வீட்டுக்கு மசாலா டப்பா வாங்கி போடுற மாதிரி அதானி கார், விமானங்கள வாங்கி போட்டிருக்காரு! அம்பானியே கீழதான் போல!

உலகின் பெரும் பணக்கார்களின் பட்டியலில் 18வது இடத்தில் இருக்கின்றார் இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானி. உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை அலங்கரித்து வந்த இந்தியர் என்கிற அந்தஸ்தும் இவருக்கு உண்டு. ஆனால், இவர்மீது எழுந்த சர்ச்சை தற்போது அவரை உலக பணக்காரர்களின் பட்டியலில் 18வது இடத்திற்கு தள்ளி இருக்கின்றது.

இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 63 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டு உள்ளது. இத்தகைய பெரும் பணக்காரராக இருக்கும் கவுதம் அதானி, மிக சிறந்த கார் காதலர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த விஷயத்திலும் நம்ம முகேஷ் அம்பானியை தூக்கி சாப்பிடும் வகையில் கவுதம் அதானி இருக்கின்றார்.

Rolls royce ghost extended

கவுதம் அதானி இடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஃபெராரி கலிஃபோர்னியா, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி க்யூ என ஏகப்பட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவைகுறித்த கூடுதல் விரிவான தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost): அதானியின் கார் சேகரிப்பிலேயே மிகவும் சூப்பரான கார் மாடல் என இதனைக் கூறலாம்.ஸ்பெஷலான அவுட்டிங்குகளுக்கே அதானி இந்த காரை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் கிடையாது.

Rolls royce ghost extended rear

இக்காரை தனக்கான மிகவும் ஸ்பெஷலான காராக அதானி கஸ்டமைசேஷன் செய்திருக்கின்றார். ஆகையால், கூடுதல் சொகுசு அம்சங்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தைத் தாங்கிய வாகனமாக அதானியின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காட்சியளிக்கின்றது. இந்த காரில் 6.6 லிட்டர் ட்வின் டர்போ வி12 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த அனைத்து திறன்களும் பின் வீலுக்கு கடத்தப்படுகின்றது. ஆம், இது ஓர் பின் வீல் இயக்கம் கொண்ட சொகுசு காராகும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் இம்மோட்டார் இயங்குகின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இந்த வேகம் சட்டத்திற்கு புறம்பான வேகம் ஆகும்.

Rolls royce ghost extended back side view

ஆகையால், இந்த உச்சபட்ச வேகத்தில் அதானியால் காரை இயக்க முடியாது என்பது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், இந்த சொகுசு வாகனம் வெறும் ஐந்தே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு தகவல். இந்தியாவில் இந்த சொகுசு கார் ரூ. 6.95 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

ஃபெராரி கலிஃபோர்னியா (Ferrari California): உலக பணக்காரர்கள் பெரும்பாலானோரிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கின்றதோ இல்லையோ நிச்சயம் ஃபெராரி நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பாவது இருந்துவிடும். அதிக திறனை வெளிப்படுத்துவதில் பெயர்போன தயாரிப்புகளாக பெராரி வாகனங்கள் உள்ளன. எனவேதான், அதிக வேகத்தை விரும்பக் கூடிய உலக பணக்காரர்கள் ஃபெராரியின் தீவிர ஃபேன்களாக உள்ளனர்.

Ferrari california

அந்தவகையில், அதானியும் ஃபெராரி நிறுவனத்தின் கலிஃபோர்னியாவின் ரசிகராக இருக்கின்றார். இந்த காரை அவர் மிகவும் அரிதாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். லாங் டிரைவ் மற்றும் ரிலேக்ஸான பயணங்களுக்காகவே இக்காரை அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் உச்சபட்சமாக மணிக்கு 310 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது.

இதுமட்டுமில்லைங்க பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 4 செகண்டுகளிலேயே இந்த வாகனம் தொட்டுவிடும். இந்த சூப்பரான திறனை வெளிப்படுத்துவதற்காக 4.3 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் வி8 பெட்ரோல் மோட்டாரே ஃபெராரி கலிஃபோர்னியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 453 பிஎச்பி பவரையும், 485 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 3.13 கோடி ஆகும்.

Bmw 7 series

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series): அதானி ஓர் மிகப் பெரிய பிஎம்டபிள்யூ கார் ரசிகர் என கூறுமளவிற்கு அவரிடத்தில் அதிகளவில் பிஎம்டபிள்யூ கார்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பாக, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செடான் ரக காரே அவரிடத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

இதுமட்டும் இன்றி, பெரும்பாலான பயணங்களுக்கு அதானி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அனைத்து பிஎம்டபிள்யூ 7 சீரிஸுமே உயர் நிலை வேரியண்டுகள் ஆகும். இந்த கார் மாடலில் 6.6 லிட்டர் டர்போசார்ஜட் வி12 மோட்டாரையே பிஎம்டபிள்யூ நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

Bmw 7 series rear

இந்த மோட்டார் அதிகபட்சமாக 602 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுவும் அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்ட காராகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். அதேவேலையில், வெறும் 4 செகண்டுகளில் இந்த சொகுசு கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

ஆடி க்யூ7 (Audi Q7): ஆடி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் மாடலாக க்யூ7 இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை பலர் இந்த சொகுசு காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், அதானியிடத்திலும் இந்த சொகுசு வாகனம் பயன்பாட்டில் இருக்கின்றது.

Embraer legacy 650

ஆடி நிறுவனம் க்யூ7 காரில் 3.0 லிட்டர் டீசல் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 245 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த சொகுசு வாகனத்தில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இது வெறும் 7 செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தையும், டாப் ஸ்பீடாக மணிக்கு 250 கிமீ வேகத்திலும் செல்லும் திறன் கொண்டது.

இவ்வாறு அடக்கமான அளவிலேயே அதானியிடத்தில் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், அனைத்தும் கவனத்தை ஈர்க்கக் கூடிய அதிக சிறப்புகள் வாய்ந்த லக்சூரி வாகனங்கள் ஆகும். இவற்றைப் போலவே சில வானூர்திகளையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். அந்தவகையில், கவுதம் அதானி இடத்தில் மூன்று பிரைவேட் ஜெட்கள் உள்ளன.

Bombardier challenger 605

எம்ப்ரேயர் லெகசி 650, பாம்பர்டியர் சேலஞ்ஜர் 605 மற்றும் ஹாவ்கர் பீச்கிராஃப்ட் 850எக்ஸ்பி ஆகியவையே அவை ஆகும். இதுதவிர, மன்று ஹெலிகாப்டர்களும் அதானியிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. அகுஸ்டா வெஸ்ட்லேண்ட் ஏடபிள்யூ 139 போன்ற அதிக சக்தி வாய்ந்த ஹெலிகாப்டர்கூட அவரிடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக பணக்காரர்களின் பட்டியில் மூன்றாவது இடத்தை அலங்கரித்தவர் கவுதம் அதானி. அவரிடத்தில் இந்த அளவு வாகனங்கள்கூட இல்லை என்றால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். சமீபத்தில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் காரணத்தினாலேயே இவர் தற்போது 18வது என்கிற இடத்திற்கு பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றார்.

Article Published On: Friday, September 2, 2022, 10:26 [IST]
English summary
Gautam adani and his car collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X