மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது!

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara)வின் உயர்நிலை தேர்வான ஆல்ஃபா ட்ரிம்மில் இடம் பெற இருக்கும் பிரீமியம் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளின் விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது... நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) எஸ்யூவி-வும் ஒன்று. இந்த காரின் உயர்நிலை வேரியண்டான ஆல்ஃபா தற்போது விற்பனையாளர் ஷோரூம்களில் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றது. கார் பிரியர்களின் கவனத்தைக் கூடுதலாகக் கவரும் பொருட்டு அது முன்னிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது... நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய கிராண்ட் விட்டாரா காரை நெக்ஸா ஷோரூம் வாயிலாகவே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஆகையால், தற்போது நெக்ஸா ஷோரூமிலேயே அக்கார் தற்போது தனது தரிசனத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் உயர்நிலை தேர்வு என்பதால் எக்கசக்க சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றது.

மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது... நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

பனோரமிக் சன்ரூஃப், ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் ஆல் கிரிப் எனப்படும் அனைத்து வீல் இயக்க அம்சம் உள்ளிட்ட பன்முக சிறப்பு வசதிகள் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவின் ஆல்ஃபா வேரியண்டில் இடம் பெற்றிருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் ஆல்ஃபா தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றது. அவை என்ன என்பது பற்றிய முழு விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது... நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

ஆல்ஃபா ட்ரிம்மில் கிராண்ட் விட்டாராவின் உட்பக்கம் முழு பிரீமியம் தோற்றத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. லெதராலான இருக்கை மற்றும் ஸ்டியரிங் வீலே இத்தேர்வின் பிரீமியம் தோற்றத்திற்கு ஆரம்ப புள்ளியாக இருக்கின்றது. இந்த இருக்கைகள் வெண்டிலேட் வசதிக் கொண்டவை என்பது கவனிக்கத்தகுந்தது.

மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது... நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

இதைத்தொடர்ந்து, ஆல்ஃபா ட்ரிம்மின் உட்பக்கத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக பெரிய 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்பத்தைக் கொண்ட திரை ஆகும். இதுதவிர, ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், காரின் பின் பக்கத்திற்கும் ஏசி வெண்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழையும் வசதி மற்றும் தானாகவே மடக்கிக் கொள்ளும் பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் என பல அம்சங்கள் ஆல்ஃபா ட்ரிம்மில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது... நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

இதேபோல், பாதுகாப்பு அம்சங்களையும் மிக அதிகளவில் இந்த ட்ரிம்மில் மாருதி சுஸுகி வழங்கியிருக்கின்றது. ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா பிளஸ் ட்ரிம்களில் 6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் பாயிண்டுகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம், இரவு - பகல் இரண்டுக்குமான ஐஆர்விஎம் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை கிராண்ட் விட்டாரா ஆல்ஃபா ட்ரிம்மில் நம்மால் காண முடிகின்றது.

மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது... நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

மிக முக்கியமான அம்சமான ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்தையும் இந்த ட்ரிம்மிலேயே மாருதி சுஸுகி வழங்குகின்றது. 1.5 லிட்டர், 3 சிலிண்டர், நேச்சுரல்லி அஸ்பைரேடட் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த இ-சிவிடி கியர்பாக்ஸ் உதவியுடன் 114.5 பிஎச்பி பவரை வெளியேற்றும். மேலும், ஒரு லிட்டருக்கு 27.97 கிமீ வரை இந்த வெர்ஷன் மைலேஜ் தரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது... நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

ஆகையால், கிராண்ட் விட்டாரா ஆல்ஃபா ட்ரிம் அதிக தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் அம்சங்களைக் கொண்ட வாகனம் மட்டுமல்ல, அது மிக அதிக மைலேஜை வழங்கக் கூடிய வாகனமும் ஆகும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, மற்றுமொரு மோட்டார் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அது மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்ப அம்சத்துடன் கிடைக்கும். இந்த தேர்வில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர், நேச்சுரல்லி அஸ்பைரேடட் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது... நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

இது அதிகபட்சமாக 101.6 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாரை 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் ஆகிய இரு விதமான தேர்வுகளில் வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். மாருதி சுஸுகி நிறுவனம் இந்த கிராண்ட் விட்டாரா காரை டொயோட்டா நிறுவனத்துடனான கூட்டு முயற்சியின் அடிப்படையிலேயே உருவாக்கியிருக்கின்றது.

மைலேஜில் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த மாருதி கார் மனசை கவர்ந்திழுக்குது... நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

இரு நிறுவனங்களும் கூட்டணியின் அடிப்படையில் அவரவர்களுக்கான கார்களைத் தயாரித்துக் கொண்டன. மாருதி சுஸுகிக்கு கிராண்டா விட்டாராவை போல், டொயோட்டா நிறுவனத்திற்கு அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி கார் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த காரும் கிராண்ட் விட்டாராவை போல் மைல்டு மற்றும் ஸ்ட்ராங் என இரு விதமான ஹைபிரிட் தொழில்நுட்ப தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2022, 11:05 [IST]
English summary
Here is full details about maruti suzuki grand vitara alpha trim
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+