான், வாகனத்தின் விலையில் பாதியை முன் தொகையாக செலுத்த வேண்டும் என்கின்றனர். உதாரணமாக டாடாவின் அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட நெக்ஸான் காரின் ஆரம்ப நிலை வேரியண்டை வாங்க பிளான் போட்டிருக்கீங்க வச்சுக்கோங்க, அந்த காரின் விலையில் பாதியை முன் தொகையை செலுத்த வேண்டும். இந்த காரின் விலை ரூ. 7.7 லட்சம் ஆகும். இதில் பாதி தொகையை செலுத்துவதனால் காரின் முழு தொகைக்கு இல்லாமல் 3.5 லட்சத்திற்கு மட்டுமே வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் நீண்ட காலத்திற்கு உங்களால் பலனை அனுபவிக்க முடியும்.

கடனை முன் கூட்டியே முடித்தல் அல்லது பெருந்தொகையை முன் கூட்டியே செலுத்துதல்:

நாம் எதிர்பார்த்திராத ஓர் பெருந்தொகை திடீரென நம் கைகளுக்கு வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த தொகையை அப்படியே வைத்திருக்காமல், அதில், லாபம் தரும் வழியில் செலவு செய்யலாம். குறிப்பாக, நமக்கு வாகன கடன் இருக்கும் என்றால் அந்த கடனை முழுமையாக அடைக்க முயற்சி செய்யலாம். இல்லை ஓரளவு பணத்தை மட்டுமே செலுத்த விரும்புகின்றேன் என்றாலும், அவ்வாறும்கூட செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக நாம் மாதந்தோறும் செலுத்திக் கொண்டிருக்கும் இஎம்ஐ தொகைக் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, சுமை பெருமளவில் குறையும்.

தேவையற்ற செலவுகளை குறைக்கலாம்:

தேவையற்ற செலவுகளை குறைத்து அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை வாகன கடனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நம்மில் பலர் காசை இரு மடங்காக சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் தேவையற்ற சிலவற்றில் முதலீடு செய்கின்றனர். சிலர் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் பணத்தை போட்டு நஷ்டம் அடைகின்றனர். இதுபோன்று தேவையில்லாமல் பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக அந்த தொகையை வாகன கடனுக்கு பயன்படுத்தலாம். இதுமட்டுமின்றி, இன்னும் பலர் தங்களுடைய பணத்தை மது, புகை என செலழித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களும் அந்த தொகையை மிச்சப்படுத்தி வாகன கடனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையற்ற செலவுகளை இஎம்ஐ பேமெண்டை பாதிக்கச் செய்யக் கூடிய முதல் விஷயமாக இருக்கின்றது. ஆகையால், தேவையற்ற செலவை வழங்கக் கூடிய இந்த மாதிரியான செயல்களைத் தவிர்த்தல் மிக மிக அவசியமாக இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Easiest way to pay car loan
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X