யுஎஸ் மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்! மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஜென்சோல் இன்ஜினியரிங் (Gensol Engineering) நிறுவனம் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்றை கையகப்படுத்துவதற்கான பணியில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்... மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஜென்சோல் இன்ஜினியரிங் (Gensol Engineering) நிறுவனம் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான டெர்ம் ஷீட்டில்கூட இரு நிறுவனங்களும் கையொப்பம் இட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, நிறுவனம் சோலார் பேனல் தயாரித்தல் மற்றும் பிற மின் சாதன பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்... மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்!

இந்த நிலையிலேயே ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனம் ஸ்டார்ட்-அப் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்தைக் கையகப்படுத்தும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. அமெரிக்க நிறுவனத்தின் பெரும் பங்கினை கையகப்படுத்தும் திட்டத்தில் ஜென்சோல் இன்ஜினியரிங் இருக்கின்றது. இந்த கையகப்படுத்தலை அடுத்து விலைக் குறைவான மின்வாகன உற்பத்தி பணிகளை அது மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்... மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்!

ஏற்கனவே நிறுவனம் சோலார் சார்ந்த பணிகளை மிக சிறப்பாக செய்து வருகின்றது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் இப்பணியை செம்மையாக அது மேற்கொண்டு வருகின்றது. இந்தம மாதிரியான சூழ்நிலையிலேயே எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் கால் தடம் பதிக்கும் முயற்சியில் தற்போது களமிறங்கியிருக்கின்றது.

அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்... மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்!

ஆகையால், வெகு விரைவில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. நிறுவனம் வரும் 2024 ஆம் நிதியாண்டிற்குள் தங்களுடைய வருவாயை 500 கோடி ரூபாய் முதல் 600 கோடி ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்... மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்!

எனவே வெகு சீக்கிரத்திலேயே நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் வணிக பணிகளைத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேலையில் நிறுவனம் முதலில் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்... மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்!

ஏற்கனவே இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு பன் மடங்கு வரவற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த வரவேற்பை தங்களுடைய நிறுவனத்தின் பக்கம் திருப்பிக் கொள்ள அது சூப்பரான திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது, நிறுவனம் அதன் தயாரிப்புகளை அட்வான்ஸ்ட் தொழில்நுட்பம் கொண்ட காராக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்... மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்!

தற்போது இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மாதந்தோறும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் இக்கார் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த காரைப் போல் அதிக நவீன வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காராக ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்... மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்!

எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பணிகளை நிறுவனம் 2023ம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புனேவில் உள்ள ஆலையில் முதல் கட்டமாக ஆண்டுக்கு 12 ஆயிரம் யூனிட்டுகள் வீதம் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகளை அது தொடங்க திட்டமிட்டிருக்கின்றது.

அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்... மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்!

அதாவது, மாதம் ஒன்றிற்கு ஆயிரம் யூனிட்டுகள் என மின்சார கார்களை உற்பத்தி செய்ய இருக்கின்றது. இக்காருக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து அதன் உற்பத்தி பணிகளை அதிகரிக்கச் செய்ய இருக்கின்றது ஜென்சோல் இன்ஜினியரிங். எலெக்ட்ரிக் கார் இன்ஜினியரிங் மற்றும் வடிவமைப்பு பணிக்காக 150க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த அது திட்டமிட்டிருக்கின்றது.

அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்திய நிறுவனம்... மலிவு விலையில் இ-கார்களை களமிறக்க திட்டம்!

பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி சரக்கு மற்றும் டாக்சி போன்ற சேவைகளுக்கான மின்சார வாகனங்களையும் ஜென்சோல் இன்ஜினியரிங் தயாரிக்க இருக்கின்றது. அனைத்து வாகனங்களும் மேக்-இன்-இந்தியா தயாரிப்புகளாக உருவாக்கப்பட இருக்கின்றன. நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓர் முழு சார்ஜில் 200 க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜ் தரக் கூடியதாகவும், இரண்டே மணி நேரத்தில் முழு சார்ஜையும் ஏற்றிக் கொள்ளும் திறன்களுடனும் அவை உருவாக்கப்பட இருக்கின்றன.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 14, 2022, 17:40 [IST]
English summary
Gensol engineering to buy us based ev startup
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+