டாடி'ஸ் லிட்டில் பிரின்ஸஸ்களுக்கு ஏற்ற கார் பெயர் கூட அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. விலையும் கம்மிதாங்க!

சீனாவில் கீலீ நிறுவனம் சிறிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பாண்டா எனப் பெயரிடப்பட்ட இந்த கார் வூலிங் ஏர் காருக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த காரில் உள்ள அம்சங்கள் என்ன? இந்த கார் இந்தியா வர வாய்ப்பிருக்கிறதா? வாருங்கள் காணலாம்

இன்று உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகமாகிவிட்டது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் கார்களை விரும்பி வாங்கத் துவங்கிவிட்டனர். இதனால் கார்களை தயாரிக்கும் பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட அதிகமாகிக்கொண்டே வருகிறது. உலகிலேயே சீனாவில்தான் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப்பெரிய மார்கெட் இருக்கிறது. இதனால் அந்நாட்டில் ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் தயாராகிறது. இந்நிலையில் சீனர் மத்தியில் தற்போது டிரெண்டாக இருப்பது சிறிய ரக எலெக்ட்ரிக் கார்தான்.

டாடிஸ் லிட்டில் பிரின்ஸஸ்களுக்கு ஏற்ற கார் பெயர் கூட அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. விலையும் கம்மிதாங்க!

அங்குள்ள மக்கள் பலர் இந்த ரக கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த கார்களில் எம்ஜி நிறுவனம் சீனாவில் வூலிங் என்ற பிராண்டில் ஏர் என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. அந்த கார் மிகவும் பிரபலமானது. இந்த காரை எம்ஜி பிராண்டில் இந்தியாவிற்குக் கொண்டு வரும் முயற்சியும் நடந்து வருகிறது. இந்நிலையில் வூலிங் ஏர் காருக்கு போட்டியாகச் சீனாவில் புதிதாக ஒரு கார் களம் இறக்கவுள்ளது.

கீலீ ஆட்டோ என்ற சீன நிறுவனம் பாண்டா என்ற பெயரில் புதிய காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கீலீ என்பது வால்வோ கார்ஸ், லோட்டஸ் கார்ஸ், லண்டன் எலெக்ட்ரிக் வெஹிகில் கம்பெனி போன்ற நிறுவனங்களின் தலைமை நிறுவனமாகும். கீலீ நிறுவனம் முதலில் இந்த பாண்டா காரை ஜாமென்டரி பிராண்டில் அறிமுகப்படுத்த முடிவுசெய்தது. ஆனால் இறுதியாக கீலீ பிராண்டிலேயே இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பாண்டா மினி எலெக்ட்ரிக் காரை பார்க்கும் போது இந்த காரில் கருப்பு நிற ரூஃப் , வட்டமான ஹெட்லைட்கள், 2 டோர்கள், 4 பேர் பயணிக்கும்படி சீட்கள், ஆகிய முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த கார் மொத்தமே 3065 மிமீ நீளம் கொண்டதுதான். அதனால் சிறிய இடத்தில் கூட இந்த காரை எளிமையாக நிறுத்த முடியும். சிட்டி டிராஃபிக்கிலும் இந்த காரை எளிமையாக ஓட்டிச்செல்ல முடியும். இந்த கார் இந்தியாவில் விற்பனையான நானோ காரை விடச் சிறிய காராகும்.

இந்த கார் சிறிய காராக இருந்தாலும் இந்த காரில் உள்ள அம்சங்களுக்கு எந்த ஒரு குறையும் கிடையாது. இந்த காரின் ரூஃப் பகுதியில் பானரோமிக் கண்ணாடி பகுதி பொருத்தப்பட்டுள்ளது. காரின் வீல் பகுதி பாண்டா என்ற பெயருக்கு ஏற்றார் போல பாண்டாவின் காலடித் தட வடிவங்களைக் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முகப்பு பகுதி பாண்ட போல ஆங்காங்கே கருப்பு நிறத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்க்கவும் செம க்யூட்டாக இருக்கும்படி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பவரை பொருத்தவரை இந்த காரில் 30 Kw எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் எல்எஃப்பி பேட்டரியை கொண்டுள்ளது. இந்த காருக்கான பேட்டரியை சீன நிறுவனமான கெளவான் ஹைடெக் நிறுவனம் செய்துள்ளது. இந்த பேட்டரியில் இந்த கார் முழு சார்ஜில் 150 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. சிட்டி கார் என்பதால் இந்த ரேஞ்ச் சிறப்பான ஒரு ரேஞ்ச் தான். குறுகிய தூரப் பயணத்திற்கு இது ஏற்ற கார்.

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை 9.2 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்ர் பொருத்தப்பட்டுள்ளது. இது போக 8 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி, இன்டர்காம் ஃபங்ஷன், செல்லும் இடத்தை பகிரும் ஆப்ஷன், ஆகியன உள்ளது.இதுபோக இந்த காரின் ஏசியை நீங்கள் ரிமோட் மூலமே கண்ட்ரோல் செய்து கொள்ளலாம். இதற்காகப் பிரத்தியேக ஆப் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் காரை லாக் மற்றும் அன்லாக் செய்யவும் முடியும்.

இந்த காரில் மொத்தம் 2 விதமான டிரைவ் மோட்கள் இருக்கிறது. நார்மல் மற்றும் ஸ்போ்ட் ஆகிய டிரைவ் மோட்கள் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 797 கிலோ எடை கொண்டது. அதிகபட்சமாக 100 கி.மீ வேகம் வரை செல்லும் தின் கொண்டது. இந்த கார் சீனாவில் 40-50 ஆயிரம் சீன யென் என் விலையில் விற்பனையாகிறது. இதன் இந்திய ரூ5 லட்சமாகும். சில ஊடகங்கள் இந்த கார் 5700 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகும் எனக் கூறுகின்றனர். இதன் இந்திய மதிப்பு ரூ4.72 லட்சம் தான். இந்த கார் குறித்த உங்கள் கருத்து என்ன? இந்த கார் இந்தியாவிற்கு வந்தால் நீங்கள் வாங்குவீர்களா? கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, December 23, 2022, 14:29 [IST]
English summary
Geely auto launched panda mini electric car price 5 lakhs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+