360 டிகிரி பார்க்கிங் கேமிராவுடன் கிடைக்கும் மலிவு விலை கார்கள்... இத்தன கார்கள் இருக்கா?
360 டிகிரி பார்வை திறன் கொண்ட பார்க்கிங் கேமிரா உடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே பார்க்கலாம்.

பார்க்கிங் செய்வதற்கு உதவும் வகையில் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராக்கள் கார்களில் வழங்கப்படுகின்றன. பார்க்கிங் செய்யும்போது ஏற்படும் தேவையில்லா கசப்பான அனுபவங்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்த அம்சம் கார்களில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் மிக உயரிய விலைக் கொண்ட கார்களில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டன.

அதாவது பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட சொகுசு கார்களிலேயே இந்த அம்சங்கள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது இந்த நிலை மாறியிருக்கின்றது. ஆம், அண்மைக் காலங்களாக விலைக் குறைவான கார்களிலும் இந்த அம்சம் வழங்கப்பட தொடங்கியிருக்கின்றன. அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, மலிவு விலையில் 360 டிகிரி பார்க்கிங் கேமிராவுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலையேக் கீழே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுசுகி பலேனோ (Maruti Suzuki Baleno)
குறைவான விலையில் 360 டிகிரி பார்க்கிங் கேமிரா வசதி உடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலில் நாம் முதலில் மாருதி பலேனோ காரையே பார்க்க இருக்கின்றோம். இந்த காரே மிக மிக குறைவான விலையில் இந்த அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தற்போது இந்தியாவில் ரூ. 6.35 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து பலேனோ விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆனால், 360 டிகிரி பார்க்கிங் கேமிரா வசதி பலேனோவின் உயர் நிலை வேரியண்டிலேயே வழங்கப்படுகின்றது. அதன் விலை ரூ. 8.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் பிரீமியம் தர காராகும். ஆகையால், இன்னும் பல சிறப்பு வசதிகள் இக்காரில் உள்ளன.

நிஸான் கிக்ஸ் (Nissan Kicks)
நிஸான் கிக்ஸ் காரிலும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட பார்க்கிங் கேமிரா வழங்கப்படுகின்றது. இந்த அம்சத்தை தாங்கியவாறு இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் மிட்-சைஸ் எஸ்யூவி காரே இதுதான் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. இதன் உயர் நிலை வேரியண்டான எக்ஸ்வி ப்ரீமியம் தேர்விலேயே 360 டிகிரி பார்க்கிங் கேமிரா வசதி வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 13.20 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

எம்ஜி அஸ்டர் (MG Astor)
எம்ஜி அஸ்டர் கார் மிக அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி காராக இந்திய சந்தையில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்காரில் 360 டிகிரி பார்க்கிங் கேமிரா வசதியும் உட்பட ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஷார்ப் மற்றும் சேவி ஆகிய இரு வேரியண்டுகளிலேயே இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 14.28 லட்சம் ஆகும். இதுவும், எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

கியா செல்டோஸ் (Kia Seltos)
கியா செல்டோஸ் ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மாடலிலும் உயர் நிலை வேரியண்டிலேயே 360 டிகிரி பார்க்கிங் கேமிரா வசதி வழங்கப்படுகின்றது. ஜிடிஎக்ஸ்-ப்ளஸ் எனும் வேரியண்டிலேயே அது வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 16.85 லட்சம் ஆகும். சிறப்பம்சங்கள் பல மடங்கு அதிகம் என்பதால் இக்காரின் விலையும் சற்று அதிகமாக இருக்கின்றது.

ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar)
ஹூண்டாய் அல்கஸார், க்ரெட்டா கார் மாடலின் பெரிய அண்ணனாக இருக்கின்றது. இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் பன்முக சிறப்பு வசதிகளை வாரி வழங்குகின்றது. இது அதிக அம்சங்களைக் கொண்ட கார் மாடல் மட்டுமல்ல மிக அதிக இட வசதி மற்றும் இருக்கைகளைக் கொண்ட காரும்கூட. ஆகையால், இந்த பட்டியலில் மிக அதிக விலைக் கொண்ட காராக இது காட்சியளிக்கின்றது.

ரூ. 18.29 லட்சம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் பிளாட்டினம் எம்டி வேரியண்டிலேயே ஹூண்டாய் நிறுவனம் 360 டிகிரி பார்க்கிங் கேமிராவை வழங்குகின்றது. இது காருக்குள் இருந்தபடியே 360 டிகிரியில் வெளிப்புறத்தைப் பார்க்க உதவும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications