பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா ?

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார்களின் விலை தற்போது குறைந்துள்ளது. இதனால் பெட்ரோலை விட எலெக்ட்ரிக் கார் தான் லாபகரமாக மாறியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகமாக இருந்து வருகிறது. மக்கள் பலர் பெட்ரோல் கார்களை வாங்குவதை விட எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

இதற்கு முக்கியமான காரணம் எலெக்டரிக் கார்களுக்கு பராமரிப்பு செலவு குறைவு மற்றும் போக்குவரத்திற்கான செலவும் குறைவு இதனால் பலர் அதை விரும்புகின்றனர். அரசும் மாசு காரணமாக எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கிறது.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி ஒரு கூட்டத்தில் பேசும் போது இந்தியாவில் வரும் 2023ம் ஆண்டு எலெக்ட்ரிக் கார்களின் விலை பெட்ரோல் கார்களை விடக் குறைவாக இருக்கும். இதனால் மக்களுக்கு பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் லாபகரமாக இருக்கும் எனப் பேசினார். நாம் தற்போது நவம்பர் மாதத்தில் இருக்கிறோம். இன்னும் 60 நாட்களில் 2023ம் ஆண்டு பிறந்துவிடும். அமைச்சர் சொன்னது நிறைவேறச் சாத்தியம் இருக்கிறதா? இது பற்றி முழுமையாகக் காணலாம்.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

இதைப் பற்றி யோசித்தால் நாம் அமைச்சர் சொன்ன விஷயத்தைக் கிட்டத்தட்ட எட்டிவிட்டோம் என்றே சொல்லி விடலாம். அட என்ன எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் அதிக விலையில் இருக்கிறதே பின்னர் எப்படி இது சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம். இதற்காக நாம் இந்தியாவிலேயே குறைந்தவிலையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காரான டாடா டியாகோ இவி காரை கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த காரில் பெட்ரோல் வேரியன்டும் இருக்கிறது. எலெக்ட்ரிக் வேரியன்டும் இருக்கிறது.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

இந்த இரண்டு காரின் விலையையும் முதலில் ஒப்பிடுவோம். டாடா டியாகோ இவி கார் ரூ8.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் முழுவதும் ஆட்டோமெட்டிக் கார். இதனால் இந்த காரை டாடா டியாகோ பெட்ரோல் ஏஎம்டி காருடன் ஒப்பிட வேண்டும். அந்த காரின் விலையுடன் ஒப்பிட வேண்டும். அப்படி என்றால் டியாகோ பெட்ரோல் எக்ஸ்டிஏ ஏஎம்டி கார் ரூ7.61 லட்சம் என் விலையில் விற்பனைக்கு வருகிறது

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

அப்படி என்றால் பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ1.5 லட்சம் குறைவாகத் தான் இருக்கிறது. இதற்கு இன்சூரன்ஸ், அது இது என ஆன்ரோடிற்கு வரும் போது ரூ9 லட்சத்தை தொட்டு விடும். அதனால் இந்த இரண்டிற்கு விலை வித்தியாசம் பெரிய அளவில் இல்லை. கிட்டத்தட்ட பெட்ரோல் காரின் விலைக்கே எலெக்ட்ரிக் காரும் வந்துவிட்டது. எனச் சொல்லலாம்.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

ஆனால் இரண்டு காருக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பெட்ரோல் கார், சிட்டி பயன்பாடு மற்றும் நீண்ட தூரப் பயன்பாடு ஆகிய இரண்டு பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும். டியாகோ பெட்ரோல் காரில் முழு டேங்க் பெட்ரோல் போட்டால் நிறுத்தாமல் குறைந்தது 500 கி.மீ பயணம் செய்யலாம். ஆனால் டியாகோ இவி காரில் அப்படியல்ல முழு சார்ஜில் 150-200 கி.மீ வரை மட்டுமே பயணிக்க முடியும்.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

இந்தியாவில் சார்ஜிங் கட்டமைப்பு அந்த அளவிற்கு வளர்ச்சியடையவில்லை. எலெக்ட்ரிக் காரை நம்பி நீண்ட தூரப் பயணம் எல்லாம் சாத்தியமில்லை. ஆனால் எலெக்ட்ரிக் கார்களை நம்பி சிட்டி பயணத்தைத் தைரியமாக மேற்கொள்ள முடியும். இரண்டின் பயண செலவையும் ஒப்பிட்டால் எலெக்ட்ரிக் கார் மிகக் குறைந்த செலவிலேயே இயங்கும் திறன் கொண்டது. பெட்ரோல் காருக்கு செலவு அதிகமாக இருக்கும்.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

சார்ஜிங் கட்டமைப்பு இல்லை என்பது தற்காலிக பிரச்சனை தான் வருங்காலத்தில் சார்ஜிங் கட்டமைப்பை பெரியதாக விரிவாக்க அரசு மற்றும் பல தனியார் நிறுவனங்கள் ஆங்காங்கே பல சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவி வருகின்றனர். இந்த கட்டமைப்பு மட்டும் இந்தியாவில் சீராகிவிட்டால் எலெக்ட்ரிக் கார்கள் நிச்சயம் நீண்ட தூரப் பயன்பாட்டிற்கும் ஏற்றதாக இருக்கும். அதனால் அமைச்சர் சொன்னது சிட்டி பயன்பாட்டிற்கு மட்டும் சாத்தியமாகியுள்ளது.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

அதாவது சிட்டி பயன்பாட்டிற்கு மட்டும் பெட்ரோல் காரின் விலையிலேயே எலெக்ட்ரிக் காரும் வந்துவிட்டது. பெட்ரோல் காரை விடக் குறைந்த செலவிலேயே எலெக்ட்ரிக் காரை இயக்க முடியும். 2022ம் ஆண்டே அமைச்சர் சொன்னது கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. 2023ம் ஆண்டில் எம்ஜி நிறுவனம் வெளியிடும் கார் குறைந்த விலையில் வந்தால் இது மேலும் சாத்தியமாகும். ஆனால் இது முழுமையாக சாத்தியமாக இந்தியாவில் போதுமான சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் வர வேண்டும்.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

எலெக்ட்ரிக் காரை பொருத்தவரை சிட்டி பயன்பாடு, அதுவும் தினமும் 100 கி.மீ வரை பயணம் என்றால் மிகவும் லாபகரமாக இருக்கும். அப்படி ஒருவர் கார் ஓட்ட வேண்டும் என்றால் அது கேப் டிரைவராக இருக்க வேண்டும். அதனால் வருங்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் கேப் தொழிலுக்கு மிகவும் ஏற்றதாக மாறும், விலையும் குறைவாக இருக்கும். இதனால் ஓட்டுநர்களுக்கும் லாபமாக இருக்கும்.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

எலெக்ட்ரிக் வாகனங்கள் எல்லாம் விலை குறைய வேண்டும் என்றால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி விலை குறைய வேண்டும். இதற்காக பின்னால் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் பேட்டரிகளை தயாரிக்கத் தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. தற்போது லித்தியம் அயான் பேட்டரியில் உள்ள 81 சதவீதமான பொருட்கள் இந்தியாவிலேயே கிடைக்கிறது.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

இது 100 சதவீதமாக மாறினால் பேட்டரியின் விலை பல மடங்கு குறையும். அப்படிக் குறைந்தால் எலெக்ட்ரிக் கார், பைக், ஸ்கூட்டர்களின் விலையும் தாறுமாறாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு 2 ஆண்டுகள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் எலெக்ட்ரிக் பஸ்களின் விலையும் அதிகமாகக் குறையும். இதனால் டீசல் பஸ்களை எல்லாம் எலெக்ட்ரிக் பஸ்களாவே மாற்றலாம்.

பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் எல்லா விதத்திலும் லாபம் எப்படித் தெரியுமா . . .

மேலும் லித்தியம் அயான் பேட்டரிகளை போல மெட்டல் அயான், மெட்டல் ஏர் பேட்டரி தொழிற்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இது வெற்றி பெற்றாலும் விரைவிலேயே குறைந்த விலையில் பேட்டரி என்பது சாத்தியமாகி எலெக்ட்ரிக் வாகனங்களில் விலையும் குறையும். இப்படி நடந்தால் பெட்ரோல் வாகனங்கள் எல்லாம் காணாமலேயே போகும் வாய்ப்பும் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 2, 2022, 17:25 [IST]
English summary
Electric cars became more affordable than petrol cars know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+