சைலெண்டாலாம் இருக்க கூடாது... இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும்... மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் சைலெண்டாக செல்வதால் அதில் ஸ்பீக்கர் மாட்டி சத்தம் வர வைக்க மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரவுள்ள செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

இந்தியாவில் கடந்த 3-4 ஆண்டுகளாக எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெட்ரோல் /டீசல் செலவுகளை கட்டுப்படுத்த பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வருகின்றனர். அரசும் பெட்ரோல் /டீசல்களின் தேவைகளைக் குறைக்க எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை ஊக்குவித்து வருகிறது. பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலெக்டரிக் வாகன தயாரிப்பைத் துவங்கிவிட்டன.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

பொருளாதார ரீதியாகப் பார்த்தால் பெட்ரோல்/டீசல் வாகனங்களை விட எலெக்டரிக் வாகனங்களில் விலை அதிகம். அதே போல பெட்ரோல் டீசல் செலவுகளை ஓப்பிடும் போது எலெக்டரிக் வாகனங்கள் குறைந்த செலவிலேயே இயக்க முடியும். எலெக்ட்ரிக் கார்களுக்கான பராமரிப்பும் குறைவு இதை நம்பி பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வருகின்றனர்.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

ஆனால் நீண்ட கால பயன்பாட்டிற்குப் பிறகு எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை மாற்ற வேண்டிய நிலை வரும் போது அதன் விலை மிக அதிகமாக இருக்கும் அதை கணக்கிட்டு பார்த்தால் எலெக்ட்ரிக் வாகனங்களை விட பெட்ரோல் டீசல் வாகனங்களே சிறந்தாக தோன்றலாம் ஆனால் எல்லாம் பயன்பாடு மற்றும் பராமரிப்பைப் பொறுத்து இது மாறுபடும். எல்லாவற்றிற்கும் மேலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல் இருக்கும்.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

இந்நிலையில் எலெக்ட்ரிக் காரில் உள்ள முக்கியமான அம்சம் கார் சத்தம் இல்லாமல் சைலெண்டாக இயங்கும். திறன் கொண்டது. பெட்ரோல்/டீசல் போல கம்பஷன் நடக்காததால் இதில் சத்தமே இருக்காது. இது இதுவரை மிக முக்கியமான ஒரு அம்சமாக இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்காது.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

ஆட்டோமோட்டிவ் துறை தரக் கட்டுப்பாட்டு கமிட்டி தற்போது மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரையைச் செய்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களிலிருந்து சத்தம் வராமல் இருப்பதால் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இப்படி ஒரு வாகனம் வருவதே தெரிவதில்லை. இதனால் விபத்துக்கள் நடக்கலாம். அதனால் எலெக்ட்ரிக் வாகனங்களிலிருந்தும் சத்தம் வரவேண்டும் எனக் கூறியுள்ளது.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

இதற்காக ஒரு அந்த கமிட்டி ஒரு யோசினையையும் சொல்லியுள்ளது. அதன்படி எலெக்ட்ரிக் கார்களில் Acoustic Vehicle Alerting System (AVAS) சிஸ்டம் கட்டாயமாக்கப்பட வேண்டுமாம். அப்படி என்றால் காரில் ஒரு ஸ்பீக்கர் பொருத்தப்பட்டு அதன் வேகத்திற்கு ஏற்ப சத்தம் அதில் ஒலிக்க வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

இதை எல்லா கார்களிலும் அதன் தயாரிப்பார்கள் பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், இதற்காக மோட்டார் வாகன சட்டத்திலேயே திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த சட்டத்தை எலெக்ட்ரிக் கார்களுக்காக மட்டுமே பரிந்துரை செய்துள்ளது. எலெக்டரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு எந்த பரிந்துரையும் இல்லை.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

தற்போது மார்கெட்டில் உள்ள கார்கள் சைலண்டாக இருப்பதற்காகவே பலர் வாங்கி வருகின்றனர். மத்திய அரசு இதைச் சட்டமாக்கிவிட்டால் இனி கார்களிலும் சத்தம் வருவதைத் தவிர்க்க முடியாத விஷயமாகிவிடும். எலெக்டரிக் காரை பொருத்தவரை இந்தியாவில் "கிங்"ஆக இருப்பது டாடா நிறுவனம் தான்.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

இந்நிறுவனம் விற்பனை செய்யும் டாடா நெக்ஸான் இவி கார் மிகவும் பிரபலம் இந்தியாவில் குறைந்தவிலை எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இந்த கார் தான் இருக்கிறது. இந்த கார்தான் எலெக்ட்ரிக் காரில் நல்ல விற்பனையில் இருக்கிறது.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

தற்போது மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனத்தையும் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்ற மத்திய மாநில அரசுகள் முயன்று வருகின்றனர். இதற்கிடையில் மாநில அரசுகளுக்கான எலெக்டரிக் வாகன பாலிசி பிரபலமாகி வருகிறது ஹரியானா மாநிலத்தில் இந்த பாலிசி நடைமுறைக்கு வந்துவிட்டது.

சைலெண்டாலாம் இருக்க கூடாது . . . இனி எலெக்ட்ரிக் கார்லயும் சத்தம் வரனும் . . . மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் . . .

அதன்படி ரூ70 லட்சம் வரையிலான எலெக்டரிக் வாகனங்களுக்கு 15 சதவீதமும், ரூ40 லட்சம் வரையிலான ஹைபிரிட் வாகனங்களுக்கு ரூ3 லட்சம் வரையிலும் விலையில் தள்ளுபடி கிடைக்கும். இதனால் ரூ 15-40 லட்சம் வரையிலான எலெக்டரிக் கார்களின் விலை ரூ6 லட்சம் வரையிலும், ரூ40-70 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு ரூ10 லட்சம் வரையிலும் தள்ளுபடி கிடைக்கிறது.

Article Published On: Saturday, July 23, 2022, 18:51 [IST]
English summary
Electric vehicle cannot be silent any more new rules by central government
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+