இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

இந்தியாவில் மிக சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் தயாரிப்புகள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஹூண்டாய் நிறுவனமும் ஒன்று. ஆனால், கடந்த 2022 மே மாதத்தில் லேசாக இந்நிறுவனம் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. எப்போதும் நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வந்த இந்நிறுவனம், 2022 மே மாதத்தில் டாடா மோட்டார்ஸால் பின்னுக்கு தள்ளப்பட்டது.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

ஆமாங்க சொற்பளவிலான குறைவான விற்பனை புள்ளிகளால் நிறுவனம் 2022 மே மாதத்தில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்த (2022 மே) மாதத்தில் 42,293 யூனிட்டுகள் வரை விற்பனையாகின. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகளோ அதே மாதத்தில் 43,341 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

இதன் காரணத்தினாலேயே 2022 மே மாதத்தின் டாப் கார் உற்பத்தி நிறுவனங்களின் லிஸ்டில் ஹூண்டாய் மூன்றாவது இடத்திற்கும், டாடா மோட்டார்ஸ் இரண்டாவது இடத்திற்கும் சென்றிருக்கின்றன. அதேவேலையில், டாடா மோட்டார்ஸுக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாயின் தயாரிப்புகள் சில நாட்டு மக்கள் மத்தியில் மிக சிறப்பான வரேவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

குறிப்பாக, க்ரெட்டா, கிராண்ட் ஐ10 நியாஸ் மற்றும் வென்யூ ஆகிய மூன்று கார் மாடல்களும் சூப்பராக விற்பனையாகியிருக்கின்றன. இவற்றிற்கு கிடைத்திருக்கும் விற்பனை வரவேற்பு பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta)

எப்போதும் எஸ்யூவி கார் சேலில் டாப் பிளேசில் இருக்கும் காராக ஹூண்டாய் க்ரெட்டா இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 2022 மே மாதத்தில் 10,973 யூனிட்டுகள் க்ரெட்டா கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதே கார் மாடல் 2021 மே மாதத்தில் வெறும் 7,527 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

இதைக்காட்டிலும் நடப்பாண்டு மே மாதத்தில் பெற்றிருப்பது 46 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும். இத்தகைய சூப்பரான டிமாண்டை நாட்டு மக்கள் மத்தியில் க்ரெட்டா எஸ்யூவி நீண்ட நாட்களாக பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு கடந்த கால விற்பனை புள்ளி விபரங்களே சான்று.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

ஹூண்டாய் நிறுவனம் மிக சமீபத்திலேயே க்ரெட்டா என் எனும் புதுமுக வெர்ஷனை உலகளவில் வெளியீடு செய்தது. இந்திய சந்தையில் இக்கார் வெகு விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள க்ரெட்டா எஸ்யூவி ரூ. 10.44 லட்சம் தொடங்கி ரூ. 18.18 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios)

இந்தியர்களிடத்தில் மிக சிறப்பான விற்பனையைப் பெறும் மற்றுமொரு ஹூண்டாய் தயாரிப்பாக கிராண்ட் ஐ10 நியாஸ் இருக்கின்றது. இந்த கார் மாடல் 2022 மே மாதத்தில் ஒட்டுமொத்தமாக 9,138 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன. இதே கார் மடால் 2021 மே மாதத்தில் 3,804 என்கிற மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையாகியிருக்கின்றது. இது 140 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

நிறுவனம் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை அதிகப்படுத்தும் நோக்கில் கார்பரேட் எடிசன் எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுமட்டுமின்றி, அவ்வப்போத சிறப்பு சலுகைகளையும் அது அறிவித்தது. இதன் விளைவாகவே அசைக்க முடியாத சந்தையை கிராண்ட் ஐ10 நியாஸ் தற்போது இந்தியாவில் பெற்றிருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் இந்த கார் மாடலை ரூ. 5.39 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue)

ஹூண்டாய் நிறுவனம் மிக மிக சமீபத்திலேயே இதன் அப்பேட்டட் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 2019ம் ஆண்டின் அறிமுகத்திற்கு பின்னர் இப்போதே முதல் முறையாக இக்காரை புதுப்பித்து ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

வென்யூவிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதே நிறுவனத்தின் இந்த செயலுக்கு காரணமாக உள்ளது. ஆமாங்க, நிறுவனத்தின் சூப்பராக விற்பனையாகும் மூன்றாவது கார் மாடலாக வென்யூ இருக்கின்றது. இந்த கார் மாடல் 2022 மே மாதத்தில் 8,300 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றது.

இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் ஹூண்டாய் கார்கள் எது தெரியுமா? எப்பவுமே இந்த 3தான் ரொம்ப ஃபேமஸு!

அதுவே 2021 மே மாதத்தில் பார்த்தோமேயானால் அது வெறும் 4,840 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன. இதைக்காட்டிலும் 48 சதவீதம் அதிக விற்பனை வளர்ச்சியையே நடப்பாண்டு மே மாதத்தில் வென்யூ இந்தியாவில் பெற்றிருக்கின்றது. இந்த வரவேற்பு அடுத்தடுத்த மாதங்களிலும் அதிகரித்துக் காணப்படும் எனப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், இப்போதே புதுப்பிக்கப்பட்ட வென்யூ காருக்கு 15 ஆயிரம் புக்கிங் குவிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 22, 2022, 8:30 [IST]
English summary
Here is list hyundai s top three bestselling cars in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+