ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் 2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் கிடைக்கும் கார்கள்... இதோ பட்டியல்!

ரூ. 10 லட்சம் விலையில் நான்கு மற்றும் ஆறு ஏர் பேக் அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் காணலாம்.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

வாகனங்களில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்களில் மிக முக்கியமான ஓர் அம்சமாக ஏர் பேக்குகள் இருக்கின்றன. இவை எதிர்பாராத விதமாக ஏற்படும் அசம்பாவித நிகழ்வுகளின் போது பல மடங்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. குறிப்பாக, தலை மற்றும் மார்பகங்களுக்கு அதிக பாதுகாப்பை இவை வழங்குகின்றன.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

எனவேதான் இதனை வாகன உற்பத்தியாளர்கள் ஆரம்ப நிலை வாகனங்களில்கூட தற்போது வழங்கத் தொடங்கியுள்ளன. மேலும், இந்திய அரசாங்கமும் எந்த விதமான வேரியண்ட் காரை தேர்வு செய்தாலும் அது ஆறு ஏர் பேக் வசதியை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

இந்த அறிவிப்பு மிக விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. அதாவது, அக்டோபர் 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அனைத்து கார் மாடல்களிலும் ஆறு ஏர் பேக்குகளுடன் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளி வருவதற்கு முன்னரில் இருந்தே இந்தியாவில் சில வாகன மாடல்கள் இரண்டுக்கும் மேற்பட்ட ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. அவை எந்த மாடல் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இரண்டிற்கும் அதிகமான ஏர் பேக்குடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

கியா சொனெட் (Kia Sonet)

அதிக ஏர் பேக்குகளுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் சொனெட்டும் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடலாகும். இந்த காரில் முன் பக்கத்தில் இரண்டு மற்றும் பக்கவாட்டு பகுதியில் இரண்டு என மொத்தமாக நான்கு ஏர் பேக்குகள் வழங்கப்படுகின்றன. எச்டிஇ எனப்படும் பேஸ் வேரியண்டிலேயே இத்தனை ஏர் பேக் அம்சங்கள் வழங்கப்படுவது ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கின்றது.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

கியா சொனெட் எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 7 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. சமீபத்தில்தான் தயாரிப்பு நிறுவனம் இந்த கார் மாடலில் நான்கு ஏர் பேக் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

இதைவிட அதிக பாதுகாப்பு அம்சம் கொண்ட தேர்வாக எச்டிகே-ப்ளஸ் இருக்கின்றது. இதில், ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தனை அம்சங்களுடன் ரூ. 10 லட்சம் என்ற விலையிலேயே சொனெட் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

ரெனால்ட் கைகர் (Renault Kiger)

இந்தியாவின் மலிவு விலை எஸ்யூவி ரக கார் மாடல்களில் கைகரும் ஒன்று. இந்த கார் மாடலின் ஆர்எக்ஸ்டி எனும் தேர்விலேயே நான்கு ஏர் பேக் வசதி வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 7.5 லட்சம் ஆகும். இது ஓர் நடு நிலை தேர்வாகும். ஆகையால், கூடுதலாக இன்னும் சில பாதுகாப்பு அம்சங்கள் இக்காரில் உள்ளன.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

ரியர் பார்க்கிங் கேமிரா, ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்கள் கைகர் ஆர்எக்ஸ்டி வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ளன. கைகர் ஓர் நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனம் என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

மாருதி பலேனோ (Maruti Baleno)

இந்தியாவில் இரண்டுக்கும் அதிகமான ஏர் பேக் அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் மாருதி சுஸுகி பலேனோவும் ஒன்று. இதன் ஜெட்டா வேரியண்டில் மாருதி நிறுவனம் ஆறு ஏர் பேக் வசதிகளை வழங்குகின்றது. இதன் விலை ரூ. 8.09 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

ஆறு ஏர் பேக் அம்சத்துடன் சேர்த்து 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, இஎஸ்பி தொழில்நுட்பத்துடன் கூடிய ஹில் ஹோல்டு அசிஸ்ட் (ஏஎம்டி தேர்வில் மட்டுமே இது காணப்படும்) மற்றும் ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர் உள்ளிட்ட அம்சங்கள் பலேனோவில் வழங்கப்பட்டுள்ளன.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

டொயோட்டா க்ளான்ஸா (Toyota Glanza)

மாருதி சுஸுகியின் பலேனோ காரையே டொயோட்டா நிறுவனம் அதன் பேட்ஜில் க்ளான்ஸா எனும் பெயரில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த கார் மாடலின் உயர் நிலை தேர்வான ஜி வேரியண்ட் ஆறு ஏர் பேக் அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 8.3 லட்சம் ஆகும்.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

இந்த ஜி வேரியண்டில் காணப்படும் சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் பலேனோ இதைக் காட்டிலும் 15 ஆயிரம் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. க்ளான்ஸா கார் மாடலில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளாக 360 டிகிரி கேமிரா மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் இஎஸ்பி உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படுகின்றன.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

கியா கேரன்ஸ் (Kia Carens)

தற்போது புக்கிங்கில் சக்கைப் போடுபோட்டுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் கியா கேரன்ஸும் ஒன்று. இது ஓர் எஸ்யூவி வாகனம் தோற்றம் கொண்ட எம்பிவி ரக கார் மாடலாகும். இந்த கார் மாடலின் பேஸ் வேரியண்டான ப்ரெஸ்டீஜ் ஆறு ஏர் பேக் அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

முன் பக்கம், பக்கவாட்டு பகுதி மற்றும் கர்டைன் ரக ஏர் பேக்குகள் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, வழக்கமான பாதுகாப்பு அம்சங்களாக இஎஸ்சி, டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டவுன்ஹில் பிரேக் கன்ட்ரோல் மற்றும் அனைத்து வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20)

ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் பிரீமியம் அம்சம் கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடலாக ஐ20 இருக்கின்றது. இதன் டாப் ஸ்பெக் தேர்வான ஆஸ்தா (ஓ)-வில் ஆறு ஏர் பேக் வசதிகளை நிறுவனம் வழங்குகின்றது. இதன் விலை ரூ. 9.5 லட்சம் ஆகும். கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இக்கார் மாடலில் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ரியர் வியூ மிர்ரர், தானியங்கி ஹெட்லேம்ப் மற்றும் ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

கியா செல்டோஸ் (Kia Seltos)

இந்தியாவில் மிக சிறப்பான விற்பனையைப் பெற்று வரும் எஸ்யூவி கார் மாடல்களில் கியா செல்டோஸும் ஒன்று. இந்த கார் மாடல் பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் பேஸ் ஸ்பெக் தேர்வான எச்டிஇ-யிலேயே நான்கு ஏர் பேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

2க்கும் அதிகமான ஏர் பேக்குகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்... மொத்தம் 7 கார் மாடல்கள் இந்தியால கிடைக்குது!

இது இந்தியாவில் ரூ. 10 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, April 9, 2022, 14:09 [IST]
English summary
Here is list car with more than 2 airbags
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+