டாடா, மாருதி, ஹூண்டாய்.. எல்லாருமே ஒரே இடத்துல வச்சு அவங்களோட புதிய எலெக்ட்ரிக் கார்களை காட்சிப்படுத்த போறாங்க

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரே இடத்தில் வைத்து அதன் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வெகுவிரைவில் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. இந்த உலக புகழ்பெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் எதிர்கால மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் வாகன மாடல்களை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்தவகையில், 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

எலெக்ட்ரிக் கார்

மாருதி சுஸுகி எஸ்யூவி எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்:

மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்காலத்தில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை இந்திய ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதுவே நிறுவனம் இந்தியாவில் காட்சிப்படுத்தும் முதல் எலெக்ட்ரிக் காராகும். ஒய்ஒய்8 கோடு பெயரைக் கொண்டே நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை குறிப்பிட்டு வருகின்றது. இந்த மின்சார காரை நிறுவனம் 2025ம் ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகியிருக்கும் தகவல்களும் இதையே கூறுகின்றன.

டொயோட்டா நிறுவனத்தின் 27 பிஎல் பிளாட்பாரத்தை மையப்படுத்தியே இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. 48 kWh மற்றும் 59 kWh என இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பேட்டரி பேக் ஓர் ஃபுல் சார்ஜில் 400 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது ஒன்று ஃபுல் சார்ஜில் 500 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் திறன் கொண்டது. இத்துடன், டூல் வீல் டிரைவ் தேர்வு மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய தேர்வுகளிலும் மாருதி சுஸுகியின் இந்த எலெக்ட்ரிக் கார் கிடைக்க இருக்கின்றது.

எம்ஜி இவி

பிரபல இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்ஜி நிறுவனம், இந்திய ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்தி இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. எம்ஜி ஏர் 2 டூர் இவி மற்றும் எம்ஜி 4 இவி ஆகிய இரு கார் மாடல்களையே ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி காட்சிப்படுத்த இருக்கின்றது. எம்ஜி ஏர் பட்ஜெட் மின்சார கார் பிரியர்களைக் கவரும் பொருட்டு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் அக்காரை காட்சிப்படுத்த திட்டமிட்டிருக்கின்றது.

இதைக்காட்டிலும் பல மடங்கு சிறப்பு வசதிமிக்கதாக எம்ஜி 4 இவி இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ரக காராகும். யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் எனும் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை நிறுவனம் தனது எஸ்ஏஐசி மாடுலர் ஸ்கேளபிள் பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இந்த காரை உருவாக்கி இருக்கின்றது. இது 51 kWh மற்றும் 64 kWh என்கிற இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

51 kWh பேட்டரி பேக் தேர்வில் ஓர் ஃபுல் சார்ஜில் 350 கிமீ ரேஞ்ஜையும், 64 kWh பேட்டரி பேக்கில் ஓர் ஃபுல் சார்ஜில் 452 கிமீ ரேஞ்ஜையும் பெற்றுக் கொள்ள முடியும். முன்னதாக பார்த்த ஏர் 2 எலெக்ட்ரக் கார் உல்லிங்க ஏர் இவி-யை தழுவி உருவாக்கப்பட்ட கார் மாடல் ஆகும். இந்த காரை மார்ச் 2023 ஆம் ஆண்டிற்குள் எம்ஜி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நகரவாசிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே இது ஆகும். இதனையும் இரு விதமான பேட்டரி பேக் தேர்வில் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

ஹூண்டாய் மின்சார கார்கள்:

ஹூண்டாய் ஐயோனிக் 6 மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 ஆகிய இரு எலெக்ட்ரிக் கார்களையே ஹூண்டாய் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த இரு எலெக்ட்ரிக் கார்களுக்கும் உலக அளவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றையே வெகு விரைவில் இந்திய சந்தையில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதில் ஏற்கனவே ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 1 லட்சம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 429 கிமீ தொடங்கி 583 கிமீ வரையில் ரேஞ்ஜ் வழங்கும் திறன் கொண்டவை.

டாடா மின்சார கார்கள்:

டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே இந்திய சந்தையில் நெக்ஸான், டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார் மாடல்களில் எலெக்ட்ரிக் கார் தேர்வுகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றுடன் வெகு விரைவில் இன்னும் சில கார் மாடல்களையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த எதிர்கால தயாரிப்புகளை விரைவில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் டாடா காட்சிப்படுத்த இருக்கின்றது. அல்ட்ராஸ் இவி, பஞ்ச் இவி, கர்வ் மற்றும் அவின்யா எனும் நான்கு எலெக்ட்ரிக் கார் மாடல்களையே நிறுவனம் காட்சிப்படுத்த உள்ளது.

பிஒய்டி

பிரபல சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி இந்தியாவில் இ6 மற்றும் அட்டோ 3 எனும் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. புகழ்பெற்ற மின் வாகன தயாரிப்பு நிறுவனமான இது இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் தனது புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய எலெக்ட்ரிக் கார் தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார்களைக் காட்டிலும் அதிக பிரீமியம் அம்சம் மற்றும் ரேஞ்ஜ் தரக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, December 23, 2022, 16:35 [IST]
English summary
Electric cars waiting to unveil in auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+