கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

சோப்பு, சீப்பு போல தற்போது வாகனங்களும் ஆன்-லைனில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறு ஆன்-லைனை பயன்படுத்தி வாகனங்களை வாங்குவதனால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும், இதனால் என்ன மாதிரியான அனுபவங்களை நாம் தவறவிடுவோம் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் மனிதர்களின் நடவடிக்கை முற்றிலுமாக மாறிவிட்டது. முன்பு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வந்த பலர் தற்போது தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதலாக அனைத்தையும் ஆன்-லைனிலேயே வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். நேரடி தொடர்பை தவிர்க்கும் விதமாக பல நிறுவனங்கள் இதை ஊக்குவிக்கவும் தொடங்கியிருக்கின்றன.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

வாகன உற்பத்தியாளர்களும் ஆன்-லைன் விற்பனையை ஊக்குவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக பல நிறுவனங்கள் தங்களுடைய வெப்சைட்டில் விர்சுவல் ஷோரூம் வசதியை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஷோரூமுக்கு சென்றால் என்ன மாதிரியான அனுபவம் கிடைக்குமோ, அத்தகைய ஓர் அனுபவத்தை இந்த ஷோரூம் வழங்கும்.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

இந்த மாதிரியான ஓர் வசதியையே தங்களுடைய அதிகாரப்பூர்வ தளங்களில் வாகன உற்பத்தியாளர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இருப்பினும், ஒரு சிலர் தங்களுக்கான வாகனங்களை நேரடியாக ஷோரூம்களுக்கு சென்று வாங்குகின்றனர். இவை இரண்டில் எது பெஸ்ட் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, புதிய வாகனங்களை ஆன்லைனில் வாங்குவது அல்லது நேரடியாக ஷோரூம் சென்று வாங்குவது இவையிரண்டில் எது சிறந்தது என்பதையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

ஆன்லைனில் கார் வங்குவதனால் கிடைக்கும் நன்மைகள்:

கூட்டத்தை தவிர்க்கலாம்:

வீட்டில் இருந்தபடியே கார்களை தேர்வு செய்வதனால், ஷோரூம்களில் காணப்படும் கூட்ட நெரிசலை முற்றிலுமாக தவிர்க்க முடியும். இதுவே ஆன்லைன் ஷோரூம் மற்றும் விற்பனை வருவதற்கு முதன்மையான காரணமாக இருக்கின்றது. ஒரு சில ஷோரூம்களில் எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்படும். ஆகையால், நாம் வாங்க செல்லும் கார்களை சரிவர ஆராய்வதில் சிக்கல் ஏற்படும். இதை ஆன்-லைனில் முற்றிலுமாக தவிர்க்கலாம்.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

டெஸ்ட் டிரைவ் செய்ய வரிசையில் காத்திருக்க தேவையில்லை:

ஷோரூம்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்ய நாம் மட்டுமே செல்கின்றோம் என நினைத்துக் கொள்ள வேண்டாம். அங்கு நம்மை போலவே இன்னும் சிலர் டெஸ்ட் டிரைவிற்காக காத்திருக்கக் கூடியும். அவர்களின் முறை முடிந்த பின்னர் நமக்கான டெஸ்ட் டிரைவ் வாய்ப்பு கிடைக்கும். ஆகையால், நமக்கு முன்னால் உள்ள நபர்கள் டெஸ்ட் டிரைவ் முடிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

விற்பனையக ஊழியர்களின் அலட்சியம்:

சில ஷோரூம்களில் வாகனம் வேண்டும் என்றால் சென்றால்போதும், அவங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிபோல கவனிப்பாங்க. அதேநேரத்தில், நாம் வந்ததைக் கூட கவனிக்காமல் அலட்சியப் போக்கில் செயல்படக் கூடிய ஊழியர்களும் ஒரு சில ஷோரூம்களில் இருக்கதான் செய்கின்றார்கள். அத்தகையோரிடத்தில் நாம் சிக்கிக் கொண்டால், அவ்வளவுதான். நமக்கு தேவையான எந்த தகவலும் அவர்களிடத்தில் இருந்து கிடைக்கவே கிடைக்காது.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

தேவையற்ற தொகைகள் பில்லில் சேர்க்கப்படுவதை தவிர்க்கலாம்:

ஆஃப்-லைனில் வங்க செல்லும்போது ஏற்படும் தேவையற்ற கட்டண சேர்ப்புகளை தவிர்க்க முடியும். வாகன விற்பனையகங்கள் சில ஹேண்ட்லிங் கட்டணம், பார்க்கிங் கட்டணம் எனகூறி பல ஆயிரங்களை சுருட்டிக் கொள்வார்கள். இந்த விஷயத்தை நாம் ஆன்லைனை நாடும்போது முற்றிலுமாக தவிர்த்துவிடலாம். ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட விலையிலேயே நம்மால் காரை பெற்றக் கொள்ள முடியும். இதனால்தான் ஆன்-லைனில் வாகனங்களை வாங்குவது ஊக்குவிக்கப்படுகின்றது.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

தேவையற்றதை உங்கள் தலையில் கட்டுவதை தவிர்க்கலாம்:

சில ஷோரூம்கள் அவர்களின் லாபத்திற்கு தேவையற்ற சில பாகங்கள் அல்லது வர்ண பூச்சுகளலை உங்கள் தலையில் கட்ட முயற்சிப்பர். அதை கட்டாயம் என்றும் அவர்கள் கூறுவர்கள். இதனை ஆன்-லைனில் காரை வாங்கும்பட்சத்தில் முழுமையாக தவிர்த்துவிட முடியும்.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

ஆன்லைனில் காரை வங்குவதனால் சில அனுபவங்களை தவறவிட நேரிடலாம்:

நேரடியாக காணும் அனுபவம் தவர்க்கப்படும்:

என்னதான் 360 டிகிரி வசதியுடன் விர்சுவல் ஷோரூம்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், நேரடியாகக் காணுவதைப் போன்று வராது. அதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான். மிக மேன்மையான கார் வாங்கும் அனுபவத்தை ஷோரூம் சென்று காரை வாங்கினால் மட்டுமே பெற முடியும்.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

செலவை குறைக்க ஆலோசனை மேற்கொள்ளலாம்:

சில கார் விற்பனையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து செலவை குறைக்க போதியளவு உதவிகளை வழங்குவர். குறிப்பாக, தேவையற்ற துணை கருவிகள் மற்றும் பாகங்களை அகற்றுவதன் வாயிலாக கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும். ஆனால், ஆன்லைனில் கார் வாங்கும்போது இதை செய்வது சற்று கடினம்.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

டெலிவரிக்கு முன்னரே வாகனத்தை ஆய்வு செய்ய முடியும்:

உங்களுக்கான காரை டெலிவரி பெறுவதற்கு முன்னரே கராஜிக்கு நேரடியாக சென்று அக்காரை பரிசோதிக்க முடியும். ஆனால், ஆன்லைனில் வாங்கும்போது அவ்வாறு செய்வது தவிர்க்கப்படலாம். ஏனெனில், ஆன்-லைன் கார் டெலிவரிக்கான கராஜிக்கு உங்களிடம் இருந்து பல நூறு கிமீட்டர் அப்பால் இருக்கலாம்.

கார்களை ஆன்லைன்ல வாங்குறது நல்லதா இல்ல ஷோரூம் போயி வாங்குவது நல்லதா... எதுல லாபம் அதிகம்? முழு விபரம்!

பெரிய கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம்:

ஷோரூம்களில் டெலிவரி எடுக்க செல்லும்போது நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒரு கூட்டமாக சென்று காரை டெலிவரி எடுக்கலாம். கேக் வெட்டிக் கொண்டாடலாம். ஏன், அங்கு ரீலும் எடுக்கலாம். ஆகையால், ஓர் கொண்டாட்டமான அனுபவத்தை அங்கு அனுபவிக்கலாம்.

மேலே இருப்பவையே ஆன்லைன் மற்றும் நேரடியாக வாகனங்களை வாங்கும் நிலவும் நிறை-குறைகள் ஆகும். இதுல நீங்க எந்த வழியை பயன்படுத்தி உங்களுக்கான காரை வாங்க போறீங்க...

More from DriveSpark

Article Published On: Saturday, October 8, 2022, 16:28 [IST]
English summary
Here is benefits while buying cars on online
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+