பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் எம்டி!

பெயர் பொறித்த நம்பர் பிளேட் கொண்ட காருடன் நின்று முன்னாள் பாரத் பே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் நிர்வாக இயக்குனர்!

பாரத்-பே நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் அஷ்னீர் க்ரோவர். ஷார்க் டேங் ஷோவில் பங்குபெற்றதன் வாயிலாக இவர் செம்ம ஃபேமஸானாக நபராக தற்போது மாறியிருக்கின்றார். இவர் சமீபத்தில் இன்ஸ்டா கணக்கில் ஓர் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். விலையுயர்ந்த மெர்சிடிஸ் மேபேக் காருடன் நிற்பது போன்ற படத்தையே அவர் அந்த பகிர்ந்திருந்தார். அந்த கார் மிக விலையுயர்ந்தது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அக்காரில் பயன்படுத்தப்பட்டிருந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட நம்பர் பிளேட்டே பலரின் ஆச்சரியத்திற்கு தற்போது காரணமாக மாறியிருக்கின்றது.

பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் நிர்வாக இயக்குனர்!

வாகனங்களில் இடம் பெறும் வழக்கமான நம்பர் பிளேட்டிற்கு பதிலாக, 'ஐஎன்டி' (IND) என்ற எழுத்துக்களுடன் 'அஷ்னீர் ஜி' (ASHNEER G) என்ற வார்த்தை அந்த பிளேட்டில் இடம் பெற்றிருந்தது. இதுவே அனைவரின் கவனத்தையும் ஈர்க்க காரணமாக அமைந்திருக்கின்றது. இந்தியாவில் பேன்சி நம்பர் பிளேட்டுகள் கூடுதல் கட்டணத்தின்கீழ் வழங்கப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று.

பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் நிர்வாக இயக்குனர்!

ஆனால், இந்த மாதிரியான கஸ்டமைஸ்டு நம்பர் பிளேட்டு வழங்கப்படுவது செயல்பாட்டில் உள்ளதா என்பதே பலரின் கேள்வியாக அமைந்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் இன்னும் இப்படி ஒரு பதிவெண்ணை ஆர்டிஓ-க்கள் வழங்கத் தொடங்கவில்லை. இதனால், பலர் அஷ்னீர் க்ரோவரின் காரை பார்த்து பல மடங்கு ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றனர்.

பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் நிர்வாக இயக்குனர்!

வாகன ஆர்வலர்கள் தங்களுடைய வாகனங்கள் தனித்துவமானதாக தெரிய வேண்டும் என்பதற்காக அவற்றை பிரத்யேகமான மாடிஃபிகேஷன்களுக்கு உட்படுத்துகின்றனர். அந்தவகையில், ஒரு சிலர் மிக விலையுயர்ந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டுகளால் தங்களின் வாகனங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர்.

பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் நிர்வாக இயக்குனர்!

சமீபத்தில்கூட ரூ. 75 ஆயிரம் மதிப்பு கொண்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு, 15 லட்சம் ரூபாய் செலவு செய்து பேன்சி நம்பரை சண்டிகரைச் சேர்ந்த ஓர் இளைஞர் வாங்கினார். இதுபோன்று, மிக கிரேசியான வாகன ஆர்வலர்கள் நம் நாட்டில் இருக்கதான் செய்கிறார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மிகவும் தத்ரூபமான முறையில் வாகனத்தில் அஷ்னீர் ஜி எனும் வார்த்தைகள் அடங்கிய சொகுசு காரின் படங்களை அஷ்னீர் க்ரோவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் நிர்வாக இயக்குனர்!

இதுமாதிரியான பதிவெண் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்பதால், இது போலி பதிவெண் பிளேட் அல்லது ஃபோட்டோ ஷாப்பாக இருக்க வேண்டும் என யூகிக்கப்படுகின்றது. இதுமாதிரியான சட்ட விரோத பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் சாலையில் பயணிக்கும் எனில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் நிர்வாக இயக்குனர்!

அஷ்னீர் க்ரோவர் ஓர் மிகப் பெரிய வாகன ஆர்வலர் ஆவார். இதற்கு அவரிடத்தில் உள்ள விலையுயர்ந்த கார்களின் அணி வகுப்பே சான்று. இவரிடத்தில் மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650, ஆடி ஏ6, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், டொயோட்டா இன்னோவா மற்றும் ஹூண்டாய் வெர்னா பல தரப்பட்ட சொகுசு மற்றும் ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் உள்ளன.

பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் நிர்வாக இயக்குனர்!

இவற்றில் மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 காரிலேயே அஷ்னீர் ஜி எனும் பிளேட் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஓர் சொகுசு செடான் ஆகும். இக்கார், தற்போது இந்தியாவில் ரூ. 2.5 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் செடான் மட்டுமல்ல அதிக பவர்ஃபுல் எஞ்ஜினைக் கொண்ட காரும்கூட.

பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் நிர்வாக இயக்குனர்!

4.0 லிட்டர் வி8 பை-டர்போ பெட்ரோல் எஞ்ஜின் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 469 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், அனைத்து வீல்கள் இயக்கம் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் போன்ற வசதியும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

பெயர் பொறித்த நம்பர் பிளேட்டை இந்தியாவில் வாங்க முடியுமா? பரபரப்பை ஏற்படுத்திய பாரத் பே-வின் முன்னாள் நிர்வாக இயக்குனர்!

இது மட்டுமில்லைங்க அஷ்னீரிடத்தில் போர்ஷே கேமேன் காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. இதுவும் அவரிடத்தில் இருக்கும் விலையுயர்ந்த மற்றும் அதி-திறனை வெளிப்படுத்தக் கூடிய காராக காட்சியளிக்கின்றது. இரு கதவுகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இக்காரில் 2.0 லிட்டர் 295 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Former md of bharat pe ashneer grover shows off his maybach s650 with custom reg plates
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X