ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 100கணக்கான மஹிந்திரா கார்கள்! இந்த நிகழ்ச்சிய தீபாவளினு நினைச்சுட்டாங்க!

ஒரே நாளில் மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக கார்கள் 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் டெலிவரிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 100 கணக்கான மஹிந்திரா கார்கள்... எல்லாருமே இந்த சம்பவத்தை தீபாவளி பண்டிகைனு நினைச்சுட்டாங்க!

மஹிந்திரா நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காரின் டெலிவரி பணிகளை அண்மையில் தொடங்கியது. நிறுவனத்தின் பிற தயாரிப்புகளைப் போலவே இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஓர் தரமான சம்பவம் இந்தியாவில் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 100 கணக்கான மஹிந்திரா கார்கள்... எல்லாருமே இந்த சம்பவத்தை தீபாவளி பண்டிகைனு நினைச்சுட்டாங்க!

மஹிந்திரா கார் விற்பனையாளர் ஒருவர் ஒரே நாளில் 100-க்கும் அதிகமான யூனிட்டுகள் மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக தயாரிப்புகளை டெலிவரிக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டெலிவரியில் ஸ்கார்பியோ என் காரின் யூனிட்டுகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. அதாவது, மஹிந்திரா டீலரின் இந்த டெலிவரியில் எக்ஸ்யூவி 700 மாடலும் அடங்கும்.

ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 100 கணக்கான மஹிந்திரா கார்கள்... எல்லாருமே இந்த சம்பவத்தை தீபாவளி பண்டிகைனு நினைச்சுட்டாங்க!

ஆனால், இந்த மாடலைக் காட்டிலும் ஸ்கார்பியோ என் காரின் யூனிட்டுகளே அதிக எண்ணிக்கையில் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. மஹிந்திரா கார் விற்பனையாளரின் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்த கார் மாடல்களில் ஸ்கார்பியோவும் ஒன்று. ஆனால், புதுமுகங்களின் வருகையால் இந்த காருக்கு வரவேற்பு லேசாக குறைய ஆரம்பித்தது.

ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 100 கணக்கான மஹிந்திரா கார்கள்... எல்லாருமே இந்த சம்பவத்தை தீபாவளி பண்டிகைனு நினைச்சுட்டாங்க!

இந்த சூழலிலேயே மஹிந்திரா நிறுவனம் புதிய அவதாரத்தில் உருவாக்கிய ஸ்கார்பியோ என் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட முதல் அரை மணி நேரத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமான முன் பதிவுகள் குவிந்தன. மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறையை விற்பனைக்குக் கொண்டு வந்ததற்கான நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்திருப்பதை இந்த புக்கிங் விபரம் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 100 கணக்கான மஹிந்திரா கார்கள்... எல்லாருமே இந்த சம்பவத்தை தீபாவளி பண்டிகைனு நினைச்சுட்டாங்க!

இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலேயே ஒரே நாளில் ஸ்கார்பியோ என் கார் அதிக எண்ணிக்கையில் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலத்திலேயே இந்த தரமான சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. இதில், இன்னும் கூடுதல் சிறப்பு தகவல் என்னவென்றால் டெலிவரிக் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்கார்பியோ என் கார் மாடல்களில் அதிகளவில் அக்காரின் டாப் வேரியண்டான இசட்8எல்-லே டெலிவரிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 100 கணக்கான மஹிந்திரா கார்கள்... எல்லாருமே இந்த சம்பவத்தை தீபாவளி பண்டிகைனு நினைச்சுட்டாங்க!

மேலும், இந்த நிகழ்வின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் டீலர் கார் டெலிவரி சம்பவத்தை விழாவைக் கோலாகலமாக அரங்கேற்றியிருக்கின்றார். ஓர் பரந்த அளவு ரெசார்டை வாடகைக்கு எடுக்கு அங்கு வைத்தே அனைத்து உரிமையாளர்களுக்கும் காரை டெலிவரி கொடுத்திருக்கின்றார். பாட்டு, இசை மற்றும் வெடிகளுடன் கார் பரிசளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, "என்ன இப்போவே இவங்க தீபாவளியைக் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க" என நினைக்கின்ற அளவிற்கு அந்த டீலர் இந்த சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றார்.

ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 100 கணக்கான மஹிந்திரா கார்கள்... எல்லாருமே இந்த சம்பவத்தை தீபாவளி பண்டிகைனு நினைச்சுட்டாங்க!

நாம் செலவு செய்யும் தொகைக்கான மதிப்புமிக்க காராக மஹிந்திரா ஸ்கார்பியோ என் இருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் முந்தைய ஸ்கார்பியோவைக் காட்டிலும் பன்மடங்கு அழகிய காராகவும், அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்டதாகவும் ஸ்கார்பியோ என்-ஐ மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 100 கணக்கான மஹிந்திரா கார்கள்... எல்லாருமே இந்த சம்பவத்தை தீபாவளி பண்டிகைனு நினைச்சுட்டாங்க!

இதன் விளைவாகவே முந்தைய தலைமுறைக்கு கிடைத்துக் கொண்டிருந்ததைப் போலவே இப்போதைய ஸ்கார்பியோவிற்கும் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. புரஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஃபாக் லைட், மஹிந்திரா சிக்னேச்சர் கிரில் மற்றும் க்ரோம் ஸ்லேட், 17.78 செ.மீ., அளவுள்ள க்ளஸ்டர் மற்றும் 20.30 செ.மீ., அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்கார்பியோ என் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் அலெக்ஸா ஆகிய இணைப்பு வசதிகள் கொண்டது. இதுதவிர, 70க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதிகளையும் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் காரில் வழங்கியிருக்கின்றது. பெரிய சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜிங், 3டி சரவுண்ட் வசதிக் கொண்ட 12 ஸ்பீக்கர்கள் கொண்ட சோனி சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட கூடுதல் சிறப்பு வசதிகளும் ஸ்கார்பியோ என்-இல் வழங்கப்பட்டுள்ளன.

ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 100 கணக்கான மஹிந்திரா கார்கள்... எல்லாருமே இந்த சம்பவத்தை தீபாவளி பண்டிகைனு நினைச்சுட்டாங்க!

இதேபோல் பாதுகாப்பு வசதிகளும் இக்காரில் ஏராளமாக கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 6 ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டிசன்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் அம்சம் மற்றும் பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. மஹிந்திரா ஸ்கார்பியோ ரூ. 11.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Haryana mahindra dealer delivers 100 mahindra cars single day
Story first published: Tuesday, October 4, 2022, 8:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X