டாப் 5 ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களும், அவற்றின் சிறப்புகளும்... அட இத்தன நாளா இது தெரியாம போச்சே!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும், அவற்றின் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிராஃபிக்கில் வாகனங்களை இயக்குவது என்பது அவ்வளவு சாதரமான விஷயமல்ல. அதிலும், மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட வாகனங்களை ஓட்டிக் கொண்டிருக்கும் அதிக வாகன நெரிசல் சிக்கினோம்னு வச்சுக்கோங்க அவ்ளோதான். எப்போதான் வீடு போய் சேருவோமுனு அது நம்மை போதும் போதுமென ஆக்கிவிடும்.

இத்தகைய இன்னல்களை உணர்ந்தே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தானியங்கி கியர்பாக்ஸ் வசதியை வழங்க தொடங்கியிருக்கின்றன. இவற்றின் விலை பெரியளவில் அதிகம் இல்லை என்பதால் பலர் தானியங்கி டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட கார்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அதேநேரத்தில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த தானியங்கி தேர்விலேயே பல விதமான தேர்வுகளை வழங்குகின்றன. அந்தவகையில், தற்போது இந்தியாவில் ஐந்துவிதமான தானியங்கி தேர்வுகள் கிடைக்கின்றன. டிசிடி (ட்யூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்), ஐஎம்டி (இன்டெல்லிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்), ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி), சிவிடி (கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்) மற்றும் டார்க் கன்வெர்டர் ஆகிய தேர்வுகளிலேயே அவை கிடைக்கின்றன.

இந்த டிரான்ஸ்மிஷன் அம்சங்களின் சிறப்புகள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.
டிசிடி - ட்யூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT-Dual Clutch Transmission)
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அமைப்பின் மிக சிறப்பான பரிமாண வளர்ச்சியாக இந்த டிசிடி அம்சம் இருக்கின்றது. மிகவும் மென்மையான கியர் மாற்றங்களை வழங்க ஏதுவாக இது இருக்கின்றது. மேலும், வேகமான மற்றும் துள்ளியமான கியர்ஷிஃப்டுகளுக்கும் இது வழி வகுக்கின்றது.

ஆனால், எரிபொருள் சிக்கனத்தில் இந்த டிரான்ஸ்மிஷன் கோட்டையை விட்டிருக்கின்றது. ஆம், பிற தானியங்கி டிரான்ஸ்மிஷன் அமைப்புகளைக் காட்டிலும் மிகக் குறைவான மைலேஜே டிசிடி அம்சம் கொண்ட கார்கள் வழங்குகின்றன. அதேநேரத்தில் மிக மிக சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்குவதில் இது முன்னோடியாக விளங்குகின்றது.

ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் கார்களில் மிக சிறந்த வசதியாக ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்படுகின்றன. இவையே வழக்கமான கார்களைக்கூட ரேஸ் கார்களைப் போல் செயல்பட வைக்க உதவுகின்றன. தற்போதைய நிலவரப்படி ஸ்கோடா சூப்பர்ப், ஜீப் காம்பஸ் மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்ட கார் மாடல்களில் டிசிடி தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஐஎம்டி - இன்டெல்லிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (IMT-Intelligent Manual Transmission)
இன்டெல்லிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட வாகனங்களை முழு தானியங்கி வாகனங்கள் என்று கூறிவிட முடியாது. இது வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட வாகனங்களை இருக்கும். ஆனால், சிறு வித்தியாசமாக கியரை மாற்றும்போது க்ளட்ச் அழுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஆம், க்ளட் வசதி இல்லாத வாகனமே இந்த ஐஎம்டி வாகனங்கள்.

இது ஒவ்வொரு முறையும் க்ளட்சை தேடி பிடித்து அழுத்த வேண்டும் என்ற நிலையை மழுங்க செய்ய உதவுகின்றது. ஒவ்வொரு முறையும் கியரை மாற்றும்போது தானாகவே ஆக்சுவேட்டர்கள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றின் வாயிலாக க்ளட்ச் இயங்கும் வகையில் இந்த கியர்பாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏஎம்டி - ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT-Automated Manual Transmission)
இது அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கக் கூடிய டிரான்ஸ்மிஷனாக காட்சியளிக்கின்றது. மேலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட கார் மாடல்களில் சென்சார்கள் மற்றும் ஆக்சுவேச்சர்கள் வாயிலாக க்ளட்ச் இயங்குகின்றது. எனவேதான், இதைக் கொண்ட வாகனங்கள் எரிபொருள் சிக்கனம் கொண்டவையாக காட்சியளிக்கின்றன.

இந்த அம்சமானது தற்போது ஆரம்ப நிலை கார்களில்கூட கிடைக்க தொடங்கியுள்ளது. மாருதி சுஸுகி இக்னிஸ், டாடா டியாகோ, ஹூண்டாய் ஐ10 உள்ளிட்ட சிறிய கார்களிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி காட்சியளிக்கின்றது.

சிவிடி - கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (CVT-Continuously Variable Transmission)
புல்லிஸ் மற்றும் பெல்ட் வாயிலாகவே சிவிடி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட கார்கள் கியர்களை ஷிஃப்ட் செய்கின்றன. இவையிரண்டும் சேர்ந்து கியர் ரேசியோக்களை எல்லையில்லாமல் வழங்க உதவுகின்றன. மேலும், மிக சிறப்பான ஸ்விஃப்டுகளை இந்த கியர்பாக்ஸ் வழங்கும். டொயோட்டா யாரிஸ் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற கார்களில் இந்த அம்சம் வழங்கப்படுகின்றது.

டார்க் கன்வெர்டர் (Torque Converters)
தானியங்கி டிரான்ஸ்மிஷன் உலகின் மிகவும் பழைமையான தொழில்நுட்பமாக தானியங்கி டார்க் கன்வெர்டர் டிரான்ஸ்மிஷன் இருக்கின்றது. இருப்பினும், சில ஆடம்பர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் கார் மாடல்களில் தற்போதும் இந்த அம்சத்தை வழங்கி வருகின்றன. காரணம், மிக சிறப்பான கியர்ஷிஃப்டை இவை வழங்கும்.

அதேநேரத்தில் மிக பெரிய அவலம் என்னவென்றால் இந்த அம்சம் கொண்ட கார்கள் அதிகளவில் மைலேஜை வழங்காது. அதேவேலையில், மிக ஸ்மூத்தான இயக்கம், டிரான்ஸ்மிஷனை அது வழங்குகின்றது. மாருதியின் விட்டார ப்ரெஸ்ஸா, ஹூண்டாய் வெர்னா மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்ட கார் மாடல்களில் இந்த அம்சம் தற்போது வழங்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








