சேதத்தை பாத்து தப்பு கணக்கு போடாதீங்க... உள்ள இருந்தவங்களுக்கு என்ன ஆச்சு தெரிஞ்சா மூக்குமேல விரல வைப்பீங்க!
ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோஸ்போர்ட் (Ford EcoSport) கார் 8 முறை வரை சாலையில் உருண்ட போதிலும் காருக்குள் இருந்தவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் போதிய அளவு வரவேற்புக் கிடைக்கவில்லை என கூறி நாட்டை விட்டே வெளியேறியது பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஃபோர்டு (Ford). இந்நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறி இருந்தாலும் அதன் தயாரிப்புகள் இந்திய சாலைகளில் தற்போதும் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. நிறுவனத்தின் பன்முக கார் மாடல்களை இந்தியாவில் விற்றிருந்தாலும், அதன் புகழ்பெற்ற தயாரிப்பாக ஈகோஸ்போர்ட் (Ford EcoSport) இருக்கின்றது.

இது அதிக உறுதித் தன்மைக்கு பெயர்போன வாகன மாடலாக காட்சியளிக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு விபத்து நிகழ்வுகளில் அது செயல்பட்டிருக்கின்றது. அந்தவகையில், மீண்டும் தான் ஓர் அதிக உறுதியான கார் என்பதை வலுவாக இந்தியர்கள் மத்தியில் சூளுரைக்கும் வகையில் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் செயல்பட்டிருக்கின்றது.

மிகக் கடுமையான விபத்தைச் சந்தித்தபோதிலும், சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் என்ன மாதிரியான காயம் ஏற்படுமோ அந்த மாதிரியான காயத்தையே காரில் பயணித்தவர்கள் கொடுத்திருக்கின்றது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில் விபத்தைச் சந்தித்த காரை பார்க்கையில் காருக்குள் இருப்பவர்களுக்கு தேறியிருப்பார்களா என கேள்வி எழுப்பும் அளவிற்கு உருக்குலைந்துக் காணப்படுகின்றது.

இத்தகைய பெரும் விபத்தில் இருந்தே சிறு சிறு சிராய்ப்புகளுடன் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் அதன் பயணிகளைக் காப்பாற்றியிருக்கின்றது. இதுபோன்று பெரும் விபத்துகளில் இருந்து அக்கார் அதன் பயணிகளைக் காப்பாற்றுவது முதல் முறையல்ல. இருப்பினும், இந்த நிகழ்வு முற்றிலும் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் தற்போதைய விபத்து நிகழ்வு மிகவும் கோரமான விபத்து நிகழ்வாகும். சுமார் 8 முறைக்கும் மேலாக விபத்தின்போது கார் உருண்டு சென்றிருக்கின்றது. இத்தனை முறை கார் பல்டியடித்தும் அதற்குள் இருந்தவர்களுக்கு சிறு சிறு சிராய்ப்புகள் மட்டுமே ஏற்பட்டிருக்கின்றது. இதனால்தான் இந்த விபத்து நிகழ்வு அனைவரையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது.

உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே இந்த விபத்தானது அரங்கேறியிருக்கின்றது. அதிக வேகத்தில் சென்றதே காரின் விபத்திற்கான காரணம் என கூறப்படுகின்றது. இதுமட்டுமே விபத்திற்கான காரணம் இல்லை. கார் அதிக வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஓர் இளம்பெண் சாலையைக் கடந்திருக்கின்றார்.

எதிர்பாராத நேரத்தில் அவர் குறுக்கே வந்திருக்கின்றார். இவரை மோதாமல் இருப்பதற்காக செய்த முயற்சியின் விளைவாகவே கார் 8 முறை வரை சாலையில் உருண்டு சென்றிருக்கின்றது. அதேவேலையில் காருக்குள் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கின்றனர். இந்த விபத்தில் ஒரு சிலர் சிறு சிறு காயங்களைச் சந்தித்திருக்கின்றனர். அதேவேலையில் பலர் காயங்கள் ஏதுமின்றி காரை விட்டு வெளியே வந்திருக்கின்றனர்.

இதைச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். அனைவரும் சீட் பெல்ட் போட்டிருந்த காரணத்தினாலேயே எந்தவிதமான பெரிய பாதிப்பும் இன்றி தப்பித்திருக்கின்றனர். இந்த காரணத்திற்காகவே வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் கட்டாயப்படுத்துகின்றனர். இது பெரும் விபத்துகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும். இதற்கு சான்றாகவே தற்போது அரங்கேறியிருக்கும் உபி விபத்து சம்பவம் அமைந்துள்ளது.
ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஓர் சப்-4-மீட்டர் ரக எஸ்யூவி ரக காராகும். ஃபோர்டு நிறுவனம் தன்னுடைய வெளியேற்றத்தைத் தொடர்ந்து இந்த காரின் விற்பனையையும் பின் வாங்கிக் கொண்டது. இக்காரில் மிக சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும், சக்தி வாய்ந்த மோட்டாரையும் ஃபோர்டு வழங்கி வந்தது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி அதிக பாதுகாப்பு திறனுக்கு ஏதுவாக மிகச் சிறந்த டைனமிக் தோற்றம் மற்றும் உயர் ரக கட்டமைப்பை ஈகோஸ்போர்ட் விஷயத்தில் ஃபோர்டு பயன்படுத்தியிருக்கின்றது.

இதுவே, பெரும் விபத்தில் இருந்து பயணிகளைப் பாதுகாக்க காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இதன் டாப் ஸெப்க் மாடலில் பன்மடங்கு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 6 ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும். இந்த அம்சங்களும் பயணிகளின் அதீத பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டவையே ஆகும். இத்தகைய சூப்பரான பாதுகாப்பு நிறைந்த காரை நம்மால் இப்போது வாங்க முடியாது என்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








