அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. ஒரு சில சர்ச்சைகள் எழுந்தாலும் கூட, அவை எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பகத்தன்மையை முழுமையாக சீர்குலைக்கவில்லை. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு உள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில் டெல்லி அரசு மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்தியாவின் தலைநகர் என்ற பெருமையுடன், இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகராகவும் டெல்லியை மாற்றுவதற்கான முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

இந்த சூழலில், டெல்லியில் இன்று (மே 24) 150 எலெக்ட்ரிக் பஸ்கள் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன. இந்த 150 புதிய எலெக்ட்ரிக் பஸ்களையும், டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். 150 புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதை முன்னிட்டு, சிறப்பு சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

இந்த 150 புதிய எலெக்ட்ரிக் பஸ்களிலும் 3 நாட்களுக்கு பயணிகள் அனைவரும் இலவசமாக பயணம் செய்து கொள்ள முடியும் என்பதுதான் அந்த சிறப்பு சலுகை. இதனை டெல்லி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''டெல்லியில் 150 புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

மே 24ம் தேதியில் இருந்து மே 26ம் தேதி வரை, 3 நாட்களுக்கு இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம்'' என கூறப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் என எந்த பாகுபாடும் இன்றி எந்தவொரு நபராலும், இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

இந்த அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்களில் சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் மற்றும் 10 பேனிக் பட்டன்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்குவதற்கு ஏற்ற வகையில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த 150 புதிய எலெக்ட்ரிக் பஸ்களையும் பராமரிப்பதற்கு டிப்போக்களும் தயார் செய்யப்பட்டு விட்டன.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

டெல்லியின் முக்கியமான வழித்தடங்களில் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். தனி நபர்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற ஊக்குவிக்கும் அதே நேரத்தில் பொது போக்குவரத்தையும் எலெக்ட்ரிக் வாகன மயமாக்குவதற்கு தேவையான பல்வேறு முயற்சிகளையும் டெல்லி அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. தற்போது 150 புதிய எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்வது இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான்.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக டெல்லி கருதப்படுகிறது. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் முக்கியமான காரணமாக இருப்பதால், அவற்றுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு டெல்லி அரசு முயற்சி செய்து வருகிறது.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

அத்துடன் மத்திய அரசும், டெல்லியை போன்று பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. மேகாலயா மாநிலத்தின் முதல் அமைச்சர் கான்ராட் சங்மா கூட அலுவலக பணிகளுக்கு எலெக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்த போவதாக தற்போது அறிவித்துள்ளார்.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

அவரின் பயன்பாட்டிற்காக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வாங்கப்பட்டுள்ளது. தன்னுடன் மற்ற அரசு துறை அதிகாரிகளையும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் பொதுமக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த 3 நாட்களுக்கு அரசு பஸ்களில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்... காரணம் என்னனு தெரியுமா?

மேகாலயா மாநிலத்தின் முதல் அமைச்சர் கான்ராட் சங்மா போல அரசின் உயர் பதவிகளில் உள்ள பலரும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்துக்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றாலும், எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் முயற்சிகளில் அவை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 24, 2022, 10:59 [IST]
English summary
Free electric bus rides in delhi for next 3 days check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+