தலைவர் பதவியை மட்டுமல்ல, மிக சிறந்த உபசாரமும் கொடுத்திருக்காங்க.. கப்பல் போன்ற காரில் கெத்தாக வலம் வந்த மோடி!
ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஜெனிசிஸ் எலெக்ட்ரிஃபைட் ஜி80 (Genesis Electrified G80) சொகுசு கார் பற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

2022 ஆம் ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் நேற்று (நவம்பர் 15) தொடங்கியது. இதில், இந்திய பிரதமர் மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜி-20 கவுன்சிலின் தலைமை பதவியை இந்தோனேசியா இந்தியாவிடம் ஒப்படைத்தது.

டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி ஒரு வருடத்திற்கு ஜி20 தலைமை பதவியை இந்தியா வகிக்கும். இந்த மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் அனைவருக்கும் தனித்துவமான முறையில் வரவேற்பு செய்யப்பட்டனர். இதேபோல், உலக தலைவர்கள் பயணிப்பதற்கென தனித்துவமான மற்றும் அதீத பாதுகாப்பு திறன் கொண்ட கார்கள் பயன்படுத்தப்பட்டன.

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி பயணிப்பதற்காக ஜெனிசிஸ் எலெக்ட்ரிஃபைட் ஜி80 (Genesis Electrified G80) கார் பயன்படுத்தப்பட்டது. இந்த சொகுசு காரிலேயே ஜி-20 மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி கெத்தாக வந்திறங்கினார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

ஜெனிசிஸ் எலெக்ட்ரிஃபைட் ஜி80 ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் கார் ஆகும். முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த வாகனத்திலேயே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார்களின் படைசூழ மோடி பயணித்தார். ஜெனிசிஸ் ஹூண்டாய் நிறுவனத்தின் லக்சூரி கார் பிராண்ட் ஆகும்.

மிக மிக விலையுயர்ந்த ஆடம்பர கார்களின் உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாகவே எலெக்ட்ரிஃபைட் ஜி80 இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரின் மிக சிறந்த இயக்கத்திற்காக டூயல் மோட்டார் செட்-அப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 136 kW திறன் கொண்டது.

இந்த மோட்டார் 370 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருக்கான மின்சார பவரை வழங்க 87.2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் நிறுவப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இதுமட்டுமில்லைங்க எக்கசக்க பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. மிக முக்கியமான அம்சமாக இக்காரின் விண்டோக்களில் சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மின்சார சேமிப்பிற்கு பங்களிக்கும் விதமாக இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் ஏராளமான அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், 8 அங்குல டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டுகள், டச் கன்ட்ரோல் வசதிக் கொண்ட மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 14.5 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 17 ஸ்பீக்கர்கள் அடங்கிய லெக்சிகன் ஆடியோ சிஸ்டம் போன்ற அம்சங்களும் ஜெனிசிஸ் எலெக்ட்ரிஃபைட் ஜி80 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து, ஹீட்டிங், வென்டிலேஷன் மற்றும் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய இருக்கையை முன் பக்கத்தில் இக்காரில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. ஓட்டுநர் கம்ஃபோர்டபிளான ஃபீலை பெறும் விதமாக இந்த அம்சங்களை வழங்கியிருக்கின்றது. இதுதவிர, ஹீட்டிங் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீலும் ஓட்டுநரின் வசதிக்காக இக்காரில் ஜெனிசிஸ் வழங்கியிருக்கின்றது.

இதேபோல், பாதுகாப்பு வசதியிலும் பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய தயாரிப்பாக இந்த கார் இருக்கின்றது. இதனால்தான் உலக நாடுகளில் உள்ள தலைவர்களின் சிலரின் அதிகாரப்பூர்வமாக இவ்வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஹூண்டாய் நிறுவனம் ஜெனிசிஸ் பிராண்டை இன்னும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவில்லை.

அதேவேலையில் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சிலர் ஜெனிசிஸின் உயரி மாடல்களை இந்தியாவில் வைத்து பயன்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், நிறுவனம் வெகு விரைவில் இந்த காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








