SERVO xP95 வழங்கும் 6வது எடிசன் வ்ரூம் டிராக் மீட்! இந்தியாவின் பிரீமியர் டிராக் ரேஸ் பற்றிய முக்கிய தகவல்கள்!

SERVO xP95 Presents VROOM Drag Meet 6th Edition — India’s Premier Drag Racing Event Is Here!

சர்வோ எக்ஸ்பி95 (SERVO xP95) வழங்கும் 2022 வ்ரூம் டிராக் ரேஸ் (2022 VROOM Drag Race) போட்டிகள் மிக விரைவில் தமிழகத்தின் ஓசூரில் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டி குறித்து அறிய வேண்டிய அனைத்து முக்கிய விபரங்களையும் கீழே உள்ள பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைப் பார்க்கலாம்.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

மோட்டார் பந்தயத்தை விரும்புபவரா நீங்கள். உங்களுக்கு உற்சாகமளிக்கும் ஓர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2022 வ்ரூம் டிராக் ரேஸ் (2022 VROOM Drag Race) இந்தியாவில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. 6-வது வ்ரூம் டிராக் ரேஸ் போட்டிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

04 மார்ச் 2022 மற்றும் 06 மார்ச் 2022 வரை ஒசூரில் உள்ள தனேஜா ஏரோஸ்போஸ் மற்றும் ஏவியேசன் (Taneja Aerospace & Aviation)-இல் இந்த போட்டி நடைபெற இருக்கின்றது. பெங்களூருவின் புறநகருக்கு மிக அருகில் இந்த இடம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

இந்த போட்டியில் நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக் கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியை எஃப்எம்எஸ்சிஐ (Federation of Motor Sports Clubs of India) கண்கானிக்க இருக்கின்றது. இந்த போட்டியை ரேஸ் பந்தய பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மிக விரைவில் அது தொடங்கப்பட இருக்கின்றது. இந்த நிலையில் வ்ரூம் 2022 பற்றிய அறிய வேண்டிய முக்கிய தகவல்களையும் இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

நாள் 1

04 மார்ச் 2022 அன்று நடைபெற இருக்கும் நிகழ்வுகள்:

இந்த நாளில் போட்டி எதுவும் நடைபெறாது. மாறாக அந்த நாளில் இறுதி பதிவு போன்ற முக்கிய பணிகளே நடைபெற இருக்கின்றது. குறிப்பாக, கண்கானிப்பாளர்கள் போட்டியாளர்களின் பந்தய வாகனங்களை ஆராய இருக்கின்றனர். விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு வாகனம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றதா போன்ற அனைத்தும் முதல் நாளிலேயே சரிபார்க்கப்பட இருக்கின்றது.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

இதையடுத்து, பந்தய வீரர்கள் அணிய இருக்கும் ரைடிங் கியர்களும் சரிபார்க்கப்படும். அனைத்து போட்டியாளர்களும் முதுகு, முழங்கால் மற்றும் தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு கருவிகளை அணிவது கட்டாயம். லெதர் உடை, முழு நீல பூட்ஸ், கையுறைகள் போன்றவற்றை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

இதேபோல், அதி வேக கார் பந்தய போட்டியாளர்களுக்கும் சில பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கிராஷ் ஹெல்மெட், குளோவ்ஸ் மற்றும் ரேஸ் காலணி (ஷூ) உள்ளிட்டவற்றை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் முதல் நாளன்று ரேஸ் டிராக்கை காண அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

நாள் இரண்டு

05 மார்ச் 2022 அன்று நடைபெற இருக்கும் நிகழ்வுகள்:

இந்த தினத்திலேயே போட்டி தொடங்கப்படும். இந்தியாவின் கார்கள் மற்றும் பைக்குகள் சீறி பாயும் நாள் இதுவாகும். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் பைக்குகளைக் கொண்டு போட்டியாளர்கள் அரக்கர்கள் போல பந்தய களத்தில் செயல்படும் நாளாகவும் இது அமையும். டூ ஸ்ட்ரோக், 4-ஸ்ட்ரோக், சிறியது அல்லது பெரியது என பல்வேறு இருசக்கர வாகனங்கள் போட்டியில் கலந்துக் கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

இதேபோல் நான்கு சக்கர வாகனங்களுக்கான போட்டியில் எளிமையான மாருதி சுசுகி ஜென் தொடங்கி ஹைப்பர் வாகனமாக மாற்றப்பட்டிருக்கும் ஹோண்டா சிட்டி வரை பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது. ஆகையால், இரண்டாம் நாள் மிகவும் உற்சாகமான நாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

மூன்றாம் நாள்

06 மார்ச் 2022 அன்று நடைபெற இருக்கும் நிகழ்வுகள்:

இதுவே இறுதி நாள். ஆகையால், பந்தய ஆர்வலர்கள் பெரும் எதிர்பார்ப்பான நாளாக இது அமையும். இதுமட்டுமின்றி, இந்த நாளில் வேற்று நாட்டு தயாரிப்புகள் பங்கு பெறும் நாளும் இதுவே ஆகும். ஆகையால், பந்தய களத்தில் வெளிநாட்டு பைக் மற்றும் கார்களை மார்ச் 6ம் தேதி பார்க்க முடியும். இவை காதை கிழிக்கும் வகையில் அதிக சப்தத்துடன் களம்காண இருக்கின்றன.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

பந்தய களத்தில் பிஎம்டபிள்யூ, ஆடி, லம்போர்கினி, போர்ஷே உள்ளிட்ட நிறுவனங்களின் அதி-வேக கார்களை எதிர்பார்க்கலாம். இதேபோல், சுசுகி ஹயபுசா மற்றும் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் போன்ற விலையுயர்ந்த பிரீமியம் மோட்டார்சைக்கிள்களும் இந்த நாளிலேயே பங்கேற்க இருக்கின்றன.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

வகைப்பாடுகளின் கீழே முடிவுகள் அமையும் (Classifications):

அனைத்து விதமான வாகனங்களும் போட்டியில் பங்கேற்க இருக்கின்றன. அதாவது, வெவ்வேறு திறன்கள் கொண்ட வாகனங்கள் போட்டியில் பங்குகொள்ள இருக்கின்றன. எனவே போட்டி நியாயமற்ற இருக்கக் கூடாது என்பதற்காக நான்கு சக்கர வாகனங்களை 35 வகைகளாகவும், இருசக்கர வாகனங்கள் 20 வகைப்பாடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டியில் பெண் போட்டியாளர்களுக்கும் பங்கேற்க அனுமதி உண்டு. ஆகையால், பெண் ரைடர்கள் தனி வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

பங்கேற்க ஆர்வமா?

இன்றே கடைசி நாள். மார்ச் 1ஆம் தேதி வரை மட்டுமே போட்டிக்கு விண்ணப்பிக்க முடியும். வ்ரூம் ஜெனிவா (vroom geneva) என்ற தளத்தில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பங்கேற்பு கட்டணமாக ரூ. 2 ஆயிரம் இதற்கு செலுத்த வேண்டும். இந்த போட்டி குறித்த கூடுதல் தகவலை பெறுவதற்காக பிரத்யேகமாக அலைபேசி எண்ணையும் போட்டியை நடத்தும் குழு வெளியிட்டுள்ளது. +91 99864 50500 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணே அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஓசூரில் தொடங்குகிறது 2022 வ்ரூம் டிராக் ரேஸ்... பந்தயத்தை பார்க்க ஆவலா இருக்கீங்களா? இதோ முழு விபரம்!

டிக்கெட்:

"என்னால் போட்டியில் எல்லாம் பங்கேற்க முடியாதுங்க. ஆனா இந்த மாதிரி போட்டியை பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்றீங்களா". ரூ. 300 செலுத்தினா இந்த போட்டியை நம்மால் காண முடியும். இந்த டிக்கெட்டை ஆன்லைன் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இன்சைடர்.இன் எனும் தளத்தில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளுடன் பார்வையாளர்கள் போட்டியைக் காண வரலாம். தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போட்டி நடைபெறுவதால் தமிழக அரசு வழிகாட்டியிருக்கும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிப்பவருக்கு விளையாட்டு மைதானத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. வ்ரூம் டிரைக் ரேஸ் பற்றிய மேலும் பல விபரங்களை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 28, 2022, 18:30 [IST]
English summary
Here is all you need to know about vroom drag races
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+