வாங்குறதுக்கு ஆசையாதான் இருக்கு... ஆனா விலையை கேட்டா விக்குறதுக்கு கொண்டு வந்த மாதிரி தெரியல!
2996 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய காரை ஃபெராரி (Ferrari) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஃபெராரி (Ferrari) நிறுவனம் அதன் புதுமுக 296 ஜிடிபி (296 GTB) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எஃப்8 ட்ரிபியூட்டோ (F8 Tributo) எனும் காரை ரீ-பிளேஸ் செய்யும் விதமாக இந்த சூப்பர் காரை ஃபெராரி விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. 2996 சிசி திறனை வெளியேற்றக் கூடிய அதிக பவர்ஃபுல்லான மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

நிறுவனம் இந்த காரில் 6 சிலிண்டர் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. சாலை பயன்பாட்டு வசதிகள் கொண்ட காரில் 6 சிலிண்டர் மோட்டாரை நிறுவனம் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இது ஹைபிரிடைசேஷன் செய்யப்பட்ட மோட்டாராகும். குறைவான உமிழ்வு, அதிக திறன் வெளியேற்றத்திற்கு இந்த ஹைபிரிடைசேஷன் உதவியாக இருக்கின்றது.

இதுமாதிரியான சிறப்புகளை கொண்டிருப்பதால் காரின் மிக முக்கியமான ஓர் அம்சமாக இந்த மோட்டார் காட்சியளிக்கின்றது. இந்த 3.0 லிட்டர், ட்வின் டர்போசார்ஜட் மோட்டார் அதிகபட்சமாக 654 எச்பி பவரையும் வெளியேற்றும். இத்துடன், 166 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் 296 ஜிடிபி காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டும் சேர்ந்து 830 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய 296 ஜிடிபி காரை மாற்றியுள்ளது.

இந்த பவரை 8,000 ஆர்பிஎம்மில் இந்த வாகனம் வெளியேற்றும். இத்துடன், 740 என்எம் டார்க்கை 6,350 ஆர்பிஎம்மில் இக்கார் வெளியேற்றும். இந்த திறன்களை போலவே இதன் டாப் ஸ்பீடும் மெய் மறக்க வைக்கும் வகையில் உள்ளது. வெறும் 2.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனையே இக்கார் கொண்டிருக்கின்றது. அதேநேரத்தில் மணிக்கு 200 கிமீ எனும் வேகத்தை இந்த கார் வெறும் 7.3 செகண்டுகளிலேயே எட்டிவிடும்.

இதை எல்லாம் விடுங்க.. இதோட டாப் ஸ்பீடு எவ்வளவு தெரியுமா?, மணிக்கு 330 கிமீ வேகத்தில் இந்த கார் பறக்கும் (செல்லும்). இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகம் இந்தியாவிற்கு ஒத்துவருமா என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. அதேவேலையில், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பிரேக்கிங் சிஸ்டம் நம்மை வாயை பிளக்க வைக்கும் வகையில் உள்ளது.

உதாரணமாக ஃபெராரி 296 ஜிடிபி கார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது என வைத்துக் கொள்ளுங்கள். இந்த உச்சபட்ச வேகத்தில் இருந்து பூஜ்ஜியம் கிமீ வேகத்தை வெறும் 107 மீட்டர் இடைவெளியிலேயே எட்டிவிடும். இந்த திறன் உச்சபட்ச பாதுகாப்பான கார் இது என்பது தெளிவாக தெரியப்படுத்துகின்றது. இந்த காரில் ப்யூர் இவி மோடில் 25 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

அதாவது, எரிபொருளின் செலவில்லாமல், கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரியின் முழு சார்ஜ் வாயிலாக இந்த சூப்பரான ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இந்த ப்யூர் இவி மோடில் பயணிக்கும்போது மணிக்கு 135 கிமீ வேகம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபுல் சார்ஜில் 25 கிமீ ரேஞ்ஜை வழங்குவதற்காக ஃபெராரி நிறுவனம் இந்த காரில் 7.45 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது.

இந்த பேட்டரி பேக் இருக்கைகளுக்கு அடிப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. காரின் அனைத்து பகுதிகளிலும் சமமான எடை குவியும் பொருட்டு இவ்வாறு பேட்டரி பேக்கை நிறுவனம் நிலை நிறுத்தியுள்ளது. இந்த பேட்டரி பேக்கை தனியாக சார்ஜிங் போர்ட் வாயிலாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். சுமார் 1 மணி நேர சார்ஜிலேயே அப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

இந்த காரில் மிக சூப்பரான பிரேக்கிங் சிஸ்டம் வழங்கியிருப்பதாக வழங்கியிருப்பதாக நாங்கள் முன்னதாக தெரிவித்திருந்தோம். ஃபெராரி நிறுவனம் முதல் முறையாக 296 ஜிடிபி ஹைபிரிட் காரில் பிரேக்ஸ் பை ஒயர் சிஸ்டத்தை பயன்படுத்தியிருக்கின்றது. மேலும், எலெக்ட்ரானிக் பவர் ஸ்டியரிங்கையும் இந்த காரில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இத்துடன், டிரைவிங் அனுபவத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்தும் தனித்துவமான டிரைவிங் அனுபவத்தை வழங்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தகுந்தது. குவாலிஃபை, ஹைபிரிட், பெர்ஃபார்மன்ஸ் மற்றும் இ-டிரைவ் ஆகிய மோட்களே 296 ஜிடிபி ஹைபிரிட் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பன்முக சிறப்பு வசதிகளை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இதன் விலையும் நம்ப முடியாத அளவு மிக அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது.

ரூ. 5.40 கோடிகள் எனும் உச்சபட்ச விலையையே இக்காருக்கு ஃபெராரி நிர்ணயித்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் கேபின் பகுதியிலும் பற்பல அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், தொழில்நுட்பத்தின் உச்சமாக உட்பகுதி காட்சியளிக்கின்றது. டிஜிட்டல் கேஜ் க்ளஸ்டர், பேனல்களில் டச் கன்ட்ரோல்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

காரின் இருக்கையை பொருத்த வரை அல்கான்ட்ராவைக் கொண்டு பெர்ராரி அலங்கரித்துள்ளது. இவை எலெக்ட்ரிக் இருக்கைகள் ஆகும். பட்டன்கள் வாயிலாக இதன் பொசிஷனை கன்ட்ரோல் செய்ய முடியும். மேலும், காரின் ஸ்பாய்லர் மற்றும் ஸ்டியரிங் வீல் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து, 20 அங்குல ஃபோர்ஜட் ரிம்கள், சுற்று பரப்பை தெளிவாக காண்பிக்கும் கேமிரா, டைட்டானியம் வீல் போல்டுகள் மற்றும் பிளாக் செராமிக் எக்சாஸ்ட் பைப்புகள் ஃபெராரி 296 ஜிடிபி காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற அம்சங்களினாலயே நாம் துளியளவும் நம்ப முடியாத வகையில் மிக அதிக விலையைக் கொண்டதாக இக்கார் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








