தெரிஞ்சிருந்தா இந்த கார அப்போவே வாங்கியிருக்கலாம்! 40 வருஷமா உழைக்கும் கார்... இப்பவும் புதுசு போல மின்னுது!

ஒற்றை கார் மற்றும் ஸ்கூட்டரை 35 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஓர் நபர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் சுவாரஷ்யமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தெரிஞ்சிருந்த இந்த கார அப்போவே வாங்கியிருக்கலாம்! 40 வருஷமா உழைக்கும் கார்... இப்பவும் புதுசு போல மின்னுது... இன்னமும் பல வருஷத்த தாண்டும் போல...

ஏறக்குறைய 40 வருடங்களாக ஓர் நபர் ஒரே கார் மற்றும் ஒரே ஸ்கூட்டரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். 40 ஆண்டுகளாக வேறு எந்த புதிய வாகனத்தையும் வாங்காமல் பல ஆண்டுகளாக தன்னுடைய தொடக்கக் காலத்தில் வாங்கிய வாகனங்களை மட்டுமே அவர் பயன்படுத்திக் கொண்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

தெரிஞ்சிருந்த இந்த கார அப்போவே வாங்கியிருக்கலாம்! 40 வருஷமா உழைக்கும் கார்... இப்பவும் புதுசு போல மின்னுது... இன்னமும் பல வருஷத்த தாண்டும் போல...

இன்றைய கால இளைஞர்கள் பலர் தங்களின் வாகனங்களை அடிக்கடி மாற்றுபவர்களாக இருக்கின்றனர். ஒரு சிலர் ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையில் வாகனங்கள் இருக்க, மேலும், சில புதிய வாகனங்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகையோர் மத்தியில் முதியவர் ஒருவர் 40 ஆண்டுகளைக் கடந்து ஒரே கார் மற்றும் ஒரே ஸ்கூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

தெரிஞ்சிருந்த இந்த கார அப்போவே வாங்கியிருக்கலாம்! 40 வருஷமா உழைக்கும் கார்... இப்பவும் புதுசு போல மின்னுது... இன்னமும் பல வருஷத்த தாண்டும் போல...

கேரளாவைச் சேர்ந்த தயானந்தன் என்பவரே இந்த ஆச்சரியமான நபர் ஆவார். பஜாஜ் சூப்பர் ஸ்கூட்டர் மற்றும் பிரீமியர் பத்மினி காரையே அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். தயானந்தன் ஓர் ஓய்வுபெற்ற மத்திய அரசு பணியாளர் ஆவார். இவர் பணியின் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்திருக்கின்றார். பூட்டான் உள்ளிட்ட பகுதிகளுக்குகூட அவர் புராஜெக்ட் காரணமாக பயணித்திருக்கின்றார்.

தெரிஞ்சிருந்த இந்த கார அப்போவே வாங்கியிருக்கலாம்! 40 வருஷமா உழைக்கும் கார்... இப்பவும் புதுசு போல மின்னுது... இன்னமும் பல வருஷத்த தாண்டும் போல...

அரசு சார்பில் அதிகாரப்பூர்வ வாகனமாக பல்வேறு வாகனங்களை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். ஆனால், தன்னுடைய சொந்த வாகனமாக பயன்படுத்த அவர் தேர்வு செய்தது, பிரீமியர் பத்மினி. இவர் கார் வாங்கிய அந்த நேரத்தில் சந்தையில் ஹிந்துஸ்தான் அம்பாசடார் மற்றும் பிரீமியர் பத்மினி ஆகிய வாகனங்கள் மட்டுமே சந்தையில் விற்பனையில் இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

தெரிஞ்சிருந்த இந்த கார அப்போவே வாங்கியிருக்கலாம்! 40 வருஷமா உழைக்கும் கார்... இப்பவும் புதுசு போல மின்னுது... இன்னமும் பல வருஷத்த தாண்டும் போல...

தற்போது இருப்பதைப் போன்று பெரிய அளவில் தேர்வுகள் அப்போது இல்லை. இந்த நிலையிலேயே பிரீமியர் பத்மினி காரை அவர் சூஸ் செய்தார். அப்போது வாங்கப்பட்ட பத்மினியையே தற்போது வரை தயானந்தன் பயன்பாட்டில் இருக்கின்றது. பணியின் காரணமாக தன்னுடைய பெரும்பாலான நாட்களை தயானந்தன் டெல்லியிலேயே கழித்திருக்கின்றார். ஆகையால், முதலில் இந்த பிரீமியர் பத்மினி டெல்லியிலேயே ரெஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்டிருக்கின்றது.

தெரிஞ்சிருந்த இந்த கார அப்போவே வாங்கியிருக்கலாம்! 40 வருஷமா உழைக்கும் கார்... இப்பவும் புதுசு போல மின்னுது... இன்னமும் பல வருஷத்த தாண்டும் போல...

இதற்கு பின்னரே அவருடைய ஓய்வை அடுத்து சொந்த மாநிலமான கேரளா ஆர்டிஓ-விற்கு மாற்றப்பட்டிருக்கின்றது. 40 ஆண்டுகள் இந்த காருடன் தயானந்தன் கழித்திருப்பதால் இருவருக்கு இடையே இனம் புரியாத பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த காரில் இதுவரை அவர் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், 40 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் பிரீமியர் பத்மினி புதிதுபோல் காட்சியளிக்கின்றது.

தெரிஞ்சிருந்த இந்த கார அப்போவே வாங்கியிருக்கலாம்! 40 வருஷமா உழைக்கும் கார்... இப்பவும் புதுசு போல மின்னுது... இன்னமும் பல வருஷத்த தாண்டும் போல...

காரின் இருக்கை கவர்களை அவர் மாற்றியிருப்பதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து, காரை புதிது போல் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பச்சை மற்றும் வெள்ளை நிற பூச்சை அவர் செய்திருக்கின்றார். தனது மகன் வைத்திருந்த டம்மி காரை (ஸ்கேல் மாடல்) உதாரணமாகக் கொண்டே இந்த நிறத்தை அவர் கொடுத்திருக்கின்றார்.

தெரிஞ்சிருந்த இந்த கார அப்போவே வாங்கியிருக்கலாம்! 40 வருஷமா உழைக்கும் கார்... இப்பவும் புதுசு போல மின்னுது... இன்னமும் பல வருஷத்த தாண்டும் போல...

இதன் வாயிலாகவே மிக சூப்பரான தோற்றத்தை பிரிமீயர் பத்மினி பெற்றிருக்கின்றது. இந்த காரில் ஏசி அம்சம் இல்லை. இருப்பினும், பத்மினியில் பயணிப்பதை தயானந்தன் அதிகம் விரும்புகின்றார். இதன் விளைவாகவே 40 ஆண்டுகளைக் கடந்தும் இக்கார் அவருடன் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

தெரிஞ்சிருந்த இந்த கார அப்போவே வாங்கியிருக்கலாம்! 40 வருஷமா உழைக்கும் கார்... இப்பவும் புதுசு போல மின்னுது... இன்னமும் பல வருஷத்த தாண்டும் போல...

இதேபோல், மற்றுமொரு வாகனமாக பஜாஜ் சூப்பர் ஸ்கூட்டரும் அவருடன் பல ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரை பூட்டானில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவர் வாங்கியிருக்கின்றார். இந்த வாகனத்தையே அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பணியாற்றிய போதும் அவர் பயன்படுத்தியிருக்கின்றார். தற்போது கடைசியாக கேரளாவில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த ஸ்கூட்டர் அவரிடத்தில் 35 ஆண்டுகளைக் கடந்தும் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது தயானந்தன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இரு வாகனங்களையும் (ஸ்கூட்டர் மற்றும் கார்) வாங்கிக் கொள்ள பலர் தொடர்புக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அவர் அவற்றை விற்க முன் வரவில்லை. குறிப்பிட்ட சிலர் இந்த வாகனத்தை விற்க விரும்பினால் எங்களிடம் விற்று விடுங்கள் என தொடர்பு எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், அவருக்கே இரு வாகனங்களையும் விற்பதற்கான எண்ணம் துளியளவும் வரவில்லை என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, September 12, 2022, 12:28 [IST]
English summary
Ex central govt staff has been driving the same car and scooter more than 35 years
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+