ஹோலியில் இருந்து உங்க காரை காப்பாத்தணுமா? இத ஃபாலோ பண்ணுங்க! பறவைகள், அழுக்குகள் இடமிருந்தும் இது காப்பாத்தும்
ஹோலியில் இருந்து ஊங்க காரை காப்பத்தணுமா? உங்களுக்கான டிப்ஸ். டாப் 5 கார் கேர் டிப்ஸ்களை வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி. வட மாநிலங்களில் மட்டுமின்றி வட மாநில மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் இந்த பண்டிகை மிக கோலாகளமாகக் கொண்டாடப்படுகின்றது. மிக துடிப்பான இந்த பண்டிகை தினத்தில் வண்ணப் பொடிகளே கொண்டாட்டக்காரர்களுக்கு இடையில் பேசும்.

ஆகையால், மிகவும் வண்ண மயமான பண்டிகையாக இது இருக்கின்றது. இந்த நாள் கொண்டாட்டக்காரர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியான நாளாக அமையலாம், வாகன உரிமையாளர்களுக்கு அல்ல. ஆம், வண்ண பொடிகளின் தூவலால் சில நேரங்களில் வாகனங்களும் அவற்றின் உண்மையான நிறத்தை இழந்து ஹோலி கொண்டாட்டக்காரர்களாக மாறிவிடுகின்றன.

இந்த நிலை அந்தந்த வாகனங்களின் உரிமையாளர்களை வருத்தத்தை தரும் வகையில் அமைகின்றது. கார்கள் மீது படியும் நிறங்களை போக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சூழலில் நம்முடைய வாகனங்களை எப்படி கலர் பொடிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வைப்பது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மூடப்பட்ட பார்க்கிங்
ஹோலி கொண்டாட்டங்கள் பொதுவாக வெளிப்புற பொது இடங்களில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. ஆகையால், ஹோலியில் இருந்து உங்கள் காரை காப்பாற்ற மூடப்பட்ட பார்க்கிங் இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும். இந்த வசதி இல்லை எனில் கூட்டம் அதிகம் சேராத இடங்களில் காரை பார்க் செய்து கொள்ளலாம்.

இதுவும் முடியாத எனில் வாகனங்களை தரமான போர்வைகளைக் கொண்டு போர்த்திக் கொள்ளவும். குறிப்பாக, வண்ணப் பொடிகளால் பாதிக்கப்படாத போர்வைகளைக் கொண்டு காரை மூடுவது நல்ல பலனை அளிக்கும். இவற்றைக் கடைபிடித்தால் போதும் நிச்சயம் பெரும்பாலான பாதிப்புகளில் இருந்து உங்கள் காரை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

கார் வாக்ஸ்
கார் வாக்ஸ் பாதுகாப்பு கவசத்தை போல் செயல்பட்டு காரின் நிறத்தை பாதுகாக்கும். மேலும், காருக்கு மேல் படியும் தூசி, அழுக்கு ஆகியவற்றை மிக எளிதில் நீக்கவும் இது உதவும். ஆகையால், ஹோலி பண்டிகையில் இருந்து மட்டுமில்லைங்க பறவைகளின் எச்சம், கோடை வெயில் மற்றும் அதிக தூசி ஆகியவற்றில் இருந்து கார் வாக்ஸ் உங்களது வாகனத்தை பாதுகாக்கும். இதுமட்டுமின்றி, மர இலை மற்றும் சருகுகளால் ஏற்படும் சிறு சிறு கீரல்களில் இருந்து கார் வாக்ஸ் காப்பாற்றும்.

டெஃப்ளான் கோட்டிங்
டெஃப்ளான் கோட்டிங் சற்று காஸ்ட்லியான ஒன்றாகும். இது தூசி, வெயில் மற்றும் ஹோலி போன்றவற்றில் இருந்து மட்டும் உங்களது காரை காப்பாற்றாது. கூடுதலாக, விரைவாக பொலிவை இழத்தலில் இருந்து டெஃப்ளான் கோட்டிங் உங்கள் வாகனத்தைக் காப்பாற்றும். ஆம், எப்போதும் புத்தம் புதிய கார் போல் வைத்திருக்க இது உதவும். எனவேதான் கார் பிரியர்கள் வாகனத்தை வாங்கிய கையோடு டெஃப்ளான் கோட்டிங்கை செய்து முடித்துவிடுகின்றனர்.

ஜன்னல்களை மூடி வைத்துக்கொள்ளுங்கள்
இந்த ஹோலி பண்டிகையின்போது உங்களது காரின் வெளிப்புறத்தை மட்டுமில்லைங்க, உட்புறத்தையும் அதிக கவனத்துடன் பாதுகாக்க வேண்டியது அவசியமானது. காரின் ஜன்னல் மிக மிக சிறியளவில் இருந்திருந்தால்கூட சிக்கல்தான். தூசி மட்டுமில்ல காற்றுடன் கலந்த வண்ண பொடிகளும் உங்களது காரின் உட்பகுதிக்குள் புகுந்துவிடும். ஆகையால், ஒரு முறைக்கு பல முறை கார் சரியாக மூடப்பட்டுள்ளதா?, ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதா?, என்பதை ஒரு முறை முழுமையாக ஆராய்ந்துக் கொள்ளுங்கள்.

கார் வாஷ்
கறை படியக் கூடாதுனு எவ்ளோ பாத்துக்கிட்டோங்க, இருந்தும் அழுக்காயிருச்சுனு கவலப்படுறீங்க. முதல் கவலைப்படுறத நிறுத்திட்டு காரை சுத்தமா வாஷ் பண்றதுக்கான முயற்சியில களமிறங்குங்க. ஏன்னா, கறைகளை எவ்வளவு நேரம் அதிகமா ஊற வைக்கின்றோமோ அவ்வளவும் அதிக கடினமாகிவிடும். ஆகையால், கறைகள் முழுமையாக போகும் வரை அவற்றை கழுவுவது நல்லது. குறிப்பாக, மூலை முடுக்குகளை ஆராய்ந்து பார்த்து கழுவது மிக சிறப்பானது.

மிக முக்கியமான அறிவுரை:
ஹோலி கொண்டாடிய உடையோடு காருக்குள் நுழைவதை தவிர்த்துவிடுங்கள். ஆடை மீது படிந்திருக்கும் நிறங்கள் காரின் உட்புறத்தையும் பதம் பார்க்க இது வழி வகுக்கும். ஆகையால், முடிந்தளவு மாற்று உடையுடன் அல்லது கார் கறைபடியாத வேறு வழிகளைக் கையாண்டு காருக்குள் நுழைவது நல்லது.


Click it and Unblock the Notifications








