தமிழகத்தில் அரங்கேறிய மற்றுமொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து நிகழ்வு! இந்த முறை எங்கு நடந்துச்சு தெரியுமா?
தமிழகத்தில் மற்றுமொரு தீ விபத்து நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்தியாவில் வெயில் காலம் தொடங்கியது முதல் தீ விபத்து சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மின்சார வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் தீ விபத்து நிகழ்வுகள் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றன. அவை நம்மை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, மின் வாகன பிரியர்களையும், பயன்பாட்டாளர்களையும் தொடர் எலெக்ட்ரிக் வாகன தீ விபத்து நிகழ்வுகள் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அச்ச உணர்வை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது ஓர் புதிய தீ விபத்து நிகழ்வு இந்தியாவில் மீண்டும் அரங்கேறியிருக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையகத்திலேயே அந்த விபத்து நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. சென்னை போரூர்-குன்றத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது, ஒகினவா மின்சார ஸ்கூட்டர் விற்பனையகம். இதுவே தீ விபத்தைச் சந்தித்த ஷோரூம் ஆகும்.

"தீ விபத்து விற்பனையகத்துலையா!" என இந்த சம்பவம் நம்மில் பலரை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது. இதற்கு முன்பாக அரங்கேறிய பெரும்பாலான மின்சார வாகன தீ விபத்து நிகழ்வுகள் வெளிப்புறத்தில், அவை வெளிப்புறத்தில் இருந்தபோதே அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இந்த நிகழ்வு விநோதமாக ஷோரூமில் அரங்கேறியிருப்பதே பலரின் பெருத்த அதிர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது.

மேலும், இந்த தீ விபத்து நிகழ்வு மின் வாகன பிரியர்களை பல மடங்கு அதிக அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 17 மின்சார ஸ்கூட்டர்கள் இந்த தீ விபத்தில் தீயிற்கு இரையாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், 5 யூனிட்டுகள் முற்றிலும் புதியது என கூறப்படுகின்றது. மற்ற அனைத்தும் சர்வீஸுக்கு வந்தவை என தெரிகின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றும்போதே தீ விபத்து நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. எதிர்பாராத விதமாக அரங்கேறிய இந்த விபத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. ஆம், அதிர்ஷ்டவசமாக ஷோரூம் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் தற்போது பாதுகாப்புடன் இருக்கின்றனர்.

ஷோரூம் ஊழியர்கள் அளித்திருக்கும் தகவலின்படி, "முதலில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார வாகனத்தின் பேட்டரியில் இருந்தே புகை வெளி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் பேட்டரி வெடித்து சிதறியதன் வாயிலாக ஏற்பட்ட நெருப்பே பிற வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி ஷோரூமில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியிருக்கின்றன. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் அனைத்தும் எரிந்தும் மின் வாகனங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கின்றன.

தீயில் கருகிய பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 8 லட்சம் என கணிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு குறித்து வழக்குப் பதிவு செய்த போரூர் காவல் துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, ஒகினவா ப்ரைஸ் ப்ரோ மின்சார ஸ்கூட்டரே சார்ஜேற்றத்தின் தீ பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் ரூ. 79,845-க்கு விற்கப்பட்டு வருகின்றது. இத்தகைய மலிவு விலையில் விற்கப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே தீ விபத்தில் சிக்கி சர்ச்சையில் சிக்கியிருக்கின்றது. மிக சமீபத்திலேயே ஒகினவா நிறுவனம் 3,215 ப்ரைஸ் ப்ரோ அழைப்பு விடுத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிகழ்வு அரங்கேறி சில நாட்களே ஆகின்ற நிலையில் ஷோரூம் தீ விபத்து சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தற்போது அரங்கேறியுள்ளது.


Click it and Unblock the Notifications








