2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு மெல்ல மெல்ல வளர்ச்சியை கண்டு வருவதை பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு நாளுக்கு நாள் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.

2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

குறிப்பாக இ-ஸ்கூட்டர்கள் மூலமாகவே எலக்ட்ரிக் வாகன பயன்பாடு நம் நாட்டில் அதிகரித்து வருகிறது என்றாலும், எலக்ட்ரிக் காரை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2021ஆம் காலண்டர் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதியது புதியதாக களமிறங்கி வருகின்றன. ஆனால் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் தற்போதைக்கு டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார், ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா என 4 நிறுவனங்கள் மட்டுமே ஈடுப்பட்டு வருகின்றன. இந்த 4 பிராண்ட்களில் இருந்து மொத்தம் 5 எலக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் மட்டும் நெக்ஸான் இவி & டிகோர் இவி என இரு எலக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்தி வருகிறது. ஒட்டுமொத்தமாக கடந்த 2021ஆம் ஆண்டில் 14,690 எலக்ட்ரிக் கார்கள் இந்திய வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டுள்ளன. இது முந்தைய 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாகும். இதில் இருந்து எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக்கை நம்பியே உள்ளது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது.

2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

இத்தகைய விற்பனை எண்ணிக்கை புதிய பிராண்ட்களை இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார்களை தைரியமாக அறிமுகப்படுத்த ஊக்கப்படுத்தும். எதிர்பார்த்ததை போன்று, கடந்த ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் இவி விளங்குகிறது. சென்ற 2021இல் மொத்தம் 9,111 நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

அதுவே 2020இல் 2,529 நெக்ஸான் எலக்ட்ரிக் கார்களையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் நெக்ஸான் இவி-யின் உள்நாட்டு விற்பனை வருடம்-வருடம் ஒப்பீடுகையில் சுமார் 260.2% அதிகரித்துள்ளது. 2020இல் கொரோனா வைரஸினால் நாடு தழுவிய முழு ஊரடங்கு கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு அமலில் இருந்தது என்றாலும், கடந்த 2021ஆம் ஆண்டிலும் கொரோனா இரண்டாவது அலை பரவல், குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை என இந்திய ஆட்டோமொபைல் துறை சில இடையூறுகளை சந்தித்தது.

2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

எனவே, நெக்ஸானின் கடந்த ஆண்டு விற்பனையிலும் 9,111 என்கிற எண்ணிக்கையை டாடா மோட்டார்ஸ் எளிதாக எட்டிவிடவில்லை. கடந்த ஆண்டில் இந்தியாவில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையில் டாடா நெக்ஸான் இவி மட்டுமே கிட்டத்தட்ட 62 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நெக்ஸான் இவி-இல் தற்சமயம் 30.2kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது.

2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

நெக்ஸான் இவி-க்கு அடுத்து கடந்த 2021இல் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் காராக எம்ஜி மோட்டாரின் இசட்.எஸ் இவி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 2,798 எம்ஜி இசட்.எஸ் இவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2020இல் நெக்ஸான் இவி விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும். 2020இல் இசட்.எஸ் இவி கார்கள் 1,142 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டன.

2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

இந்த வகையில் இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரின் விற்பனை கடந்த 2021இல் கிட்டத்தட்ட 145% அதிகரித்துள்ளது. விற்பனையில் இசட்.எஸ் இவி-ஐ மிக நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு டாடா மோட்டார்ஸின் மற்றொரு எலக்ட்ரிக் காரான டிகோர் இவி செடான் 2,611 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இருப்பினும் இந்த நிலை கடந்த ஆண்டில் மட்டுமே ஆகும். அதாவது, நடப்பு 2022ஆம் ஆண்டின் விற்பனையில் நிச்சயமாக டிகோர் இவி, எம்ஜி இசட்.எஸ் இவி-ஐ முந்தும்.

2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

யார் கண்டது, நெக்ஸான் இவி-ஐ கூட முந்தலாம். ஏனெனில் 2,611 என்கிற இதன் கடந்த ஆண்டின் விற்பனை எண்ணிக்கையானது கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பதிவு செய்யப்பட்டவை ஆகும். ஏனெனில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் தான் தனி பயன்பாட்டிற்கான டாடா டிகோர் இவி அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு வரையில் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான டிகோர் இவி செடான் கார்கள் மட்டுமே விற்பனையில் இருந்தன.

2021இல் சுமார் 9 ஆயிரம் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை- 2வது இடத்தில் எந்த எலக்ட்ரிக் கார் தெரியுமா?

இவை மூன்றும் தான் கடந்த ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களாகும். இதற்கு அடுத்து உள்ளவை 150 யூனிட்களுக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டவை ஆகும். இந்த வகையில், இந்த லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் உள்ள ஹூண்டாய் கோனா இவி மற்றும் மஹிந்திரா இ-வெரிடோ எலக்ட்ரிக் கார்களின் கடந்த ஆண்டு விற்பனை எண்ணிக்கை முறையே 121 மற்றும் 49 ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 1, 2022, 7:30 [IST]
English summary
Electric car sales in 2021 tata motors led the way
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+