மிக மிக பழைய ஆடி காரை புதிது போலாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான காரா மாத்திட்டாங்க!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி மிக பழைய சொகுசு காரை புதிதுபோல் மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான ஓர் நபராக ரவி சாஸ்திரி இருக்கின்றார். இவர், 1985ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த பட்டத்தை மட்டுமல்லாமல் அரிய வகை ஆடி 100 சொகுசு காரையும் அவர் வென்றார்.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

இந்த தருணம் அவரது அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, பரிசாக பெற்ற 1985 ஆடி 100 சொகுசு காரை தற்போது புதிதுபோல் மீட்டெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் கார் கிளப் கேரேஜ் எனும் நிறுவனத்தின் வாயிலாகவே இக்காரை ரவி சாஸ்திரி புதிதுபோல் மீட்டெடுத்திருக்கின்றார்.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

ஆடி 100 ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த செடான் கார் ஆகும். இந்த வாகனம் மிக பழைய வாகனம் என்பதால் அக்காருக்கான உதிரிபாகங்கள் கிடைப்பதில் அதிகளவில் கால தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக காரை புதுப்பிப்பதற்காக நீண்ட காலம் ஆகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

சுமார் 8 மாதங்கள் வரை காரை பதுப்பிப்பதற்கு சூப்பர் கார் கிளப் கேரேஜ் எனும் நிறுவனம் எடுத்திருக்கின்றது. பாகங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமம், அதிகளவில் காரின் உடல் பாகங்கள் பாதிப்படைந்திருந்ததாலும் இத்தனை அதிகபட்ச நாட்கள் எடுத்துக் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

ரேமண்ட் குழுமத்தின் எம்டியான கவுதம் சிங்கானியாவால் இயக்கப்பட்டு வரும் நிறுவனமே சூப்பர் கார் கிளப் கேரேஜ். ரவி சாஸ்திரியின் காரை புதுப்பித்ததில் தனி கவனம் செலுத்தியிருக்கின்றார் கவுதம் சிங்கானியா. அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் தற்போது அவரே அக்காரை ரவி சாஸ்திரி டெலிவரி பெற்றிருக்கின்றார்.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

இதனை கையில் வாங்கிய ரவி சாஸ்திரி அவரது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வென்ற கார் போல் தெரிகிறது. எந்த மாற்றமும் இல்லை. இதை சூப்பராக செய்து கொடுத்ததற்கு கவுதம் மற்றும் அவரது நிறுவனம் சூப்ப்ர் கார் கிளப் கேரேஜுக்கு நன்றி" என தெரிவித்தார்.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

மேலும் பேசிய அவர், "இந்த கார் என்னை மீண்டும் 37 ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்துச் சென்றிருக்கின்றது. அப்போது காரின் சாவி என் கையில் கிடைத்தது நான் இப்போது மீண்டும் உணர்கின்றேன்" என பல விஷயங்களை அவர் நினைவுகூர்ந்தார். இந்த காரை தனது கார் அல்ல. இந்தியாவின் கார் மற்றும் இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணியின் கார் என்றும் கூறினார்.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

இதுமட்டுமின்றி, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இக்காருக்கான அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ததாகவும், இதனால்தான் தன்னால் அந்த சொகுசு காரை இந்தியாவில் எடுத்து வர முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன் விளைவாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட முதல் ஆடி காராக இது மாறியது.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

மறு சீரமைப்பு பணியின்கீழ் அனைத்து பாங்களும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இருக்கை, மின் விளக்குகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. இத்துடன், காரின் வேலை செய்யாத பல பாகங்கள் அகற்றப்பட்டு, புதியவை பொருத்தப்பட்டுள்ளன. டேஷ்போர்டு போன்ற முக்கிய பாகங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

இக்காருக்கான பெரும்பாலான வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. மிக மிக அரிய வகை வாகனம் என்பதால் இக்காருக்கான பாகங்கள் கிடைப்பதில் பெருத்த சிரமம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக உலக நாடுகளில் உள்ள ஆடி கார்களுக்கான பாகங்களை விற்கும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு, அக்காருக்கான பாகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.

மிக மிக பழைய ஆடி காரை புதிது போல் மாற்றிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான கார் மாத்தியிருக்காங்க!

எஞ்ஜின் விஷயத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. அதேவேலையில், ஆடி நிறுவனம் 2.3 லிட்டர் இன்-லைன் 5 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் உடனே அக்காரை விற்பனைக்கு வழங்கியது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 134 பிஎச்பி பவரை வெளியேற்றும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Former cricketer ravi shastri restored audi 100 car by super car club garage
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X