இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை ஒவ்வொரு வருடமும் மெல்ல மெல்ல விரிவடைந்து வருவதை பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நீங்களே கண்கூடாக பார்த்து வருகிறீர்கள். இருப்பினும் இந்த நிலை தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்கிற நிலையிலேயே உள்ளது. ஏனெனில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கை என்று பார்த்தால் மிக குறைவுதான்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

அதேபோல் எலக்ட்ரிக் கார்களும் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தற்போதைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை வெளிக்காட்டும் விதத்தில் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இப்போதைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் தனது முழு கவனத்தை செலுத்தி வருவதுபோல் தெரிகிறது. ஏனெனில் இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் இரு எலக்ட்ரிக் கார்களே (நெக்ஸான் இவி, டிகோர் இவி) இந்தியாவில் தற்போதைக்கு அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களாக விளங்குகின்றன.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

கடந்த 2022 பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரையில், டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் இரண்டும் மொத்தம் 2,264 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் சுமார் 421.6% அதிகரித்துள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால், அந்த மாதத்தில் நெக்ஸான் இவி எஸ்யூவி என்கிற ஒற்றை எலக்ட்ரிக் காரை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துவந்தது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

ஆனால் தற்சமயம் நெக்ஸான் இவி உடன் டிகோர் இவி மாடலையும் டாடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. டிகோர் செடான் மாடலின் புதிய எலக்ட்ரிக் வெர்சன் கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. நெக்ஸான் இவி-ஐ காட்டிலும் விலை குறைவானதாக கொண்டுவரப்பட்டுள்ளதால், எதிர்பார்த்ததை போல் டிகோர் இவி மாடலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

இதனுடன் டிகோர் சிஎன்ஜி காரும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. டாடா நெக்ஸான் இவி-ஐ பொறுத்தவரையில், இது 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் காராக விளங்கும் நெக்ஸான் இவி-யின் புதிய அப்டேட் வெர்சனை வடிவமைக்கும் பணிகளில் தற்சமயம் டாடா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இது சுமார் 400கிமீ ரேஞ்சை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் எம்ஜி மோட்டார் உள்ளது. இருப்பினும் டாடா நிறுவனத்திற்கும் எம்ஜி நிறுவனத்திற்கும் இடையே இந்த பிரிவில் ஏணி வைத்தால்தான் எட்டும்போல. ஏனெனில் டாடாவின் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டும் தற்போதைய சூழலில் இதற்கடுத்துள்ள எம்ஜி மோட்டார் 200 யூனிட்களுக்கும் குறைவாகவே விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்கிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த எம்ஜி பிராண்டில் இருந்து தற்போதைக்கு இசட்.எஸ் இவி என்கிற ஒற்றை எலக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 38 ஆகும். ஆனால் 2021 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 127 இசட்.எஸ் இவி-களை எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் எம்ஜி இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் விற்பனை கிட்டத்தட்ட 70% குறைந்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

ஆனால் வரும் மாதங்களில் இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் புதிய இசட்.எஸ் ஃபேஸ்லிஃப்ட் இவி காரினை எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தியது. எக்ஸைட் & எக்ஸ்க்ளூசிவ் என்கிற இரு விதமான ட்ரிம் நிலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.99 லட்சங்கள் மற்றும் ரூ.25.88 லட்சங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

இவற்றை தொடந்து மஹிந்திரா இந்த வரிசையில் 3வது இடத்தை பிடிக்கிறது. மஹிந்திராவின் தற்போதைக்கு ஒரேயொரு எலக்ட்ரிக் காராக விற்பனை செய்யப்படும் இவெரிட்டோ கடந்த மாதத்தில் 12 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை இவ்வாறு மிகவும் சுமாராகவே தற்போதைக்கு இருந்துவரும் நிலையில், மஹிந்திரா இவெரிடோ கார்களின் விற்பனை 2021 பிப்ரவரியை காட்டிலும் 2 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தற்போதைக்கு இந்த அளவில்தான் உள்ளதா!! இங்கும் டாடாவின் ஆதிக்கம்!

இந்தியாவின் புதிய எலக்ட்ரிக் கார்களான பிஒய்டி இ6 மற்றும் ஆடி இ-ட்ரான் சொகுசு எலக்ட்ரிக் கார்கள் முறையே கடந்த பிப்ரவரி மாதத்தில் 10 மற்றும் 7 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா நெக்ஸான் இவி-க்கு போட்டி மாடலாக எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் இவற்றிற்கும் கீழே உள்ளது. 2021 பிப்ரவரியில் 17 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் கார் கடந்த மாதத்தில் வெறும் 7 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 13, 2022, 8:30 [IST]
English summary
Electric car sales feb 2022 tata motors dominates
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+