ஆப்பிள் நிறுவனம் தயாரித்த முதல் எலெக்ட்ரிக் கார் வெளியீடு... கொண்டாட்டத்தில் ஐ-போன் பிரியர்கள்... செம்ம அழகு!
பிரபல டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஆப்பிள் ஐ-போன் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் அதன் முதல் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது. இவ்வாகனம்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஃபாக்ஸ்கான் (Foxconn)-ம் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்பே ஆப்பிள் ஐ-போன்கள் (Apple iPhone). இந்த செல்போன் உற்பத்தியைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பிலும் களமிறங்கியிருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அந்நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்த உலகிற்கு காட்சிப்படுத்தியிருக்கின்றது. ஃபாக்ஸ்ட்ரான் மாடல் பி (Foxtron Model B) எனும் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் காரையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. கார்குறித்த படங்களை வெளியிட்டு இதன் வாயிாகவே இந்த உலகிற்கு மாடல் பி-யை ஃபாக்ஸான் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இதுவே காரின் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்படுவது முதல் முறையாகும். ஃபாக்ஸ்ட்ரான் மாடல் பி ஓர் ஹேட்ச்பேக் ரக மின்சார காராகும். ஃபாக்ஸ்கான் நிறுவனம் எப்போது அதன் முதல் எலெக்ட்ரிக் காரை இந்த உலகில் வெளியீடு செய்யும் என பெருத்த எதிர்பார்ப்பு ஐ-ஃபோன் பிரியர்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருந்த வேலையில் தற்போது நிறுவனம் அதனை அதிரடியாக காட்சிப்படுத்தியிருக்கின்றது.

ஃபாக்ஸ்கானின் இந்த செயல் ஆப்பிள் செல்போன் பிரியர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முக்கிய நோக்கமே பிரபல அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவை வீழ்த்துவதுதான். இந்த நிறுவனத்திற்கு போட்டியாகவே ஆப்பிள் செல்போன் உற்பத்தியாளர் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றார்.

இதன் அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டில் மூன்று புதிய மின்சார வாகனங்களை ஃபாக்ஸ்கான் வெளியீடு செய்தது. தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் மாடல் பி-யை போலவே அவையும், ஃபாக்ஸ்ட்ரான் (Foxtron) பிராண்டின்கீழாகவே வெளியீடு செய்யப்பட்டன. இந்த நிலையிலேயே தற்போது முழுமையாக உற்பத்திக்கு தயாராக இருக்கும் புத்தம் புதிய மாடல் பி காரின் படங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

வரும் அக்டோபர் 18 ஆம் தேதி காரின் முக்கிய தகவலுடன் சேர்த்து அக்காரையும் அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்தே, வெகு விரைவில் இந்த காரை (மாடல் பி) டெஸ்லாவின் மாடல் ஒய் (Tesla Model Y)-க்கு போட்டியாக அமெரிக்கா போன்ற உலக சந்கையில் ஃபாக்ஸ்கான் விற்பனைக்குக் கொண்டு வரும்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை சீனாவிலேயே முதலில் தொடங்க இருக்கின்றது. அடுத்த ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிருந்தே உலக நாடுகள் சிலவற்றிற்கு எலெக்ட்ரிக் கார் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஒஹோவியோலும் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக ஃபாக்ஸ்கான் அறிவித்துள்ளது.

ஆனால், இங்கு 2024ம் ஆண்டிலேயே மின் வாகன உற்பத்தி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது. புகழ்பெற்ற சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான பினின்ஃபரினா (Pininfarina) உதவியுடனேயே மாடல் பி உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை ஃபாக்ஸ்கான் மேற்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த உலக புகழ்பெற்ற நிறுவனம் காரின் வடிவமைப்பில் பெரும் பங்கினை ஆற்றியிருக்கின்றது. இதுவே, ஃபாக்ஸ்ட்ரான் மாடல் பி எலெக்ட்ரிக் காரின் மிகுந்த அழகிய தோற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், கட்டுமானம் உள்ளிட்டவற்றை ஃபாக்ஸ்கானே மேற்கொள்ள இருக்கின்றது. இதற்காக பிரத்யேக மின் வாகன உற்பத்தி தளத்தையே நிறுவனம் தயார்படுத்தியிருக்கின்றது.

எம்ஐஎச் (Mobility in Harmony) பிளாட்பாரத்தையே நிறுவனம் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக தயார் செய்திருக்கின்றது. இதனை கடந்த 2020ம் ஆண்டிலேயே நிறுவனம் தயார் செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த தளம் ஓர் ஓபன் சோர்ஸ் ஸ்கேட்போர்டு இவி பிளாட்பாரம் ஆகும். ஆகையால், பன்முக எலெக்ட்ரிக் கார்களை இங்கு வைத்து உருவாக்க முடியும் என தெரிகின்றது.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் மாடல் பி-யைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மாடல் இ (Model E), மாடல் சி (Model C) மற்றும் மாடல் டி (Model T) ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களை அடுத்தடுத்தாக விரைவில் வெளியீடு செய்ய இருக்கின்றது. இதில், மாடல் சி என்பது பெரிய க்ராஸோவர் ரக எலெக்ட்ரிக் காராகும். மேலும், மாடல் சி என்பது லக்சூரி செடான் ரக காராக உருவாக்கப்பட்டுள்ளது. கடைசி ஒன்றான மாடல் டி என்பது எலெக்ட்ரிக் பேருந்தாகும். இந்த மின்சார வாகனங்களையே அடுத்தடுத்தாக ஃப்க்ஸ்ட்ரான் பிராண்டின்கீழ் ஃபாக்ஸ்கான் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








