என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன?

சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய சொகுசு காரின் பாதுகாப்பு வசதிகள்குறித்த விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த வாகனம் ஆகும். சொகுசு வசதிகள் மட்டுமில்லைங்க பதுகாப்பு அம்சங்களையும் மிக தாராளமாகக் கொண்ட காராக அது காட்சியளிக்கின்றது. இந்த காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்திலேயே டாடா குழுமத்தின் முன்னாள் சேர்மேன் சைரஸ் மிஸ்த்ரி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இவரின் இறப்பு ஒட்டுமொத்த வாகன உலகையுமே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது.

என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன தெரியுமா?

வாகன உலகத்தைச் சேர்ந்த மிக முக்கியமான நபர் இவர் ஆவார். இவரின் இழப்பு வாகன உலகிற்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அதிலும், அவர் பயன்படுத்திய சொகுசு காரே அவரின் உயிர் பிரிவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த சொகுசு கார் அப்படி என்ன மாதிரியான சிறப்பு வசதிகளையும், குறிப்பாக, பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார் என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 220டி 4 மேட்டிக் மற்றும் 300 4மேட்டிக் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பாதுகாப்புகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பெற்றிருக்கின்றது. யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேய இத்தகைய சூப்பரான பாதுகாப்பு ரேட்டிங்கை ஜிஎல்சி பெற்றிருக்கின்றது.

என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன தெரியுமா?

அதாவது, என்ன மாதிரியான விபத்தைச் சந்தித்தாலும் இந்த கார் குறைந்தபட்ச காயங்களுடன் அதன் பயணிகளைக் காப்பாற்றும் என்பதற்கான சான்றே இதுவாகும். அதேவேலையில், என்னதான் மிக அதிக ரேட்டிங்கை கிராஷ் டெஸ்டில் பெற்றாலும் சில கார்கள் மிக மோசமான விபத்தைச் சந்திக்கும்போது உயிர் பலியை வாங்கிவிடுகின்றன.

என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன தெரியுமா?

அந்தமாதிரியான ஓர் விபத்தையே சைரஸ் மிஸ்திரி சந்தித்திருக்கின்றார். விபத்தின் காரணமாக காரின் முகப்பு பகுதி முழுவதுமாக சிதிலமடைந்திருக்கின்றது. விபத்தின்போது ஏற்படும் தாக்கங்களைத் தாங்கிக் கொள்ளும் வசதிக் கொண்ட முன் பக்கம் வழங்கப்பட்டிருக்கின்றபோதிலும் மிக மோசமாக முன் பக்கம் உருகுலைந்திருக்கின்றது.

என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன தெரியுமா?

இதற்கு மிக மிக அதிக வேகத்தில் அந்த கார் பயணித்ததே காரணம் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 20 கிமீ இடைவெளியை மிஸ்த்ரி பயணித்த கார் 9 நிமிடங்களுக்கும் குறைவாக கடந்திருக்கின்றது. இத்தகைய உச்சபட்ச வேகத்தில் சென்றபோதே அவர் திடீரென சாலை தடுப்பில் மோதியிருக்கின்றார். இந்த மிக மோசமான விபத்தின் காரணமாகவே மிஸ்த்ரி மரணித்திருக்கின்றார்.

என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன தெரியுமா?

பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும், அவை மிஸ்த்ரியை காப்பாற்ற தவறி விட்டிருக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களாக இந்த சொகுசு காரில் பன்முக ஏர் பேக்குகள், சீட் பெல்ட், ப்ரீ-சேஃப் சிஸ்டம், மிக மோசமான விபத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பான்னட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவையே அவரை பாதுகாக்க தவறிவிட்டிருக்கின்றன.

என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன தெரியுமா?

இந்த விபத்தில் மிஸ்த்ரியுடன் சேர்ந்து ஜஹாங்கீர் பன்டோல் என்பவரும் இறந்திருக்கின்றார். காரை அஹனிதா பன்டோல் என்பவர் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகின்றது. சாலையில் இருந்த தடுப்பின் காரணமாக ஏற்பட்ட சிறு தடுமாற்றத்தினலாயே இந்த மோசமான விபத்து அரங்கேறியிருக்கின்றது. விபத்தை நேரில் கண்ட சாட்சிகள், "அதிக வேகமாக வந்த கார் அதற்கு முன்னாள் சென்ற வாகனத்தை கடக்க முயன்றது. அப்போது, ஏற்பட்ட நிலை தடுமாற்றமே இந்த பெரும் விபத்தை ஏற்படுத்தியது" என கூறியுள்ளனர்.

என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன தெரியுமா?

விபத்திற்கு மிக முக்கியமான காரணம் அதிக வேகம் என்பதை நாம் யாராலும் மறுக்க முடியாது. மேலும், இந்த விபத்து ஓர் முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றது. என் மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனமாக இருந்தாலும், அதீத வேகம் உயிரைக் கொல்லும் என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றது.

என்ன பாதுகாப்பு அம்சம் இருந்து என்ன பயன்? சைரஸ் மிஸ்த்ரி பயன்படுத்திய பென்ஸ் காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்ன தெரியுமா?

பொதுவாக, சொகுசு கார்கள் விபத்தில் சிக்கினால் உயிர் சேதம் என்பது பெரும்பாலும் ஏற்படாது. கடுமையான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பிப்பார்கள். இதனால்தான் பலர் சைரஸ் மிஸ்த்ரியின் உயிரிழப்பைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். மேலும், அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையிலேயே விபத்திற்கு பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகளை விபத்தை நேரில் பார்த்தவர்களும், காவல்துறையும் விளக்கியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, September 5, 2022, 18:47 [IST]
English summary
Here is full details about cyrus mistry mercedes glc
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+