மெஸ்ஸியின் லக்சரி கார் கலெக்‌ஷன்ஸ் எல்லாம் வேற ரகம்!! கால்பந்து ஜாம்பவான் இந்த விஷயத்திலும் ஜாம்பவான் தான்...

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள இவரது அர்ஜெண்டினா அணி ஃபிபா 2022 கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த நேரத்தில் மெஸ்ஸியிடம் உள்ள கார்களை பற்றி காண்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மெஸ்ஸியின் லக்சரி கார் கலெக்‌ஷன்ஸ் எல்லாம் வேற ரகம்!!

ஃபெராரி 335 எஸ் ஸ்பைடர் ஸ்காக்லிட்டி

பழமையான கிளாசிக் தோற்றம் கொண்ட ஃபெராரி 335 எஸ் ஸ்பைடர் ஸ்காக்லிட்டி ஆனது "1957ஆம் ஆண்டின் ஆட்டம் போட வைக்கும் குதிரை" என பலரால் செல்லமாக அழைக்கப்படும் கார் ஆகும். மிகவும் விலையுயர்ந்த, அதேநேரம் உலகில் கிடைப்பதற்கு மிகவும் அரிதான கார்களுள் ஒன்றான இதில் 4.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த ஃபெராரி கார் அதிகப்பட்சமாக மணிக்கு 300கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. மெஸ்ஸி இந்த காரை சுமார் ரூ.275 கோடிக்கு வாங்கியுள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அந்த அளவிற்கு அரிதான கார் இது.

மெஸ்ஸியின் லக்சரி கார் கலெக்‌ஷன்ஸ் எல்லாம் வேற ரகம்!!

மெர்சிடிஸ் எஸ்.எல்.எஸ் ஏஎம்ஜி

மெஸ்ஸியிடம் உள்ள மற்றொரு கிளாசிக்கான கார் என்றால் அது மெர்சிடிஸ் எஸ்.எல்.எஸ் ஏஎம்ஜி தான். ஏஎம்ஜி கார்கள் என்றாலே ஆற்றல்மிக்கவை ஆகும். அதிலிலும் இந்த மாடல் அரிதாக கிடைக்கக்கூடிய ஒன்று. ஆனால் இதற்காக பெரியதாக மெஸ்ஸி செலவு செய்யவில்லை. ரூ.5.29 கோடியில் சொந்தமாக்கி கொண்டுள்ளார். இந்த ஏஎம்ஜி காரில் 6.2 லிட்டர் DOHC வி8 என்ஜினை மெர்சிடிஸ் நிறுவனம் பொருத்தியுள்ளது.

மெஸ்ஸியின் லக்சரி கார் கலெக்‌ஷன்ஸ் எல்லாம் வேற ரகம்!!

காடிலாக் எஸ்கலேட்

காடிலாக் கார்கள் மிகவும் விலைமிக்கவை என நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் காடிலாக் பிராண்டில் எஸ்கலேட் காரை அமெரிக்காவில் பரவலாக பார்க்க முடியும். அந்த அளவிற்கு விலை குறைவானதாக அங்கு இந்த காரை மெஸ்ஸி தனது குடும்பத்துடன் பயணிக்க பயன்படுத்துகிறார். இந்த காரில் 8 பேர் வரையில் தாராளமாக அமர இடவசதி உள்ளது. இருப்பினும் நம் இந்தியாவை பொறுத்தவரையில் சொகுசு காரான இதனை மெஸ்ஸி ரூ.62 லட்சத்திற்கு வாங்கினார்.

மஸராட்டி கிரான் டூரிஸ்மோ எம்சி ஸ்ட்ராடேல்

மெஸ்ஸியிடம் ஏகப்பட்ட மஸராட்டி கிரான் டூரிஸ்மோ கார்கள் உள்ளன. அதில் ஒன்று தான் எம்சி ஸ்ட்ராடேல் ஆகும். ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸை கொண்ட இந்த காரை தான் மெஸ்ஸி பெரும்பாலும் அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறாராம். இந்த மஸராட்டி காரில் 4.7 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. மஸராட்டி கிரான் டூரிஸ்மோ எம்சி ஸ்ட்ராடேல் காரை மெஸ்ஸி ரூ.2 கோடி மதிப்பில் வாங்கினார்.

பகானி ஸோண்டா ட்ரைகலர்

மெஸ்ஸியின் கலெக்‌ஷனில் உள்ள மிகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கார்களுள் பகானி ஸோண்டா ட்ரைகலர் ஒன்றாகும். உலகளவில் மிகவும் வேகமாக செல்லக்கூடிய விலைமிக்க கார்களுள் ஒன்றாக விளங்கும் ஸோண்டா டிரைகலரில் 7.3 லிட்டர் வி12 என்ஜினை 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பகானி நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த காரை மெஸ்ஸி வாங்கியது 2 மில்லியன் டாலருக்கு, அதாவது ரூ.16.47 கோடிக்கு ஆகும்.

ஃபெராரி எஃப்430 ஸ்பைடர்

மெஸ்ஸி வைத்துள்ள மிகவும் செயல்திறன்மிக்க கார்களுள் ஃபெராரி எஃப்430 ஸ்பைடரை ஒன்றாக சொல்லலாம். இந்த ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரில் 4.3 லிட்டர் எஃப்136 இ வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 503 எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. எஃப்430 ஸ்பைடர் காரை மெஸ்ஸி 164,490 டாலர்களில் சொந்தமாக்கினார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.1.35 கோடி ஆகும்.

ரேஞ்ச் ரோவர் & ஆடி கார்கள்

மெஸ்ஸிடம் கம்பீரமான உடலமைப்பிற்கு பெயர்போன சில ரேஞ்ச் ரோவர் கார்களும் உள்ளன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ரேஞ்ச் ரோவர் வோக் (ஏறக்குறைய ரூ.1.65 கோடி), ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (ஏறக்குறைய ரூ.57 லட்சம்). பார்சிலோனோ கால்பந்து அணியின் ஸ்பான்சர்களுள் ஒன்றாக நீண்ட வருடங்களாக ஆடி இருந்தது. அதுமட்டுமின்றி மெஸ்ஸிக்கும் ஆடி உள்பட ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனங்களை பிடிக்கும். மெஸ்ஸியிடம் ஆடி ஆர்.எஸ்6, ஆடி ஏ7 & ஆடி க்யூ7 கார்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Famous footballer lionel messi luxury cars collection top notch
Story first published: Friday, December 9, 2022, 21:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X