கார் வாங்குனா அரசுக்கு வரி மட்டும் எவ்வளவு கட்டனும் தெரியுமா?

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி குறித்த தெளிவான விளக்கத்தை ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு வரியாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி அது போக 22 சதவீதம் செஸ் வரி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரியாக மட்டுமே செலுத்த வேண்டியது உள்ளது. இந்த வரி எஸ்யூவி கார்களுக்கு மட்டும் தான் என அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் எஸ்யூவி செக்மெண்டிலேயே பல விதமாக கார்கள் இருக்கிறது. மைக்ரோ எஸ்யூவி, சப் காம்பேக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி, முழு எஸ்யூவி ஆகிய வகைகள் இருக்கிறது.

கார் வாங்குனா அரசுக்கு வரி மட்டும் எவ்வளவு கட்டனும் தெரியுமா?

இதற்கு சிறிய ரக எஸ்யூவி கார்களுக்கு இது பொருந்துமா எனச் சந்தேகம் பலருக்கு இருந்தது. மாநிலத்திற்கு மாநிலம் எஸ்யூவி கார்களுக்கான வரைமுறை மாறுபட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் இந்தியாவில் அரசு எதை எஸ்யூவி காராக கருதுகிறது என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் காரின் பாடி வடிவமைப்பை வைத்து எஸ்யூவி காராக தரம் பிரித்தாலும் இந்திய அரசு எஸ்யூவி கார்கள் எனக் கருதுவது 3 தன்மைகளைக் கொண்ட கார்கள் தான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

அதாவது ஒரு கார் 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் இருக்க வேண்டும். அதன் இன்ஜின் 1500 சிசிக்கும் அதிகமாக இருக்க வேண்டும், அந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என எஸ்யூவிகார்களுக்கான வரைமுறையை வகுத்துள்ளது. இந்த 3 அம்சங்களும் கொண்ட கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 22 சதவீத செஸ் சேர்த்து மொத்தம் 50 சதவீதம் வரியாகச் செலுத்த வேண்டும். இதில் ஏதாவது ஒன்று குறைவாக இருந்தால் கூட செஸ்வரி 15 சதவீதமாகக் குறைந்து விடும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த 3 வரைமுறைகளையும் வைத்து பார்க்கும் போது இந்தியாவில் விற்பனையாகும் எந்த சப் காம்பேக்ட் எஸ்யூவி காரும் அதிக செஸ் ரேட்டை பெறாது. எல்லா சப் காம்பேக்ட் எஸ்யூவி காரும் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவாக இருக்கிறது. இன்ஜினும் 1500 சிசிக்கும் குறைவாக இருக்கிறது. இதனால் இந்த கார்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி 28 சதவீதம் போக 15 சதவீதம் செஸ் சேர்த்து 43 சதவீதம் மட்டுமே வரி செலுத்த வேண்டும்.

அடுத்த செக்மெண்டான பிரபலமான மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் உள்ள கார்களில் கிரெட்டா, செல்டோஸ், குஷாக், டைகுன், அஸ்ட்ர, கிராண்ட் விட்டாரா, அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்கும் இந்த அதிக செஸ் வரி விதி ஒத்து வராது.இந்த கார்கள் எல்லாம் 4 மீட்டர் நீளத்திற்கும் அதிகமாக இருந்தாலும், இதன் இன்ஜின் 1500 சிசிக்கும் குறைவாக இருக்கிறது. இதனால் இதற்கும் 15 சதவீத செஸ் வரிதான் விதிக்கப்படுகிறது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மஹிந்திரா தார் காரின் இன்ஜின் 1500 சிசிக்கும் அதிகமான இன்ஜின் தான். ஆனால் இதன் நீளம் 4 மீட்டருக்கும் குறைவாக இருக்கிறது. இதனால் இந்த காரும் அதிக செஸ் வரி வரம்பிற்குள் வராது. தார் காரின் மொத்த நீளம் 3985 மிமீ தான். இதே நேரம் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ என், ஹெக்டர் ஆகிய கார்கள் ஜிஎஸ்டி கவுன்சில் சொன்ன 3 வரம்பிற்குள்ளும் வருவதால் இந்த கார்களுக்கு அதிக செஸ் வரி செலுத்த வேண்டும்.

அல்காஸர், ஹெக்டர் கார்களில் சில வித்தியாசமான விஷயம் இருக்கிறது. அல்காஸர் காரை பொருத்தவரை இதன் பெட்ரோல் வேரியன்ட் கார் அதிக வரிக்குள் வரும், ஆனால் இதன் டீசல் வேரியன்ட் காரில் 1500 சிசிக்கும் குறைவான இன்ஜின் இருப்பதால் அதிக செஸ் வரம்பு வரிக்குள் வராது. அதே போல ஹெக்டர் காரின் டீசல் வேரியன்ட் கார் அதிக செஸ் வரி வரம்பிற்குள் வரும், ஆனால் பெட்ரோல் வேரியன்டில் இன்ஜின் 1500 சிசிக்கும் குறைவாக இருப்பதால் அதிக செஸ் வரி வரம்பிற்குள் வராது.

இதே போல டாடா ஹாரியர், சஃபாரி, ஹூண்டாய் டுஸான், ஆகிய கார்கள் அதிக செஸ் வரி வரம்பிற்குள் வரும் ஜீப் காம்பஸ் கார் டீசல் வேரியன்ட் அதிக செஸ் வரி வரம்பிற்குள்ளும், பெட்ரோல் வேரியன்ட் குறைவான செஸ் வரி வரம்பிற்குள்ளும் வரும். முழு சைஸ் எஸ்யூவிகளான டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர், இசூஸூ எம்யூ-எக்ஸ் ஆகிய கார்கள் அதிக செஸ் வரி வரம்பிற்குள் தான் வருகிறது.

பிரிமியம் செக்மெண்டை பொருத்தவரை பிஎம்டபிள்யூ எக்ஸ்1, ஆடி க்யூ3, வால்வோ எக்ஸ்சி40 ஆகிய கார்கள் அதிக கார்கள் அதிக செஸ் வரி வரம்பிற்குள் வருகிறது. மெர்சிடீஸ் ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்பி கார்களின் டீசல் வேரியன்ட் அதிக செஸ் வரி வரம்பிற்குள்ளும், பெட்ரோல் வேரியன்ட் குறைவான செஸ் வரி வரம்பிற்குள்ளும் வருகிறது.

இது போக ஜிஎல்சி, எக்ஸ்3, க்யூ5, எக்ஸ்சி 60, எஃப்-பேஸ், ஜிஎல்இ, கிராண்ட் செரோக்கி, எக்ஸ்5 மற்றும் க்யூ7 ஆகிய கார்கள் அதிக செஸ் வரி வரம்பிற்குள் வருகிறது. இந்த வரி மாற்றம் ஜிஎஸ்டி வரியில் இல்லை செஸ் வரியில் மட்டும் தான் இருக்கிறது. உயர் ரக கார்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி இருக்கிறது. அதற்கு மேல் விதிக்கப்படும் செஸ் வரியில் 22 சதவீதம் எந்தெந்த கார்களுக்கு விதிக்கப்படும், 15 சதவீதம் எந்தெந்த கார்களுக்கு விதிக்கப்படும் என்பதையே ஜிஎஸ்டி கவுன்சில் விளக்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, December 19, 2022, 10:48 [IST]
English summary
Gst council provide definition on suv for higher rate tax in all states
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+