இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் முதன்மையான பிராண்டுகளில் ஒன்றான லிங்கன் (Lincoln), ஸ்டார் எஸ்யூவி (Star SUV) எனும் கான்செப்ட் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான லிங்கன் (Lincoln), அதன் எதிர்கால வாகன மாடல் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளது. நிறுவனம் ஸ்டார் எஸ்யூவி (Star SUV) எனும் கான்செப்ட் மாடலையே வெளியீடு செய்திருக்கின்றது. இக்கார் மிகவும் அட்டகாசமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினால் மிகையாகிவிடாது.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

ஏனெனில், ஸ்டார் எஸ்யூவி இதுவரை எந்தவொரு வாகனமும் பெற்றிடாத முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்தம் புதிய தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இதற்கு தற்போது வெளியாகியிருக்கும் அக்கார்குறித்த புகைப்படங்களே சான்றாக உள்ளன. ஸ்டார் எஸ்யூவி அதிக சொகுசு லக்சூரி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

இடவசதி பயணிகள் அமர்ந்து செல்வதற்கு மட்டுமல்ல அதிக லக்கேஜ்களை ஏற்றிச் செல்லவும் பெரியளவில் கொடுக்கப்பட்டுள்ளது. பிரத்யேகமாக, முன் பக்க பேனட்டிற்கு அடிப்பகுதியில் லக்கேஜ்களை வைக்கும் வகையில் பெரிய ஸ்டோரேஜ் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சற்று விரிந்த நிலையில் திறக்கக் கூடிய பேனட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

இத்துடன், ஓர் டிரே போன்ற அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இக்காரை நடமாடும் சூட் கேஸாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது தெரிகின்றது. இதுதவிர பின்பக்கத்திலும் இக்காரில் லக்கேஜ் வைத்துக் கொள்ளும் வகையில் ஸ்டோரேஜ் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் எத்தனை லிட்டர் பொருட்களை ஏற்றி செல்ல முடியும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

புகைப்படத்தை வைத்து பார்க்கையில் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்திற்கு தேவையான பொருட்களையே இக்காரில் ஏற்றிச் செல்ல முடியும் என்பது தெரிகின்றது. இதுபோன்ற பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வசதிகளுடனேயே ஸ்டார் எஸ்யூவி உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

இதேபோல், அதிக சிறப்பு வசதிகள் கொண்ட கான்செப்ட் மாடல்கள் சிலவற்றை லிங்கன் நிறுவனம் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தையும் 2025 முதல் 2026 வரையிலான இடைப்பட்ட ஆண்டுக்குள் முழுமையாக வெளியீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

எனவே இவற்றின் வருகையை எதிர்நோக்கி இப்போதே வாகன ஆர்வலர்கள் சிலர் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். ஒட்டுமொத்தமாக நான்கு கான்செப்ட் மாடல்களை தற்போது லிங்கன் நிறுவனம் கை வசம் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

லிங்கன் இந்த பெயர் உங்களுக்கு புதியதாக தென்படலாம். ஆனால், ஃபோர்டு (Ford) நிறுவனத்தின்கீழ் இயங்கும் முதன்மையான நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனமே தனது எதிர்கால தயாரிப்புகளை தொடர்ச்சியாக களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

ஸ்டார் எஸ்யூவி தோற்றத்தில் மட்டுமல்ல தொழில்நுட்ப வசதிகளிலும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கின்றது. அந்தளவிற்கு அதி-நவீன வசதிகளை அது தாங்கியிருக்கின்றது. டிஜிட்டல் அசிஸ்டன்ட் வசதி இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

இது, ஓர் ரோபோவை அதன் பயனருக்கு மிக சிறப்பு உதவி செய்யும். இதன் வாயிலாக பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். இதுமட்டுமின்றி காருக்குள் நமக்கு தேவையான சூழலை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் பிரத்யேக விளக்கு, நறுமணம் வீசும் கருவி மற்றும் ஒலியை வெளிப்படுத்தும் கருவி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

எனவே மிக மிக சூப்பரான மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஓர் தயாரிப்பாகவே ஸ்டார் எஸ்யூவி காட்சியளிக்கின்றது. இதுதவிர, லிங்கன் நிறுவனம் புதிய நுண்ணறிவு வசதிக் கொண்ட சிஸ்டத்தையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த அம்சம் காரை மிக சிறந்த இணைக்கப்பட்ட காராக மாற்ற உதவும்.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

குறிப்பாக, ஹெல்ப் மீ சீ மற்றும் பார்க் ஃபார் மீ போன்ற டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்களை அது வழங்கம். அதாவது, டிரைவரே இல்லாமல் சில முக்கிய செயல்பாடுகளை தானே செய்துகொள்ள இந்த நுண்ணறிவு சிஸ்டம் உதவியாக இருக்கும். இத்துடன், மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக பிரத்யேக இருக்கைகள் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

இது ஓய்வறை போன்ற உணர்வை வழங்கும். அதாவது, நன்றாக சாய்ந்து, ஓய்வெடுத்துக் கொண்டு செல்லும் வகையில் இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், காலணிகளை சேகரிக்கும் வகையில் சிறிய பெட்டகம் உள்ளிட்டவை ஸ்டார் எஸ்யூவி காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஓர் சிறிய குளிர்சாதன பெட்டி, வளைவான பனோரமிக் திரை, மைய பகுதியில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரண்டாம் வரிசை இருக்கைக்கான பிரத்யேக திரை உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த காரை ஃபோர்டுக்கு சொந்தமான நிறுவனம் உருவாக்கி வருதா!.. என்னங்க முன்னாடி டிரே மாதிரி இருக்கு!

லிங்கன் ஸ்டார் எஸ்யூவி ஓர் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். நிறுவனம் எதிர்காலத்தில் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரிக்க இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே ஸ்டார் எஸ்யூவி எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் உருவாக்க பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், வெகு விரைவில் இதன் உற்பத்தி மாடலை நிறுவனம் வெளியீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Ford s premier brand lincoln debuts star suv concept
Story first published: Saturday, April 23, 2022, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X