செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

புதிய தலைமுறை ஃபோர்ஸ் டிராவலர் (Force Traveller) விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தும், இந்த புதிய ஃபோர்ஸ் வேன் குறித்தும் இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

புனேவை தலைமையிடமாக கொண்ட ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அதன் "அடுத்த தலைமுறை பகிர்வு இயக்க ப்ளாட்ஃபாரம்"-ஐ காட்சிப்படுத்தி இருந்தது. டி1என் என்கிற பெயரில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி எரிபொருள் என்ஜின் வாகனங்கள் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனங்களையும் உருவாக்கலாம் என ஃபோர்ஸ் நிறுவனம் அந்த சமயத்தில் தெரிவித்திருந்தது.

செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

மேலும், 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் இந்த டி1என் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் மினி-பேருந்து ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த எலக்ட்ரிக் மினி-பஸ் தற்சமயம் ஆரம்பக்கட்ட சோதனை பணிகளில் உள்ளது. ஃபோர்ஸ் மோட்டார்ஸின் டி1என் ப்ளாட்ஃபாரம் ஆனது கிட்டத்தட்ட 4 வருட வடிவமைப்பு பணிகளில் உருவாக்கப்பட்டதாகும்.

செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

இந்த ப்ளாட்ஃபாரத்திற்கு சுமார் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் டி1என் ப்ளாட்ஃபாரம் வெளிநாட்டு சந்தைகளை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டது. ஆனால் இது முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்டு 2 வருடங்களானதாலும், தற்சமயம் இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகன தேவை அதிகரித்து வருவதாலும், இதன் அடிப்படையிலான எலக்ட்ரிக் வாகனங்கள் உள்நாட்டு சந்தையிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

இருப்பினும், இந்திய சந்தைக்காக இந்த ப்ளாட்ஃபாரத்தில் இருந்து உருவாக்கப்படும் முதல் வாகனம் வழக்கமான எரிபொருள் என்ஜின் வாகனமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தலைமுறை டிராவலர் வேனின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன (நமக்கு கிடைக்க பெறவில்லை). அந்த ஸ்பை படங்களில், 2020 ஆட்டோ எக்ஸ்போ மாடலின் தோற்றத்தையே கிட்டத்தட்ட புதிய டிராவலர் வேன் கொண்டுள்ளது.

செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

இந்த வகையில், அந்த கண்காட்சியில் ஃபோர்ஸ் எலக்ட்ரிக் மினி-பஸ் கொண்டிருந்த ஹெட்லேம்ப்கள், முன்பக்க க்ரில், ஒருங்கிணைக்கப்பட்ட ஃபாக் விளக்குகளுடன் கருப்பு-நிற முன் பம்பர், நேர்த்தியான செங்குத்தான டெயில்லைட்கள், பெட்டகம் வடிவிலான உடலமைப்பு மற்றும் பக்கவாட்டாக திறக்கும் இரட்டை டெயில்கேட் உள்ளிட்டவற்றை புதிய தலைமுறை டிராவலர் வேனும் பெற்றுள்ளது.

செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

அதேபோல் கேபினும் தற்போதைய ஃபோர்ஸ் டிராவலர் வேனை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டதாக உள்ளது. புதிய டிராவலரின் கேபினில் மிக முக்கிய அம்சமாக கூலிங், ஹீட்டிங் & ஏசி என காற்றோட்டமான உட்புற சூழலை வழங்கக்கூடிய HVAC அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முன் இருக்கை பயணிகளுக்கான ஏசி காற்று டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள 4 துளைகள் வழியாகவும், பின் இருக்கை பயணிகளுக்கான ஏசி காற்று மேற்கூரையில் வழங்கப்பட்டுள்ள துளைகள் வழியாகவும் கிடைக்கும்.

செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

டேஸ்போர்டில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் டிஜிட்டல் தரத்திலும், மத்தியில் இன்ஃபோடெயின்மெண்ட் திரையும் வழங்கப்பட்டுள்ளன. இதில் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு தொடுத்திரை உடன் வழங்கப்பட உள்ளதா என்பது சரியாக தெரியவில்லை. இவற்றுடன் புதிய தலைமுறை ஃபோர்ஸ் டிராவலர் வேன் ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளையும் பெற்று வரவுள்ளது.

செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

இதன்படி, அனைத்து சக்கரங்களிலும் காற்றோட்டமான டிஸ்க் ப்ரேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், இஎஸ்பி, இடிடிசி, இரட்டை முன் காற்றுப்பைகள் மற்றும் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை இந்த புதிய வேனில் எதிர்பார்க்கிறோம். சஸ்பென்ஷனுக்கு இந்த வாகனத்தில் சுதந்திரமான சஸ்பென்ஷன் யூனிட் முன்பக்கத்திலும், குறுக்கு பரவளைய சுருள்கள் பின்பக்கத்திலும் வழங்கப்பட உள்ளன.

செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

மற்றப்படி புதிய டிராவலரில் எத்தகைய என்ஜினை ஃபோர்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், தற்போதைய டிராவலர் வேனில் வழங்கப்படும் பிராண்டின் அதே 2.6 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தேர்வு அப்படியே கொடுக்கப்படலாம். மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டுள்ள இந்த என்ஜின் உடன் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

செம்ம... புதிய ஃபோர்ஸ் டிராவலர் வேனின் தோற்றம் இதுதானா!! மெர்சிடிஸின் என்ஜினுடன், இந்தியாவில் தயாராகிறது!

முன்னதாக பிரபலமான வேன் மாடலாக விளங்கும் டிராவலரில் சிஎன்ஜி தேர்வையும் வழங்க உள்ளதாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இவ்வளவு ஏன், எதிர்காலத்தில் எலக்ட்ரிக் டிராவலரையும் கொண்டுவரும் திட்டத்தில் ஃபோர்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த அப்டேட்களுக்கு ஏற்ப, தற்போதைய டிராவலரின் விலையை காட்டிலும் புதிய தலைமுறை டிராவலர் வேனின் விலைகள் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2022, 14:51 [IST]
English summary
Next-Gen Force Traveller Launch Expected Soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+