வெற்றிகரமாக 3வது தசாப்தத்தை நோக்கி பயணிக்கும் ஆல்டோ... விற்பனையில் கொடி கட்ட பறக்க இவைதான் காரணங்களா?

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ (Maruti Suzuki Alto) கார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் சிறந்த விற்பனையாகும் காராக இருப்பதற்கான ஐந்து முக்கிய காரணிகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த தகவலைக் கீழே காணலாம்.

2 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

மாருதி சுசுகி நிறுவனம் அதன் ஆல்டோ (Maruti Suzuki Alto) ஹேட்ச்பேக் ரக காரை 2000-த்தில் தான் முதன் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அனைத்து தட்டு மக்களும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கார் இந்தியா கொண்டு வரப்பட்டது. மாருதியின் இந்த நோக்கத்தை நிவர்த்தி செய்யும் வகையில் அடுத்த ஒரு சில ஆண்டுகளிலேயே மக்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பை ஆல்டோ பெற்றது.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

குறிப்பாக, அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு மிக மிக சிறந்த விற்பனையாகும் காராக ஆல்டோ மாறியது. ஏன், தற்போதும் இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு நிலவி வருகின்றது. இக்காரின் கச்சிதமான தோற்றம்அன்றாட போக்குவரத்திற்கு ஏற்ற வாகனமாக காட்சியளிக்கின்றது.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

இதுபோன்று இன்னும் பல்வேறு காரணங்களே இக்காரை பல தசாப்தங்களாக இந்திய சந்தையில் நீடித்திருக்க காரணமாக இருக்கின்றன. அவை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்தியாவில் மூன்றாவது தசாப்தத்தை நோக்கி இந்திய சந்தையில் ஆல்டோ பயணித்துக் கொண்டிருப்பதற்கான ஐந்து முக்கிய காரணங்களையே பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

மலிவு விலை:

ஆல்டோ இந்தியாவின் மிகவும் மலிவு விலைக் கொண்ட காராகும். இது ரூ. 3.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மலிவு விலையே பலர் இக்காரை வாங்க காரணமாக இருக்கின்றது. குறிப்பாக, முதல் முறையாக காரை வாங்குவோரின் மிகவும் விருப்பமான காராக இது இருக்கின்றது.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

அதேநேரத்தில் இந்த கார் அதிக பாதுகாப்பான மற்றும் அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளை தாங்கிய வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. அதாவது, பெரிய உருவம் கொண்ட கார்களில் இருப்பதைப் போல ஸ்மார்ட் ப்ளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு அம்சம், ஜிபிஎஸ் நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆடியோ உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

இதுதவிர, ஏர் பேக்குகள், ஏபிஎஸ், வெயிக்கிள் டிராக்கிங் மற்றும் வெயிக்கிள் செக்யூரிட்டி அலர்ட் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் ஆல்டோவில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், பவர் ஸ்டியரிங், பவர் விண்டோ, உள்ளிருந்தே ஓஆர்விஎம்-களை அட்ஜஸ்ட் செய்யும் அம்சம் உள்ளிட்டவையும் இக்காரில் உள்ளன. இதுமாதிரியான அம்சங்கள் இருப்பதனாலயே மக்களின் ஆதரவு தற்போதும் மாருதி ஆல்டோவிற்கு கிடைத்து வருகின்றது.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

இது மாருதியின் தயாரிப்பு:

மாருதியின் தயாரிப்பு என்றாலே குறைந்த பராமரிப்பு செலவு, அதிக எரிபொருள் சிக்கனம் என்பதே நம் நினைவிற்கு வருகின்றது. இதனை மிக தாரளமாக வழங்கும் ஓர் காராக ஆல்டோ காட்சியளிக்கின்றது. அதாவது, மாருதி ஆல்டோ அதன் ஆயுட் காலம் வரையிலுமே மிக மிக குறைவான பராமரிப்பு செலவையே வழங்கும் வாகனமாக காட்சியளிக்கின்றது. எனவேதான் வெகுஜனங்களின் விருப்பமான காராக இது காட்சியளிக்கின்றது.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

இந்தியாவிற்காக, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வாகனம்:

இந்தியா பன்முக கலாச்சாரங்களை மட்டுமல்ல பன்முக நிலப்பரப்பையும் கொண்ட ஓர் நாடாகும். இத்தகைய நாட்டிற்கு ஏற்பவே இந்த ஆல்டோ உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, உருவத்திலும், எஞ்ஜின் திறன் என அனைத்திலும் சிறப்புமிக்க வாகனமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

எனவேதான், இந்தியாவின் மிகக் கடுமையான சாலை அமைப்பைக் கொண்டுள்ள கேரளா, காஷ்மீர், ஹிமாச்சலம் மற்றும் வடகிழக்கு ஆகிய மாநிலங்களிலும் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், மிக சிறந்த முறுக்கு விசையை வெளியேற்றும் திறனைக் கொண்டிருப்பதே இதற்கு காரணமாக இருக்கின்றது. மேலும், இதன் மிக சிறிய உருவம் மிக குறுகலான பாதைகளைச் சமாளிப்பதற்கு ஏதுவாக இருக்கின்றது.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

நேர்த்தியான இட வசதி:

பார்ப்பதற்கு மிக சிறிய காராக ஆல்டோ தென்பட்டாலும், காரின் உட்பகுதியில் மிகவும் நேர்த்தியான இட வசதி தென்படுகின்றது. ஓர் சிறிய குடும்பம் பயணிப்பதற்கு ஏதுவான இட வசதியை அது கொண்டிருக்கின்றது. எனவேதான், சிறிய குடும்பங்களைக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

அதேவேலையில், இதன் சிறிய உருவம் நகர போக்குவரத்திற்கு ஏற்றதாகவும் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி, ஓட்டுநர் இருக்கையில் இருந்து பார்க்கும் போது மிக சிறந்த தெரிவு நிலையை அது வழங்குகின்றது. ஆகையால், மிக சிறந்த இயக்க அனுபவத்திற்கு உறுதியளிக்கும் வாகனமாக இது காட்சியளிக்கின்றது. இந்த காரணங்களும் மக்கள் இப்போதும் ஆல்டோவிற்கு ஃபேனாக இருக்க காரணமாக இருக்கின்றது.

3 தசாப்தங்களாக விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி ஆல்டோ... இதுதான் காரணங்களா?

ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்:

சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் காராக ஆல்டோ காட்சியளிக்கின்றது. தற்போது, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்காரின் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டர் 22.05 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 31.59 கிமீட்டர் வரையும் மைலேஜ் தரும். ஆகையால், ஆல்டோ மிக சிறந்த மைலேஜ் வழங்கும் காராக காட்சியளிக்கின்றது. இதனால், அதிகம் மைலேஜையும் விரும்புவோர்களின் தேர்வில் இக்கார் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 12, 2022, 11:57 [IST]
English summary
Here is five reasons why maruti alto best selling car across 3 decades
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+