உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்!.. வேற லெவல் டிசைன்ல காரை வடிவமைச்சிருக்காங்க!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் உலக சந்தைக்கான புதுமுக மின்சார வெளியீடு செய்திருக்கின்றது. இப்புதுமுக எலெக்ட்ரிக் கார் பற்றிய முழு விபரத்தையும் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

உலக சந்தைக்கான புதுமுக மின்சார் கார் ஒன்றை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. புத்தம் புதிய ஐயோனிக் 6 இவி (IONIQ 6) மின்சார காரையே நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. நிறுவனம் ஐயோனிக் பெயரில் உருவாக்கியிருக்கும் இரண்டாவது தயாரிப்பு இதுவாகும். ஏற்கனவே நிறுவனம் ஐயோனிக் 5 (IONIQ 5) எனும் மின்சார கார் ஒன்றை உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

இதைத்தொடர்ந்து, ஐயோனிக் 6 இவி-யையும் நிறுவனம் உலக நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. வெகு விரைவில் இக்காரை ஹூண்டாய் அதிகாரப்பூர்வாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சமீப காலமாக வெறும் டீசர் படம் மற்றும் வீடியோ வாயிலாக இக்காரை காட்சிப்படுத்தி வந்த ஹூண்டாய் நிறுவனம் முதல் முறையாக முழுமையாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றது.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

இந்த மின்சார காரை உலக சந்தையைத் தொடர்ந்து இந்திய சந்தையிலும் ஹூண்டாய் விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் வருவது குறிப்பிடத்தகுந்தது. இதன் வரிசையில் புதிதாக வெளியீட்டைப் பெற்றிருக்கும் ஐயோனிக் 6 இவி-யையும் அது இணைக்க எக்கசக்க வாய்ப்புகள் உள்ளன.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

ஹூண்டாய் நிறுவனம் புதிய ஐயோனிக் 6 இவி-யை மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த வாகனமாக உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், மிக பிரமாண்டமான தயாரிப்பாக அது காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி காரின் அழகும் கண்களைக் கவரும் வகையில் உள்ளது. இக்காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு எலெக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்பாரமே காரணமாக உள்ளது.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

இ-ஜிஎம்பி என்று குறிப்பிடப்படும் இந்த பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே நிறுவனம் புதுமுக எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கின்றது. இந்த பிளாட்பாரத்திலேயே ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஐயோனிக் 5 இவி காரின் உற்பத்தி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கியா இவி-6 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தியும் இந்த பிளாட்பாரத்தில் வைத்தே செய்யப்படுகின்றது.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

ஆகையால், இந்த கார்களில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் பல புதிய ஹூண்டாய் ஐயோனிக் 6 இவி-யிலும் இடம் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. அதுமட்டுமில்லைங்க, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் கிடைப்பதைப் போல இரு விதமான பேட்டரி பேக்குகளும் ஹூண்டாய் ஐயோனிக் 6 இவி-யில் எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

58 kWh மற்றும் 77.4 kWh ஆகிய இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலேயே ஐயோனிக் 5 இவி விற்பனைக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி 225 HP சிங்கிள் மோட்டார் - ரியர் வீல் டிரைவ் மற்றும் 321 எச்பி ட்யூவல் மோட்டார் ஆல் வீல் டிரைவ் அம்சங்களும் அதில் வழங்கப்படுகின்றன. இதுமாதிரியான தேர்வுகளுடனேயே ஹூண்டாய் ஐயோனிக் 6 இவி எதிர்பாக்கப்படுகின்றது.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

இந்த செடான் மிகவும் சூப்பரான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. காரின் முன், பின் மற்றும் பக்கவாட்டு பகுதி என அனைத்தும் பார்வையாளர்களைச் சுண்டியிழுக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, காரின் முழு தோற்றம் போர்ஷே தயாரிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. அதேநேரேத்தில், லேசாக ஐயோனிக் 5 காரின் தோற்றத்தை தழுவியும் அது உருவாக்கப்பட்டுள்ளது.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

இதேபோல் காரின் உட்பக்கமும் மிகவும் ரம்மியமானதாக காட்சியளிக்கின்றது. பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் சொகுசு அம்சங்களால் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 12 அங்குல இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திரையில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும்.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

இத்துடன், டூயல் டோன் ஆம்பியன்ட் லைட், 64 விதமான வண்ண தேர்வுகளுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பன்முக கன்ட்ரோல் பட்டன்கள், பிக்சல் லைட்டுகள் கொண்ட டூ-ஸ்போக் ஸ்டியரிங் வீலும் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது காரின் இயக்கத்தை மிக சூப்பரானதாக மாற்ற உதவும்.

உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்... வேற லெவல் டிசைன்ல இந்த காரை வடிவமைச்சிருக்காங்க!

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளுடனேயே புதிய ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ வருகை இந்தியாவில் 2023ம் ஆண்டில் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Here is full details about hyundai ioniq 6 ev
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X