1,000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

அமெரிக்காவைச் சேர்ந்த புதுமுக நிறுவனம் ஒன்று ஒற்றை சார்ஜில் 1000 கிமீ பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

உலகம் முழுவதிலும் மின் வாகன பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. 100கிமீ தொடங்கி 600கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய மின்சார வாகனங்கள் தற்போது விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இந்தியாவில் 500-க்கும் குறைவான ரேஞ்ஜ் தரக் கூடிய எலெக்ட்ரிக் வாகனங்களே தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

இந்த நிலையில் ஒற்றை சார்ஜில் ஆயிரம் கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய மின்சார கார்கள் வெகு விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மின் வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனங்களை அவ்வப்போது வெளியீடு செய்து வருகின்றனர்.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

அந்தவகையில், அமெரிக்காவைச் சேர்ந்த மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று ஒற்றை முழு சார்ஜில் 1,000 கிமீ தூரம் பயணிக்கக் கூடிய ஓர் மின்சார காரை வெளியீடு செய்திருக்கின்றது. ஏற்கனவே, அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா எனும் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனம் அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

இந்த நிறுவனத்திற்கு போட்டியளிக்கும் வகையிலேயே அப்புதிய நிறுவனம் அதன் புதுமுக தயாரிப்பை தற்போது உருவாக்கியிருக்கின்றது. ஃபிஸ்கர் (Fisker), இதுவே டெஸ்லா (Tesla)-விற்கு போட்டியாக அதிக ரேஞ்ஜை தரக் கூடிய எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் களத்தில் குதித்துள்ள நிறுவனம் ஆகும். இதன் அடிப்படையில் ரோனின் (Ronin) எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஸ்போர்ட்ஸ் (Sports EV) ரக மின்சார கார் ஆகும்.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

ஃபிஸ்கர் நிறுவனம் இக்காரை அதன் புதிய மேஜிக் ஒர்க்ஸ் ஆலையில் வைத்து தயாரித்திருக்கின்றது. இந்த ஆலை ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டேங் கிங்கின் தலைமையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரின் நிர்வாகத்தின்கீழே ரோனின் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

இதனை அவர் அதிக கிமீ ரேஞ்ஜை தரக் கூடிய வாகனமாக மட்டும் உருவாக்கவில்லை. அதனை, உலகின் முதன் முதல் 4 கதவுகள் கொண்ட கன்வெர்டபிள் எலெக்ட்ரிக் காராகவும் உருவாக்கியுள்ளார். இந்த சிறப்பு வசதி எலெக்ட்ரிக் சொகுசு கார் விரும்பிகளை கூடுதலாக கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இக்காருக்கு 'பி' மற்றும் 'சி' பில்லர்களையும் அவர்கள் வழங்கவில்லை.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

இந்த நிலைப்பாடு அக்காருக்கு இன்னும் கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. என்ன 'பி' - 'சி' என ரெண்டு பில்லர்களும் இல்லையா?, அப்படினா பாதுகாப்பு?.. துளியளவும் பயப்பட தேவையில்லை என்கிறது ஃபிஸ்கர் நிறுவனம். இக்காரை ராக்கர் ஸ்ட்ரக்சர் முறையில் அது உருவாக்கியிருக்கின்றது. அதாவது, மிகவும் உறுதியானதாக ரோனின் தயாரிக்கப்பட்டுள்ளது.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

இதுமட்டுமின்றி, மிகவும் அட்வான்ஸ்ட் முறையிலும் அக்கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. எடை குறைவான மெட்டீரியல்களே காரின் ஒட்டுமொத்த உருவாக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. காரின் ரேஞ்ஜ் (பயண தூரம்), பெர்ஃபார்மன்ஸ் மற்றும் டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்திக் கொடுக்கும் விதமாக அனைத்து விஷயங்களிலும் பார்த்து பார்த்து நிறுவனம் அதன் வேலைகளை செய்திருக்கின்றது.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

ரோனின் மின்சார காருக்கு காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் வகையில் ஏரோடைனமிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காரின் அதி-வேக இயக்க திறனுக்காக மூன்று மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை வெறும் இரண்டே செகண்டுகளில் ரோனின் காரை பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்ல வைக்கும் திறன் கொண்டவை.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

இந்த தகவல்களின் வாயிலாக, புதிய ஃபிஸ்கர் ரோனின் ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் கார் அதிக ரேஞ்ஜ் தரக்கூடிய வாகனம் மட்டுமே உருவாகவில்லை, அதிக திறன் வெளிப்பாடு, குறைவான எடை, முதல் பார்வையிலேயே கவரும் படு கவர்ச்சியான தோற்றம் ஆகியவற்ரைக் கொண்ட வாகனமாகவும் உருவாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இக்காரை மிக விரைவில் உற்பத்தி செய்ய ஃபிஸ்கர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

இப்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே ஃபிஸ்கர் ரோனின் எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியிருக்கின்றது. அடுத்த வருடம் இதன் உற்பத்தி பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உற்பத்தி தயாராக இருக்கும் ரோனின் எலெக்ட்ரிக் காரை நிறுவனம் ஆகஸ்டு மாதம் வெளியீடு செய்ய என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்தே 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

1000 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் புதுமுக நிறுவனம்! டெஸ்லாவிற்கு ஆப்பு தயார்!

ஃபிஸ்கர் நிறுவனம் இன்னும் சில கார் மாடல்களையும் வரும் காலத்தில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஓசோன் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Ocean electric SUV) மற்றும் ப்யூர் அர்பன் இவி (Pear urban EV) ஆகிய இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களையே நிறுவனம் வெகு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

குறிப்பு: முதல் மூன்று படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்ட ஃபிஸ்கர் நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புகளின் படங்கள் ஆகும்.

Article Published On: Saturday, May 7, 2022, 11:17 [IST]
English summary
Fisker ronin sports ev expected to offer 1000 km range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+